Friday, January 22, 2021

 எனக்கென்று பல பலங்கள் , அன்பு மற்றும் கடமை ரீதியாக சில பலவீனங்கள் உண்டு. நானும் மனிதன் தானே?

எனது முதுகில் குத்தியவர்களை, நான் வெறுத்ததில்லை! எவ்வளவு நன்றி தெரிவிக்க இவர்கள் எனக்கு கடமைப்பட்டிருக்கிறார்கள். எனினும் என்னை இகழ்கிறார்களே?
விமர்சனங்கள் வரவேற்கத் தகுந்தவை! ஆனால் அவைகளில் வேகம் கூடாது; விவேகம் தேவை! வெப்பங்கள் கூடாது; விளக்கங்கள் தேவை!
சுத்த தங்கத்தை சுடுநெருப்பு என்ன செய்துவிட முடியும்? கேட்பதற்குரிய தகுதி படைத்தவர்கள் இந்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே பயணம் தொடரலாம்.!
மூட்டிவிட்டு, எரியும் அந்த பெரு நெருப்பில் குளிர்காய விரும்பும் நரிகள் விஷயத்தில் விழிப்புணர்ச்சியோடு இருக்க வேண்டும்!


நல்லெண்ணம் கொண்டவர்களின் இணைந்த பணிகள்தான் பலனைத் தரும்!
மலர் - என்னதான் மணம் பரப்பினாலும் அது மாலையை உருவாக்கிட முடியாது!
கூட்டு முயற்சி, செயல் இவைகளே கொள்கை ஈடேற்றத்தின் முக்கியங்கள்!
போர்ச்சூழலில் அவன் நம்பிக்கையில்லாதவன். விமரிசன ஓடமேறி விரைந்து செல்வதில் வல்லவன். பொறாமைகளுக்கு அப்பாற்பட்டவன்!
பொருமைகளைகளின் எல்லைகளைத் தெரிந்து கொண்டவன்!
தேவைப்பட்டால் தானே தெரிந்து கொள்ளவோ, வாங்கவோ முடியும். தேவையில்லாத ஒன்றே வாங்க சொல்லியோ, தெரிந்து கொள்ள சொல்லியோ நச்சரிப்பது நல்லதல்ல.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...