Saturday, January 9, 2021

#கிராமத்து_பேச்சு_சில_பழக்க_வழக்கங்கள்

 1. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்ய வேண்டுமானால் உழுக்கு அல்லது ஆழாக்கு, நாழி, சிரட்டை, கரண்டி ஏதாவது ஒன்றில் அடுத்த வீட்டு அடுப்பில் எப்போதும் சூடாகிக் கொண்டிருக்கும். பால் சுடவைத்த அடுப்பில் தீக்கங்கை எடுத்து வந்து அடுப்புப் பற்ற வைப்பார்கள். இந்தத் தீக்கங்கு கோனார்கள் வீட்டில்தான் எப்பொழுதும் இருக்கும்..

2. ஆட்டுக் கறியைத் தேவைக்குப் போக மீதியை உப்பு, மஞ்சள், இந்த இரண்டையும் சேர்த்துத் தடவி கறித் துண்டில் நடுவில் துவாரம் போட்டு ஒரு கயிற்றில் கோர்த்து வெயிலில் நன்றாக காயவைத்து பின் ஒரு பழைய மண்பானையில் போட்டு வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது சமைத்து சாப்பிடுவார்கள். இதற்கு “உப்புக்கண்டம்” என்று பெயர்.
3. ஆடு மேய்ப்பவர்கள் மூங்கில் குழலில் சாப்பாடு கொண்டுபோய் மதிய உணவாக சாப்பிடுவார்கள் உணவு கெட்டுப்போகாது.
4. கிணறுகள் இல்லாத இடத்திற்கு உழவு உழச் செல்பவர்கள் மண் தோண்டியில், கம்மஞ் சோறு, தினை, குதிரை வாலி, சாமைச்சோறுகளை உருண்டையா உருட்டி நீர் ஆகாரத்தில் போட்டுக் கொண்டு செல்லுவார்கள். தண்ணீர் தாகம் ஏற்பட்ட நேரத்தில் தண்ணீரை குடிப்பார்கள். பின்பு மதிய வேளையில் இந்த சோற்று உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மீதி தண்ணீரையும் குடிப்பார்கள். இது வெயில் காலத்தில் உடம்பின் சூட்டைத் தணிக்கும்.
5. புளிச்சிக்கீரையை கடைந்து உணவுடன் சேர்த்து முன் காலத்தில் சாப்பிடுவார்கள். இது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்வராமல் தடுக்கும்.
6. ஒரு துக்க வீட்டில் உறவினர் இறந்தால் கண்ணீர்விட்டு அழும்போது அதிக கண்ணீர் வெளியேறும் இதை ஈடுகட்ட மறுநாள் இறந்தவரைப் புதைத்த இடத்தில் நாய், நரி தோண்டாமல் இருக்கக் குழி மெழுகுவார்கள். அப்பொழுது அகத்திக் கீரையை அவித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். இதனால் முதல்நாள் இழந்த கண்ணீர் இந்த அகத்திக் கீரை ஈடுகட்டுமாம்.
7. கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழாவில் சாமி ஆடுபவர்களுக்கு வீடு வீடாகத் தண்ணீரைத்து தலைவழியாக ஊற்றி நேர்த்திக் கடனை தீர்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஜலதோசம் ஏற்படாதவறு மறுநாள் காலையில் அம்மனுக்கு மஞ்சள் பானை பொங்கல் என்று வைப்பார்கள். அதில் மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைக்கும்போது முதல்நாள் சாமி ஆடியவர்கள் வேப்பிலையை மஞ்சள்பானையில் முக்கி எடுத்துத் தலையில் தெளித்து தெளித்து ஆடுவார்கள். இதனால் ஜலதோசம் பிடிக்காதாம்.
இப்பொழுதும் ஜலதோசம் பிடித்தால் மஞ்சள் பொடி கலந்து தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கி வைத்து கொண்டு ஒரு போர்வையை மூடிக் கொண்டு அந்த ஆவியை பிடித்தால் ஜலதோசம் நீங்கிவிடும்.
8. மாட்டுத்தாவணி அல்லது வெகுதூரக் கோவிலுக்கு செல்பவர்கள் நார்ப்பெட்டி அல்லது துணியில் சோற்றைக் கட்டி கொண்டு செல்லுவார்கள். இதற்கு கட்டுச் சோறு என்று பெயர். சோறு கெட்டுப்போகாது.
1. செவ்வாடு
2. ராயாடு
3. கரா ஆடு
4. கரா ராயாடு
5. கொப்பாடு(கொம்புள்ளது)
6. அரியாடு
7. சுட்டியாடு
8. கரிசல் மரையாடு
9. வெங்காலாடு
10. கோட்டை மரையாடு
11. கிடா(கொம்புயில்லாதது) மோழைக்கிடா என்பார்கள்.
