Saturday, May 3, 2025

#ஆம்! #நான்தனிமனிதான்.

 #ஆம்! #நான்தனிமனிதான்.

———————————————————-
நான் பயின்ற அரசியல் காரணமாக கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று நினைக்கிறேன். கடந்த வாரம் “ழகரம்” தொலைக்காட்சிக்கு பெறப்பட்டு பல கேள்விகளில் அதில் தேர்ந்தெடுத்த வினாக்களுக்கு பேட்டியில் கேட்ட கேள்விகளுக்கு முறையாகவும் சீராகவும் எனது அனுபவத்தின் வாயிலாகப் பலவற்றையும் நான் எடுத்துச் சொன்னேன். தொடக்கத்தில் தமிழ் தேசியம் எவ்வாறு உருவானது? எவ்வாறு தென்இந்தியா நல சங்கம் ஜஸ்டிஸ் கட்சியாகத் தொடங்கி திராவிடக் கழகம் பின் திமுக கட்சியாகத் திரிந்து தனிநாடு மாநில சுயாட்சி வேண்டுதலாகி மெது மெதுவாகப் பல்வேறு கட்டங்களை அடைந்ததை வரலாற்றுப் பூர்வமாக எடுத்துச் சொன்னேன். வள்ளாளர், மறைமலை அடிகள், திருவிக, நாவலர் சோமசுந்தர பாரதி தொடங்கிய தமிழ் தேசியத்தின் பன்முகத்தன்மை எவ்வாறு இருந்தாலும் அவை அனைத்தையும் கொண்டு செல்லக்கூடிய இந்திய நல்லிணக்கம் குறித்து மட்டும்தான் எனது பார்வை எப்பொழுதும் இருந்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் பழைய தமிழ்த் தேசியப் பண்போடு மாற்று அரசியல் அமைப்பு வருங்காலத் தமிழகத்தில் புதிதாக உருவானால் அதை வரவேற்கக் கூடியவன் தான் நான்! ஏனென்றால் எடுத்துக் கொண்ட கொள்கையாவும் சீரழிந்து போன காலகட்டத்தில் நாமவாழ்ந்துகொண்டிருக்
கிறோம். தமிழ் சமூகம் மக்கள் நலன் அவர்களுடைய எதிர்காலம் அதற்குத் தேவையான அரசியல்ப் பின்னணி இன்னும் பலவான வளர்ச்சிப் போக்குகள் குறித்த திட்டமான வகையினங்களை மேம்படுத்த வேண்டியது குறித்துத் தான் எனது அக்கறை எப்பொழுதுமே இருக்கிறது! அது அது பற்றித்தான் நான் தொலைக்காட்சிகளிலும் பல நேரலைகளில் என்னுடைய யூடுயுபிலும் கூட நான் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறேன்.
இதையெல்லாம் தெரியாதவர்கள் எந்த வரலாறும் அரசியலும் நாகரிகமும் தெரியாதவர்கள் தமிழ் தேசியம் எவ்வாறு உருவானது குறிப்பாக இந்திய தேசியம், திராவிடம், தமிழ் தேசியம், என்றால் என்ன என்று எதுவுமே தெரியாத கூமுட்டைகள் எனது நேரலை பேட்டிக்கு எதிர்வினை செய்கிறேன் என்கிற பெயரில் எதையும் அறியாமல் புரிதல் அற்று “உனக்கு என்ன தெரியும் நீ ஒரு வந்தேறி” என்று
கீழே வந்து என்னை பற்றி பின்னூட்டம் இடுகிறார்கள்.
வேதாளத்திற்கு முருங்கை மரம் ஏறத் தெரியும் பல கதைகள் சொல்லத் தெரியும் ஆனால் விக்ரமாதித்தன் வெட்டி வீழ்த்திக் கொண்டுதான் இருப்பான் என்கிற கதையாக இந்த பூச்சாண்டிக்கலாம் நான் அஞ்ச மாட்டேன்.
இப்படித்தான் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஊதுகுழலாகி அடி வருடியாக கட்சிக்கு உண்மையாக உழைத்தவர்களை எல்லாம் வெளியே தள்ளிவிட்டு எனக்கு ஒன்னு எங்க அப்பனுக்கு ஒன்னு என்று இடம் பிடித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அனர்த்தமாக இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதிகாரத்திடம் பிச்சை எடுப்பது தான் இவர்களது பிழைப்பு!
வெட்கங் கெட்டவர்கள்!
இந்த வெட்கம் கெட்டவர்களின் பிழைப்பு வாதத்திற்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. என்னை அறிந்தவர்கள் எனது கடந்த 50 60ஆண்டுகால அரசியல் வாழ்வைப் புரிந்தவர்கள் ஒருவேளை கலைஞர் இருந்திருதால் இது மாதிரியான அநாகரிங்களை எல்லாம் ஒத்துக் கொள்ளவே மாட்டார்.
