Saturday, August 30, 2025

14 august

 _If you’re constantly relying on others you’ll get into the habit of believing that you’re not good enough to do certain tasks alone, without the help of others. The main reason why you need to learn to walk and stand on your own two feet because of the fact that doing so helps you to build your self confidence and self esteem. When you learn to do things for (by) yourself you see the your true worth and realise that you can do anything when you put your mind to it......

13 august

 


13 agust

 #செயதிஊடகங்கள்

——————————-
நடுநிலையோடு செயல்படுகிறோம் என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களும் செய்தி ஊடகவாதிகளும் பிஜேபி அநியாய ஆட்சி நடத்துகிறது என்கிறார்கள். சரி! நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறோம்.! இங்கே ஸ்டாலினுடைய திமுக ஆட்சி நன்றாக நடக்கின்றதா? உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! பிஜேபி மட்டுமல்ல வேறு மாநிலங்களில் ஆளக்கூடிய எல்லா கட்சியுமே கெட்ட கட்சிகள் என்றே வைத்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டில் திமுக மக்கள் நல ஆட்சியாக நடந்து கொள்கிறதா? அதைப் பற்றி பேசாமல் வேறு ஒன்றை உள்நோக்கமாகக் கொண்டு நீங்கள் இயங்கும்போது அல்லது உண்மைக்கு புறம்பாகச் சொன்னால் நீங்கள் ஒரு பத்திரிக்கையாளரோ/ ஊடகங்கள் நடுநிலைவாதிகளோ அல்ல. நீங்களும் முரசொலி சன் டிவி கலைஞர் டிவி போன்றவற்றின் செய்தி ஊடகப் பிரிவை சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவீர்கள். அப்படித்தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம்.

1983 :: Atal Bihari #Vajpayee Walking His Dogs ( Photo - Indian Express )

 


PM Indira Gandhi Praying at The Tirupati Balaji Temple1967

 


கெட்டு போன நிலத்தை 60 நாட்களில் மண் புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்ப பெறுவது எப்படி???...

 கெட்டு போன நிலத்தை 60 நாட்களில் மண் புழு தானே உருவாகும் அளவுக்கு திரும்ப பெறுவது எப்படி???...

20 வகையான விதைகளை கலந்து தோட்டத்தில் விதைத்தது, அவை முளைத்து 60 நாட்களில் மடக்கி உழ வேண்டும்... அவ்வாறு செய்தால் 50 வருடங்களாக கெட்டு போன நிலம் கூட இந்த 60 நாட்களில் மீண்டு விடும்..
20 வகையான விதைகள் ...
4 தானியங்கள்:
சோளம்
கம்பு
திணை
சாமை, கேழ்வரகு
4 பருப்பு:
பாசி பயிர்
உளுந்து
தட்ட பயிர்
கொள்ளு
துவரை, அவரை, மொச்சை
4 எண்ணெய் வித்து:
ஆமணக்கு
நில கடலை
எள்ளு
சூரிய காந்தி
4 வாசனை பொருட்கள்:
கடுகு
வெந்தயம்
மல்லி
சோம்பு
4 உர செடி:
பச்ச பூண்டு
அகத்தி
செனப்பு
நரி பயிர்
பனி பயிர்
இந்த 20 வகையான விதைகளை ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ வீதம் கலந்து அவைகளில் பொடி வகைகளை மண் மற்றும் குப்பைகளுடன் சேர்த்து கொள்ளவும். நடுத்தர விதைகளை தனியாகவும், பெரிய விதைகளை தனியாகவும் பிரித்து கொண்டு 3 சுற்றுகளாக விதைத்தால் ஓவ்வொன்றும் முளைத்து வளரும். பாதி செடிகள் 60 நாட்களில் பூ வைக்கும். அந்த தருணத்தில் இச்செடிளை மடித்து திரும்ப அப்படியே மண்ணுக்கு உரம் ஆக்க உழுதல் வேண்டும். அவ்வாறு செய்த செடிகளை 10 நாட்கள் அப்படியே விட்டால் அவை மக்கி அந்நிலத்தை விவசாயம் செய்ய ஏற்ற நிலமாக மாற்றுகிறது..
தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்.
உழவே தலை
பல்வேறு வகையான விதைகள்:
வெவ்வேறு விதைகளை விதைப்பதன் மூலம், நிலத்தில் பல்வேறு வகையான வேர் அமைப்புக்கள் உருவாகும். இது மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்தும்.
60 நாட்கள்:
பொதுவாக, 60 நாட்கள் என்பது பயிர்கள் ஓரளவுக்கு வளர்ந்து, மண்ணில் கரிமப் பொருட்களை சேர்த்து, மண் புழுக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் காலமாகும்.
உழுதல்:
உழுவதன் மூலம், மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும், மேலும் விதைகளின் கழிவுகள் மற்றும் பயிர்களின் வேர்கள் மண்ணில் நன்கு கலக்கப்பட்டு, மண்புழுக்களுக்கு உணவாகும்.
மண்புழு உரம்:
இவ்வாறு, மண்ணில் மண்புழுக்கள் பெருகி, அவற்றின் கழிவுகள் இயற்கை உரமாக மாறி, நிலத்தின் வளத்தை அதிகரிக்கும்.
மண் புழு உரம் நிலமாகுதல்:
மண்புழுக்கள் மண்ணில் கரிமப் பொருட்களைச் சிதைத்து, சத்துக்களை மண்ணில் விடுவிப்பதால், மண் வளம் அதிகரிக்கும்.
சாகுபடி செய்யாத நிலம்:
சாகுபடி செய்யாத நிலத்தில், இந்த முறை மூலம் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு, மீண்டும் விவசாயத்திற்கு பயன்படுத்த தகுதியானதாக மாற்றப்படும்.