ஆடுகளை ஒன்றாகச் சேர்த்து இரவில் போடுவதை “கிடை” என்பார்கள். பின்பு அவரவர் ஆட்டை மேய்ச்சலுக்குப் பத்தும்போது ஆட்டை ஒதுக்குவார்கள். அந்த இடத்திற்கு “பாங்கு” என்பார்கள். இரவில் அவரவர் ஆட்டைக் காப்பதை “பாங்கு முறை” என்பார்கள்.
1. கருத்தக்காளை
2. செவலைக்காளை
3. மயிலைக்காளை
4. புல்லக்காளை
5. செம்போர்க்காளை
1. அதிகாலை - 3.00 மணி தலைக்கோழி கூப்பிடும் நேரம்.
2. சூரிய உதயத்திற்கு முன் - பள,பள என விடியுர நேரம்.
3. 10 மணி - ஆடு எழுப்புகிற நேரம்.
4. 12 மணி - உச்சி நேரம்
5. 3 மணி - பெரும்பானை உலை வைக்கிற நேரம்.
6. 5 மணி - ஊர்மாடு வருகிற நேரம்.
7. 6 மணி - கருக்கல் நேரம்.
8. இரவு 10 மணி - ஊர் உறங்குகிற நேரம்.
9. இரவு 11 மணி - ஒருச்சாமம்.
10. இரவு 12 மணி - நடுச்சாமம் (அல்லது) நடுநிசி.
குருஞ்சாக்குளம் கரிசலும் சரி குருக்கள்பட்டி செவலும் சரி.
1. மருக்காலங்குளம் - மாடப்பத்தேவர்
2. கலங்கல் - சின்னசாமி கோனார்.
3. கழிநீர்க்குளம் - செல்லையாத் தேவர்.
4. புளியம்பட்டி - மாடசாமித் தேவர்.
5. குப்புணாபுரம் - சீனித்தேவர்.
6. குருக்கள்பட்டி - பொலத்துராமத்தேவர்.
1. சிப்பிப்பாரை -கந்தசாமி நாயக்கர் சீறும் புலிக்குட்டியை பிடித்தவர்.
2. மீன்துள்ளி - கோடாரி பொன்னையார் கோனார்
மான் துள்ளுவதுபோன்று துள்ளி எதிரிகளை மடக்கி அடிப்பார்.
3. கல் எரிவதில் வில்லாளிகளையும் மடக்கி எரிவார்கள்
மீன்துள்ளி காளைக் கோனார் ஆவுடையார்புரம் எட்டையார்கோனார்.
1. நெல்லை மாவட்டத்தில் இரண்டு பாதைகள் அல்லது
ரோடு சந்திக்கும் இடத்தை விலக்குரோடு, விலக்குப்பாதை என்பார்கள்.
2. கோவை மாவட்டத்தில் குச்சை என்பார்கள்.
3. விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுரோடு அல்லது கூட்டுப்பாதை என்பார்கள்.
ஒரு வீட்டில் விவசாயம் பார்ப்பவரை சம்சாரி என்றும், ஆடுமேய்ப்பவரை ஆட்டுக்காரர் என்றும், குட்டி வியாபாரம் செய்பவரை குட்டி வியாபாரி என்றும், அந்த வீட்டில் படித்தவரைப் பள்ளிக்குடத்தான் என்றும் அழைப்பார்கள். மாடுகள் விற்கும் இடத்தை மாட்டுத்தாவணி
1. கழுகுமலை - தைப்பூசம், பங்குனி உத்திரம்
2. திருச்செந்தூர் - மாசிமகம்,
3. சீவலப்பேரி - சித்திரை மாதம்.
4. முத்துலாபுரம் கன்னிசேரி - பங்குனி உத்திரம்
5. சங்கரன்கோவில் - ஆடித்தபசு
6. வாரம்தோறும் சனிக்கிழமை - பாம்பு கோவில் சந்தை
மாட்டில் பெரியமாடு - கோம்பை மாடு.
1. கத்தரிக்காய் கூட்டு கழுகுமலை ரோட்டுஅய்யாபுரம் ஏட்டு அவளைப்பிடித்து மாம்ரு.
