Sunday, January 24, 2021


———————————————————-
1960-70களில் சென்னை அண்ணாசாலையில் எல்சன்ஸ்(Elsons), இந்திய சில்க் ஹவுஸ்(India Silk House), செலராம்ஸ் ( Chellarams ) போன்ற ஆடை,துணி கடைகள் பிரபலமானது. இதில் எல்சன்ஸ் கடை, கற்கள் மற்றும் சிவப்பான செங்கற்களால் கட்டப்பட்ட தனித்துவமான கட்டிடமாக இருக்கும். மெயில் ஆபிஸூக்கு தென் புறம் இருக்கும். கல்லூரி நாட்களில் இந்த கடையில் துணிகள் எடுத்து, அந்த கடையிலுள்ள தையல்காரரிடம் சட்டை பேண்ட்களை தைத்து வாங்குவது வாடிக்கை. இன்றைக்கு அந்த கடை மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடையாக மாறிவிட்டது.
அதுபோலவே Ritchie Street பகுதியிலும் மென்பொருள் கடைகள் இப்போது அதிகமாக வந்துவிட்டன. Ritchie Street பகுதியில்தான் ஒரு காலத்தில் பெரியார் தங்கியிருந்தார். கர்நாடக முதல்வரக இருந்த என் மீது அன்பு காட்டிய தேவராஜ் அர்ஸ் அவர்களை முதன் முதலாக இந்த Ritchie Street பகுதியில்தான் சந்தித்தேன். அன்றிலிருந்து அவரோடு நெருக்கமும், அவர் என்மீது காட்டிய அன்பையும், பாசத்தையும் மறக்கவே முடியாது.

திரும்பவும் சொல்ல வேண்டிய விஷயத்திற்கு வருகிறேன். எல்சன்ஸில் ஆடைகள் வாங்குவது ஒரு விருப்பம் என்பதை தாண்டி அங்கே தைக்கும் சட்டையின் காலாரில் உள்ள ஸ்டிக்கரை பார்த்து சக சட்ட கல்லூரி சக மாணவர்கள் எல்சன்ஸா என்று கேட்பார்கள். சென்னையில் சிந்தி சமூகத்தை சேர்ந்த வியாபாரிகள், வணிகர்கள், அண்ணாசாலையில் இந்த கடைகளை அப்போது நடத்தியது உண்டு.
இந்திய சில்க் ஹவுஸிலும், ஜிப்பா போன்ற உடைகளை ஆர்வமாக நானும் எனது நண்பர்களும், வாங்குவது வாடிக்கை. அதுபோல செலராமும் ஒரு முக்கிய கடையாக திகழ்ந்தது. அப்போது பெல் பாட்டம்ஸ், ப்ளூ கலர் ஜூன்ஸ் போன்றவை விற்பனைக்கு வந்த காலம்.
The Sindhis may be a small community in Madras but its contribution is big; more in the retail business that catered to our city, more in the decades gone by.
On Mount Road,shopping had to be either at Chellarams, or at India Silk House or at Elsons.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2020.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...