Sunday, January 24, 2021


காமராஜர் ஆட்சி,கலைஞர் ஆட்சி ,எம்.ஜி.ஆர் ஆட்சி என்று சொல்கின்றோம். பேசுகின்றோம். மகிழ்ச்சிதான். நல்ல தலைவர்கள் தான். ஆனால், நாட்டு விடுதலைக்குப் பின், அவசியமான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்த ஓமந்தூரார் ஆட்சியையோ, குமாரசாமி ராஜா ஆட்சியையோ, ராஜாஜி ஆட்சியையோ, பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியைப் பற்றி யாரும் சிலாகிப்பதில்லை. அது ஒருபுறம் இருந்தாலும் இவர்களெல்லாம் தமிழகத்தை வழிநடத்திய தலைவர்கள்.
இன்றைக்குள்ள தேவை எல்லாம் நேர்மையான வெளிப்படையான மக்கள் நல ஆட்சியாக அமைவதுதான் சாலச்சிறந்தது என்ற புரிதல் அனைவருக்கும் வரவேண்டும். மேலே குறிப்பிட்டத் தலைவர்களுடைய ஆட்சிகள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு நன்றாகவே நடந்தது. இன்று அவர் ஆட்சி இவர் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிற லாஜிக் என்பது இன்றைக்கு உள்ள நிலைகளில் எப்படியானது என்று புரியவில்லை.

காலங்களும், சூழல்களும், தேவைகளும், சமுதாய மாற்றங்களுக்கேற்றவாறு நல் ஆட்சிகள் அமைய வேண்டும். கடந்த கால இவர்களின் ஆட்சி காலங்களில் நன்மைகளும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களும் இருந்தன. அதைபோல இவர்களுக்கு எதிரான போராட்டக் களங்கள் அமைந்ததை மறுக்க முடியாது. இந்த தலைவர்களை நினைவுக் கூறுவோம். அவர்களின் புகழை வணங்குவோம் என்பதை மனதில் கொண்டு, இன்றைக்குள்ள தேவை நிலைக்கான ஆட்சிகள் அமைய வேண்டும் என்பதுதான், குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு இறுதி இலக்கு அரசியல் அதிகாரத்தைக் எப்படியும் எந்த வகைலாவது கைப்பற்றுவது.
இதற்க்கு பத்திரிகைகள்,ஊடகங்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை செய்கின்றன. இணைய தள சமூக ஊடகங்கள் இதையே ஓட்டிக் கொண்டிருக்கின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
21-12-2020.

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...