2. கோயிலாங்குளத்துப்பிள்ளை
கொலுசு போட்ட வண்ணாப்பிள்ளைநான் போட்ட சிட்டுத்துண்டைநயமாய் வெளுத்துவாடி
3. சில்லிகுளத்துத்தேவா
சீரனிஞ்சமுத்துத் தேவா
பெட்டியை எடுக்கப்போய்
உன்பிட்டிதான் தெரிச்சுப்போச்சே
4. கொலை கொண்ட பாதகன்
தென்மலைகாரன்
தலைகொண்டு போகிறான்
தளவாய் புலிச்சிங்கமே
5. புகுந்து குத்தும் பொன்னுச்சாமி
புலியைக்குத்து நடுவைப்பட்டி
இராமச்சந்திரன்செம்பு மேலே செம்பு வைத்து சிவகாசிபட்டிணத்தை செந்தூர் படிக்க வைத்தான்.
6. பார்க்க பகட்டான குருக்கள்பட்டியில்
பெருங்கடையாய்இருந்ததுவெறுங்கடையாய் ஆகுமாம்வெளியப்பனே.
1. கிடைக்காதது கிடைச்சுப் போச்சு
கீழத் தெரு நமக்காச்சு.
2. ஆறு பெருகினாலும் நாய் நக்கித்தான்
குடிக்கணும்.
3. பேயாத்தாள் ஆனாலும் பெத்த
ஆத்தா பெத்த ஆத்தாதான்.
4. எள்ளு எண்ணெய்க்குக் காயுது
எலிபுளுக்கையும் ஒண்ணாக் காயுது.
5. ஆடு கிடப்பது ஆவுடையாபுரம்
புழுக்கை போடுவது பொம்மையாபுரம்.
6. வடக்குப் பார்த்த மாளிகையை விட
தெற்கு பார்த்த ஓலை வீடு மேல்.
7. வாயிலே சர்க்கரை
கையிலே கருணைக்கிழங்கு.
8. தாயைக் தண்ணீக்கரையிலே பார்த்தால்
மகளை வீட்டில் பார்க்க வேண்டாம்.
9. மானூறுக் குளத்திற்கு
நானூறு மடை.
10. தாசனை அடித்து ஆண்டிக்குக்
கொடுத்தது போல.
11. கொடுத்தாலும் கொடுக்கவிடமாட்டான், கொச்சுராமு
வாங்கினாலும் வாங்கவிடமாட்டான், வல்ராமு.
12. வாழ்ந்து கெட்டவன் வடக்கே போ
கெட்டு நொந்தவன் கிழக்கே போ.
13. சாத்திரம் பொய்யானால்
சமனத்தைப் பார்.
14. நன்செயைப் பார்த்து கெட்டான்
புன்செயைப் பாராமல் கெட்டான்.
15. கார்த்திகைபிறை கண்டகாராளா
கை நாற்றைப்போட்டுக் கரை ஏறு.
16. கறிவேப்பிலை வித்தாலும்
கிரகலட்சணம் வேணும்.
17. ஆலமரம் அரசமரம் அரசு
ஆண்டார் வைத்த மரம்.
18. புங்க மரம், புளியமரம், புண்ணியவான்
வச்ச மரம்.
18. ஊருக்கு உபதேசம்.
19. வீட்டிற்குள் திருடிய கோழி.
20. மோர்க்கடன் முகட்டை முட்டும்.
21. மூக்குப் போன கழுதை
தூவாளத்துக்கு அஞ்சாது.
22. நடு வடக்கே மின்னினால்
நாளையே மழை வரும்.
23. காலை உப்பாங் காத்து
மாலைத் தென்றல்.
24. மலடி அறிவாளா
மத்தவ பிள்ளையை
25. கயத்தார்த்துக் கடவுல் காற்று
கடன் வாங்க அடிச்சுச்சாம்.
26. சித்திரை உழ பத்த மாத்துத் தங்கம்.
27. வலிய வந்தவள் கிழவி.
28. காணிக் காக்கா கரையிலே நிக்கிது
வந்தட்டிக் காக்கா வரப்பிலே நிக்கிது.
29. வந்தவன் வலுத்தான்
இருந்தவன் இளைச்சான்.
30. பாரிக்கு மிஞ்சின கொடையும் இல்லை
மாரிக்கு மிஞ்சின செழிப்பும் இல்லை.
31. இரவல் கொடுத்தவள்
இருந்து அழவிடமாட்டாள்.
32. பகிர்ந்து தின்னால் பசி ஆரும்
புரட்டாசி மாதத்தில் வரட்டு ஆடு
புழுக்கை போடாது
அரிசி ஆழக்கு ஆனாலும்
அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
33. வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்.
34. யார் தொட்டாத் தேர் ஓடும்
சங்கர் பட்டர் தொட்டால் தேரோடும்.
