Today is #Tirunelveli ‘s 226 year anniversary. In the year 1790 the British created Tirunelveli.
இன்று....
#திருநெல்வேலி நகரத்தின் 226 வது மலர்ந்த தினம். 1790ம் ஆண்டு இதே நாளில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது தான் திருநெல்வேலி.
*தென்பாண்டி சீமை* என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென் தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கு மொழியை
நெல்லைத்தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி *பொதிகை* மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத்தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே *நெல்லைத்தமிழ்* தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது.
*அண்ணாச்சி* என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்,சாத்தூர்,இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. 'கிறு', 'கின்று', 'நின்று', ஆநின்று போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்குத்தமிழில்
அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment