Saturday, January 30, 2021


———————————————————
இன்று எம்ஜிஆர் நினைவு நாள்
எம்ஜிஆர் 1977 முதவரானபோது எங்கள் பகுதிகள் வறட்சியால பாதிக்கப்பட்டிருந்தது. அதை குறித்து முதல்வரை எம்ஜிஆரை சந்திக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரகளான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரான சோ.அழகிரிசாமியும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாம் திரு எம். கல்யானசுந்தமும் எம்ஜிஆர் அவர்கள் மதுரை வந்தபோது அவர் தங்கியிருந்த அரசினர் விருந்தனர் மாளிகையில் (சர்க்யூட் ஹவுஸ்) சந்திக்க சென்றபோதுதான் எனக்கு அறிமுகம். அதற்கு முன் பத்திரிக்கையாளர் சோலையுடன் எம்ஜிஆரை சந்தித்துள்ளேன். அப்போது நான் நெடுமாறனுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.

நாங்கள் மதுரையில் சந்திக்கும் போது மதுரையிலிருந்து சென்னைக்கு புறப்படும் நேரம். எம்ஜிஆர் –யுடைய பொருட்களை அவருடைய உதவியாளர் பேக் செய்துகொண்டிருந்தார் அப்போது அதை நான் ஆர்வமாக கவனித்தேன். அவர் பயன்படுத்திய மூன்று பொருட்கள் அவர் முகதிற்கு போடுகின்ற சாண்டல் பவுடர், சார்லி வாசனை திரவியம், மைசூர்சாண்டல் சோப். நான் நினைத்தை விட பிரம்மாண்டமான பொருட்கள் அப்படி ஒன்று அங்கு இல்லை.
பின்னாட்களில் விடுதலைப்புலி தலைவர் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் எம்ஜிஆர் அவர்களை சந்தித்தது, வீட்டில் விருந்து உண்டது எம்ஜிஆர் வழங்கிய கோடிக்கானப் பணத்தை விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்டபோது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணத்தை எடுத்துக்கொண்டு பேபிசுப்ரமணியத்தோடு இருந்ததெல்லாம் எம்ஜிஆர்-ன் நினைவு வந்து செல்கிறது.

கடந்த 1980நாடாளுமன்றம் தேர்தலின்போது காங்கிரஸ் நெடுமாறன் தலைமையில் நாங்கள் வெளியேறியபோது சிவகாசி நாடாளுமன்ற தொகுதியில் என்னை போட்டியிடவேண்டுமென்று எம்ஜிஆர் விரும்பியதுண்டு. எனக்கு அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி போட்டியிடுவது, சட்டமன்ற தேர்தல் என்றால் பரவாயில்லை என்று அச்சத்தின் காரணமாக நான் மறுத்தபோது எம்ஜிஆர் கோபப்பட்டதுண்டு. அந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகாசி கோபிசெட்டிபாளையத்தில் மட்டுமே அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. பின்னாட்களில் சிவகாசியில் போட்டியிட்டிருக்கலாமே என்று எம்ஜிஆர் என்னிடம் கூறியது எல்லாம் கடந்தகால நினைவுகள். அக்காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் எம்ஜிஆர் எனக்கு வீடும் ஒதுக்கீடு செய்துகொடுத்தார்.
எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள்
1. பேரறிஞர் அண்ணாவுடன் எம்ஜிஆர்
2. கலைஞர் - எம்ஜிஆர்.
கே.எஸ். இராதா கிருஷ்ணன்
24-12-2020

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...