Sunday, January 24, 2021


———————————————————-
சமீபத்தில் ஈழ நண்பர் நடேசன் ஆஸ்திரேலியாவிலிருந்து "Heroes: Saviors, Traitors, and Supermen: A History of Hero Worship" என்ற அரிய நூலை எனக்கு அனுப்பியிருந்தார். அக்கிலஸ், போன்ற ஆளுமைகளை புகழ்ந்து வணங்கலாம் என்றும், புகழ்ச்சி அரசியல், தனி மனித துதி எப்படி ஏற்பட்டது என்பதெல்லாம், இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்திரா காந்தி காலத்தில், அரசியலில் ஜெயபிரகாஷ் நாராயணன், Personlaity Cult, Hero Worship என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியபோது, பத்திரிகைகளில் இது குறித்தான விவாதங்கள் அப்போது நடந்தன.
அரசியலில் நேர்மையாக செயல்படுவதை விட துதிப்பாடி முன்னுக்கு வருவதுதான் இன்றைய நிலை. இதில் கண்ணுக்கு தெரிந்த அடிமைகளும், இருக்கின்றார்கள். கண்ணுக்கு தெரியாத அடிமைகளும் பொது வாழ்வில் இருக்கின்றார்கள். சுயமரியாதையை விட பதவிகள்தான் முக்கியம். அசோக சின்னம் கொண்ட லெட்டர் பேட், காரில் சிவப்பு விளக்கு, தேசியக்கொடி போன்றவற்றிற்காக எந்த நிலைக்கும் சென்று தாழ்ந்து, சரணாகதி என்ற நிலைக்கு தள்ளிவிடுகிறது இந்த பதவி மோகம்.


Personlaity Cult, Hero Worship போன்றவை அரசியலின் தூய்மையையும், நேர்மையையும், சேதப்படுத்துகிறது. இப்படிப்பட்ட Personlaity Cult, Hero Worship எப்படி வந்தது என்பதை பற்றி இந்த நூல் அற்புதமாக சொல்கின்றது. ஒரு மனிதன் எப்படியெல்லாம், வளைந்து, குலைந்து, குனிந்து கும்பிடு போட்டு, தகுதிக்கு மேலாக, பாசாங்குதனமான போலி புகழாரங்களை சூட்டி, பதவிகளை பெற்றுவிடலாம் என்ற நிலைக்கு யார் காரணம்?. இது நல்ல அணுகுமுறைதானா?, இதற்கும் ஒரு எல்லைகள் இல்லையா?, இதற்கு எப்போதுதான் முடிவு வரும். சிறையில் இருக்க வேண்டியவர்கள், நாடாளுமன்றத்திற்குள் மாண்புமிகு என்ற அடைமொழியோடு உள்ளே நுழைகின்றனர். இப்படியெல்லாம், சமூகத்துக்கு விரோதமானவர்கள் உயர்ந்த இடத்திற்கு செல்ல Personlaity Cult, Hero Worship தான் அவர்களுக்கு ஏணிகளாகவும், படிகற்களாகவும் இருக்கின்றன. லஞ்ச லாவண்யம், நேர்மையற்ற போக்கு, குற்றவாளிகள் தேர்தலில் நின்று வெற்றி பெறுவது போன்றவற்றை போலதான் Personlaity Cult, Hero Worship தகுதிக்கு மேல் ஒருவரை புகழ்வதும், தூக்கி பிடிப்பதும், காட்சி பிழைகள் மட்டுமல்ல, சமுதாயக் குற்றமும் கூட. It is a Sin.
KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
23-12-2020.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...