35. தொட்டத் துலங்கும்
தோட்டம் வச்சாக் காய்க்கும்.
36. பாட்டம் நிறைஞ்சா
வாட்டம் இல்லை.
37. விரிசோலையைக் கண்டு
குருத்தோலை சிரிச்சுசாம்.
38. தொட்டியப் பேயி தொட்டாலும் விடாது.
39. கொக்கு குறிப்பறியும்
காக்கை டொப்பறியும்
40. ஆளு இருக்க சீரைப்பார்த்து
கிடைக்கு ரெண்டு ஆடு கேட்டதாம் நரி.
41. நொண்டிக் குதிரைக்குச் சருக்குண்ணதாம்சாக்கு
ஒன்றுதான்.
ஆடத் தெரியாதவளுக்கு
தெருக்கோணலாம்
குட்டித்த ஆட்டோட
விடுதலை ஆடும் கத்திச்சாம்.
42. பந்திக்கு முந்துவான்
படைக்கு பிந்துவான்.
43. நெல்லுக்குப் புல்
நேரான கம்மபுல்
44. நாய் வித்த காசு குறைக்காது.
45. கழுதை கனாக் கட்டதாம்
கந்தலும் பித்தலும்.
46. கசாப்புக் கடைக்காரன்
காருண்ணியம் பேசியது போல.
47. தாய்ப் பொன்னிலும்
மாப்பொன் எடுப்பான்.
48. ஒழக்குக்குள்
கிழக்கும் மேற்கும்.
49. இருட்டுக்கு இருளப்பன்
வெளிச்சத்திற்கு வெளியப்பன்.
50. இழந்தவனுக்கு எள்ளு
வலுத்தவனுக்கு வாழை.
51. வாழை வாழ வைத்தாலும் வைக்கும்
தாழ வைத்தாலும் வைக்கும்.
52. கீரை வித்தாலும் கிரகம் வேண்டும்.
53. பசுவில் கோழையும் இல்லை
பார்ப்பானில் ஏழையும் இல்லை.
54. பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்தில்
ஏறித்தான் தீர வேண்டும்.
55. செக்களவு பொன்னிருந்தாலும்
செதுக்கித்தின்னா இராது.
56. யோக்கியன் வாரான் செம்பைத்
தூக்கி உள்ளே வை.
57. வெந்ததைத் தின்னா
விதி வந்தா சாவான்.
58. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை
வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.
59. விருந்தும் மருந்தும் மூனு வேலை.
60. நாரவாயில் இருந்தாலும்
நச்சு வாயில் இருக்கக் கூடாது.
61. மூன்றாவது பெண் பிறந்தால்
முற்றம் எல்லாம் பொன்னாம்
தேவதானத்திலே தேரோட்டமாம்
திரும்பிப்பார்த்தால் நாயோட்டமாம்.
62. கள்ளாட்டுக் கறிக்கு கார் நெல்
பர்க்கை வேறா.
63. எட்டு மிளகு இருந்தால் எமன்
அண்டாமாட்டான்.
64. கிழுட்டுக்கூத்தாடி பங்கிற்கு
லாந்தனது போல.
65. ஏழையும் கோழையும் எதிர்த்து
மின்னிலால் இரவே வருமாம் மழை.
66. ஆடிப்பொறை தேடிப்பிடி.
67. ஐந்தாறு பெண் பிறந்தால்
ஆண்டியும் போண்டியாவான்.
68. சுற்றிக் குடியிருக்கும் சின்ன
பையல் சாவாசம்.
69. எலிக்கு என்ன வேலை
மண் தோண்டு வேலை
70. சுண்டெலிக்குத்தக்க
கன்னிக்குடம்
71. ஆண்டிக்கும் உண்டு இன உணர்வு
72. பிச்சை சோத்திலேயும்
குழைஞ்ச சோறா
73. அப்பனுக்கு பிள்ளை தப்பாமல்
பிறந்திருக்கு
74. சொர்க்கத்திற்குப் போயும் ராட்டிணத்தைக் கையிலே
கொண்டுபோன கதை
அட்டையைப் பிடித்துக் கட்டிலில்
போட்டாலும் கிடக்காது.
75. தவளை தண்ணிக்கு இழுக்க
கரட்டாண் வெட்டைக்கு இழுத்துச்சாம்.
76. குருவி உட்காரப் பனம் பழம்
விழுந்த கதையாம்.
77. தலைமுடி இருந்தால் எப்படியும் முடியலாம்.
78. ஆளு இருக்கிற சீறைக்கண்டு
ஆவரையும் மலம் வாரிச்சாம்.
79. கள்ளன் பெரிசா கப்பான் பெரிசா.