நான் என்ன இவர்களைப் போல் முன்னாள் இன்னாள்களா!?
உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றம் என்று பல வகையான பொதுநல வழக்குகளை தாக்கல் செய்து தமிழக உரிமைகளை பல்வேறு 45 வழக்குகள் 1976 முதல் காவிரி பிரச்சனை நதிநீர் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் பல்வேறு தமிழக நீண்ட பட்டியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவன்! குறிப்பாக இங்கு திமுக வில்எத்தனையோ இக்கட்டுகள் வந்த போதும் அதை எல்லாம் நின்று தீர்த்து கொடுத்து ஒரு பிரச்சனை என்றால் ராதவை கூப்பிடுங்கள் என்று கலைஞரே மதித்து அழைக்கும் படி நடந்து கொண்டவன்! நாகரீகம் தெரிந்தவன்? இன்றைய முதல்வர் ஸ்டாலினை ஈழத்திற்கான லண்டன் டெசோ மாநாடு முதற்கொண்டு பிறகு ஐநா சபை வரைக்கும் கொண்டுபோய்ப் பேச வைத்தவன். அதன்படியான அரசியல் வாழ்வைத் தனிப்பட்ட அறமாக மேற்கொண்டவன்! இன்றை அரசியலில் 90kids இருந்த பலர் விருப்பம் போல இங்கு நடந்து கொள்வது நல்லதல்ல.
இவர்களைப் போல ஊழல் செய்து கொண்டு ஊரை கொள்ளை அடித்து பிழைக்கும் பிழைப்பு வாத கும்பலைச் சேர்ந்தவன் அல்ல!
குரங்குகளை போல பதவிகளைப் பிடிக்கும் இந்த கூட்டத்திற்கு என்ன நாகரிகம் தெரிய போகிறது! இப்படி எல்லாம் பேசி அரைகுறைகளை நீங்கள் கோபப்படுத்தலாம். ஆனால் இது பனங்காடு சலசலப்புக்கு அஞ்சாது.
இப்படி கேவலமாகப் பேசி ஆதாயம் தேடித் திரிவதை விட உலக வரலாற்றைப் படித்து ஜனநாயக முறைகள் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு பொது மேடைக்கு வாருங்கள்! சந்திக்கலாம்!
அதை விட்டுவிட்டு ஜேப்படி அடித்த திருடன் கூட்டத்தில் சிரித்துக்கொண்டு நிப்பானாம்! அது மாதிரி இருக்கிறது உங்கள் பிழைப்பு.
வந்தேறி என்கிறீர்களே ஓமந்தூரார் முதல் குமாராசாமி ராஜா, கோவை ஜிடி நாயுடு, ஜி.ஆர். தமோதரன், ராகி, எஸ்ஆர் நாயுடு, சுரதா, கோவை நிர்மனித்த ஒருவரான நரசிம்லு நாயுடு, தேனி நகரை சீர் படுத்திய என. ஆர். தியாகரஜன், அண்ணாவின் தோழர் சி.பி சிற்றரசு, எம்ஜிஆரை அண்ணாவிற்கு அறிமுகம் செய்த நடிகமணி டி. வி. நாராயணசாமி கு. அழகர்சாமி, இன்று
கிரா வரை நூற்றுக்கணக்கில் சொல்லாம்.இவர்களின் வாழ்க்கை வரலாறு தெரியுமா?
இந்த தமிழ் சமூகத்திற்க்கு சமரசமின்றி எத்தனை பேர் தங்களுடைய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்த மண்ணிற்கு கொடுத்துச் சென்று இருக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்களை மதியுங்கள. இது வீணான விடயம், விவாதம்
இந்த நாய் விற்ற காசுக்குக் குரைக்கிற எடுபிடிகள் எல்லாம் வசதி பெற்று வாழ்ந்திருக்கலாம். வரலாற்றில் இவர்கள் எல்லாம் யாரோ எவரோ!
திராவிடம் , மற்றும் இவர்கள பேசும் தமிழ் தேசியம் ஏ பி சி டி அதன் இசட் வரை எனக்கு நன்றாகத் தெரியும்! இந்த பேச்சை எல்லாம் உங்கள் காலை நக்கி கொண்டு இருப்பவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருங்கள். என்னிடம் வேண்டாம். ஆம் நான் தனி மனிதான். மற்றவர்கள் போல என் பிறப்பை மறைக்கவில்லை. நான் தெலுங்கு பேசும் விவசாய தமிழன்தான். வழக்கறிஞர் கூட…இங்கு வந்து ஏதாவது
ஏகடியம் / தவறாக எதிர்வினைகள் வந்தால் வழக்கு மன்றதான் இறுதி. எச்சரிக்கை.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...