#நான்கு_பேர்_கூடியிருக்கும்_இடத்தில்_சண்டை_போடுவதில்_மண்ட்டோ_மிகவும்_திறமை_வாய்ந்தவன். அதில் இருக்கும் அவனின் திறமை, பொதுவாக சொல்லும் உவமையில் சொல்வதென்றால் ‘ஜாட்’ முறையில் சண்டை போடுவது போல் இருக்காது. அதற்கு நேர்மாறாக மிகவும் புத்திசாலித்தனமாகக் காய்களை நகர்த்தி சண்டை போடுவான். பழக்கப்பட்ட பாதைகளில் நடப்பதை நிராகரிப்பவர்களில் அவனும் ஒருவன். அதனால் எப்போதும் கயிற்றின் மேல் நடப்பதையே
விரும்பினான். எந்த நொடியும் அவன் கீழே விழுந்து விடுவான் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதுவரை அந்த வெட்கம் கெட்டவன் ஒருமுறை கூட கீழே விழவில்லை. ஒருநாள் குப்புற விழுந்து அதற்குப் பிறகு எழுந்து கொள்ள முடியாமல் போகவும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், அவன் சாகப்போகும் அந்தக் கடைசி நேரத்தில் கூட கீழே விழுந்தது அதன் சுகத்தை அனுபவிக்கத்தான் என்று தான் சொல்லுவான் என்று எனக்குத் தெரியும்!
22-12-2020.
No comments:
Post a Comment