80. ஆக்கங்கெட்ட கோவிலுக்கு
அருக்கெட்ட பூசாரி.
81. பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன்
தள்ளமாடினானாம்.
82. செவிடி செம்படுத்தால் என்றால்
கெட்டிக்குடுத்தால் நானா மாட்டமெங்க
வயதிற்கு மூத்தவளைக் கட்டியது போல.
83. கண்களை பகைத்தவன்
காலை இழந்தான்.
84. கோவில்பட்டி கணக்காப் பிள்ளை
இருந்தும் கெடுத்தான் செத்தும் கெடுத்தான்.
85. கணக்கன் பொண்டாட்டி இறந்தால்
வருவார் கோடி போவார் கோடி
கோடி நிழல் குடியைக் கெடுக்கும்.
86. ஆடு தப்ப விட்டவனுக்கு
செடி எல்லாம் கண்.
87. குடிப்பது கூழத்தண்ணி கொப்பிழிப்பது
பன்னீரா
88. தனக்கு எளியது சம்பந்தம்.
89. உள்ளூர் பச்சலை மருந்துக்கு உதவாது.
90. உழுவுத நாளில் ஊர் சுற்றிவிட்டு
அறுக்க நாளில் ஆள்பார்ப்பதுபோல
91. தாய் தவுட்டுக்கு அழுகும்போது
பிள்ளை பாலுக்கு அழுததாம்.
92. காலாட்டி வீட்டில் வாலாட்டி
தங்காது.
93. கொச்சியிலே குருணிவித்தால்
அங்கேயே போவார்கள்.
94. மாவைத் தின்னாலும் ஒன்றுதான்
பண்ணியாரத்தைத் தின்னாலும் ஒன்றுதான்.
95. யானைக்காரனிடம் சுண்ணாம்பு
கேட்டதுபோல.
96. சேத்துரோகன் வழக்கு சேரவிடாது.
97. விளக்கு மாத்திற்கு குஞ்சரம்
எதற்கு.
98. ஊர்ப்பணத்தை வெட்டியான் சுமந்தது
போல.
99. எண்ணைக்குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட
தண்ணீர் குடம் போட்டவனும்
ஆத்தாட அப்பாட.
100. கால் ஒடுஞ்ச கோழிக்கு உரல்
கட தஞ்சம்.
101. மழைபேஞ்ச இடத்திலே பேயும்
ஆடு மேஞ்ச இடத்திலே மேயும்.
102. நாம் உள் வழி வந்தால்
இவன் பிறவா வழி வருவான்
(நான் உள்வாசலில் வந்தால் இவன்
புறக்கடைவாசல் வழி வருவான்)
103. மின்னல் ஒருபக்கம் மின்ன இடி ஒரு பக்கம்
விழுந்ததுபோல.
104. ஆடுகொடுத்தவனுக்கு உப்புக் கண்டம்
கொடுக்க வருத்தமா
105. இருக்க இடம் கொடுத்தால்
படுக்க இடம் கேட்பதா.
106. தண்டட்டிக்காரி தலையை
அசைத்துப்பேசுவா.
107. மிச்சத்தைக் கொண்டு மேற்கே
போகாதே.
108. தட்டான் பறந்தால் தட்டாம
மழை வரும்.
109. பங்காளி வீடு தீப்பிடிக்கும்போது
காலைக் கட்டி அழுதானாம்.
110. தனக்குப்போக தானம்
நாசியால் போர சீவனைக்
111. கோடாரி கொண்டு வெட்டியது போல.
112. பொண்டாட்டிட்ட கோபிச்சுகிட்டு
புடக்காளியை வெட்டினானாம்.
113. நாய் குறைச்சா விடியுது.
114. கரிசல்காட்டுக் கோழிக்கு
நெல் கொத்தத் தெரியாது.
115. ஊர்நாட்டாண்மைக்குத்தால்
கழிதல் கணக்கு.
116. அம்மி மிதக்குது ஆல இலை முங்கிது.
117. தலக்காவரி தெரியாதவன் எல்லாம்
வியாபாரி.
118. ஆத்திநார்மணக்க ஆண்டாங் கோனார் பகையானார்.
119. சக்தி சிரிதானாலும் முக்கி பெரியது.
120. நல்லவனுக்கு மூன்றுபாதை
வம்பனுக்கு ஒரு பாதை.
121. பட்டபட்ட பாட்டை எல்லாம்
பானையில் போட்டுவிட்டு
பூம்வாளை நெல் குத்திப் பொங்கல்
வைக்கப் போனாளாம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-12-2020.
Image may contain: tree, outdoor and nature

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...