Tuesday, May 13, 2025

மாநில சுயாட்சி நாயகரா ஸ்டாலின்....?

 #மாநில சுயாட்சி நாயகரா ஸ்டாலின்....?

______
#மாநில சுயாட்சி நாயகர் ஸ்டாலினுக்கு மகத்தான பாராட்டு" என்று அறிவாலய நிலைய வித்வான்களை வைத்து இன்று நேரு விளையாட்டு அரங்கில் கச்சேரி நடத்தப்பட்டது.
#அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து சொல்லப்பட்டு வருகிற, மாநில சுயாட்சிக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்துவிட்டு...மாநில சுயாட்சிக்கான உரிமைகளில் ஒன்று கூட இனி பாக்கி இல்லை என்ற நிலையில் மேற்சொன்ன கச்சேரி நடத்தினால் பரவாயில்லை.
#ஒரு உதாரணத்திற்கு.....
#ஒரு மாநிலத்தை ஒட்டி அதன் ஆட்சிப் பகுதியான கடலின் கீழே உள்ள நிலங்கள், கனிம வளங்கள், விலை மதிப்புள்ள பிற பொருள்கள் யாவும் அந்த மாநிலத்திற்கே சொந்தம் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பது மாநில சுயாட்சி கோரிக்கையில் ஒன்று.
#அதை பெற்றுக் கொடுத்துவிட்டாரா ஸ்டாலின்....?
#சென்ற வாரத்தில்.........தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மற்றும் சென்னையில் நான்கு கடல்சார் தொகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
#மேற்கண்ட சுயாட்சி கோரிக்கையை ஸ்டாலின் வாங்கிக் கொடுத்திருந்தால் எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் வருகிற லாபம் அனைத்தும் தமிழ்நாடு அரசிற்கே கிடைத்திருக்குமே.
#ஆக...."ஸ்டாலினுடைய மொழி"-யிலேயே சொல்வதானால்...........“பேரு பெத்த பேரு....... தாக நீலு லேது

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...