#ஓட்டுத்திருட்டு என்கிறார்கள்.

 #ஓட்டுத்திருட்டு என்கிறார்கள். அதைவிடப் பணம் கொடுத்து அதை வாங்குவது திருட்டு இல்லையா! ஜனநாயகத்தில் மக்களின்வாக்கு உரிமையைப் பணம் கொடுத்து வாங்குவது திருட்டை விட மோசமானது. பாலியல் பலாத்காரத்தைப் போன்ற ஒரு மோசமான செயல்பாடாகும். மணிப்பூர் மணிப்பூர் என்று கதறினார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் அது பற்றிய சட்டத் திருத்த மசோதா வரும்போது அதைப் பற்றிப் பேசாமல் ஓட்டுத் திருட்டு வாக்குத் திருட்டு என்று வேறொரு முனைக்குத் தாவுகிறார்கள்

பதாகைகளைப் பிடித்துக் கொண்டு டெல்லி வீதிகளைச் சுற்றுகிறார்கள். ஆட்சி நிலைப்பாடுகளில் கவனத்தையும் அதற்கான நடைமுறைகளையும் எதார்த்தங்களையும் பேணாமல் வெறுமனே குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதைத் தவிர போராட்டங்களைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் இவர்கள்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் இலக்கு இலக்கணம் என்பதையே அறியாதவர்கள். ஒரு போராட்டத்திற்கான அடிப்படை நேர்மை என்பதே இவர்களிடம் இல்லை. ஒரு முழுமையான அறிவைப் பெறாமல் நாட்டின் இறையாண்மையைக் கவனத்தில் கொள்ளாமல் இப்படி குழப்பம் பண்ணிக் கொண்டே திரிவது இவர்களின் சொந்தத் தவறுகளை மறைப்பதற்கு தான் ஏதுவாக இருக்கிறது. என்பது அன்றிவேறு என்ன சொல்ல. எல்லாம் அவரவர்களுக்கான சந்தர்ப்பவாதம். ஆனால் , தமிழகத்தில் ஆளுங் கட்சி ஓட்டுக்கு பணம் என தேர்தல் கமிசனை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பது ஊரறிந்த ரகசியம்
The Election Commission described as “factually incorrect” the claims of “vote theft” made by the Congress and party leader Rahul Gandhi during a protest march. The poll body issued a “fact-check” on the claims made by the INDIA bloc.

13 august

 You know, life is meant to be lived in joy, peace, love and freedom. This is the part of your life where you have to silently remove yourself from anyone who hurts you more than they love you, drains you more than they replenish you, brings you more stress than they do peace, and tries to stunt your growth rather than clap for it. Yes learn the lesson and start walking. Don’t let these toxic people rub off on you so much that they ruin your day or make you become like them....

TESO வை சிறப்பாக நடத்தினோம் , ராதா உனக்கு பாராட்டுக்கள் - #கலைஞர்

 TESO வை சிறப்பாக நடத்தினோம் , ராதா

உனக்கு பாராட்டுக்கள் - #கலைஞர்

முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

 முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!

————————————————————————-
ஆழியாறு பரம்பிக்குளம் அணைக்கட்டுக்குக் பிஏபி காரணமான பெருந்தலைவர் காமராஜர் மத்திய அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியம் வி கே பழனிச்சாமி கவுண்டர் பொள்ளாச்சி ந மகாலிங்கம் போன்றோரின் சிலைகளை முறையாகத் திறந்து வைத்தது ஞாயம் தான். சரியான முன்னெடுப்பு!. காமராஜர் சொல்லி அன்றைய கேரளா முதல்வராக இருந்த நம்பூதிரிப் பாட்டிடம் பரிந்துரைத்து அணைக்கட்டுக்கு ஒப்புதல் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி ராமமூர்த்தி அவர்களின் சிலையை ஏன் அங்கு வைக்கவில்லை. ஏன் அவருக்கு முக்கியத்துவம் இல்லை.இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் ஞாபக மறதிகளின் நிலைப்பாடு! இந்திய கம்யூனிஸ்களோ அல்லது தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகளோ இதை பற்றிப் பேசவும் மாட்டார்கள்.
அவர்களின் நிலையும் இப்படித்தான் ஆகிவிட்டது.ஸ்டாலினுக்கும் வரலாறு தெரியாது. இன்றைக்கு உள்ள தலைமுறைகளுக்கும் கடந்த கால வரலாறு தெரியாது.
பி ராமமூர்த்தி சிலை எங்கே போனது? அவர் சிலையை வைக்க வேண்டும் அல்லவா? வி கே பழனிச்சாமி கவுண்டர் யார் என்றால் காமராஜருக்கு எதிரணியில் நின்று சீர்திருத்த காங்கிரஸ் என்ற கட்சி அமைப்பை ஆரம்பித்தவர். சி சுப்பிரமணியம் காமராஜருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டவர் முதல்வர் பதவிக்கு அவருடன் இணை போட்டவர். அன்றைக்கு உட்கட்சி ஜனநாயகம் இருந்தது. இன்றைக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை. சி சுப்பிரமணியமும் பழனிச்சாமிக் கவுண்டரும் காமராஜருக்கு எதிராக இருந்தாலும் அன்றைக்கு அதை அனுசரித்துக் கொள்கிற உட்கட்சி ஜனநாயகம் காங்கிரஸின் பெருந்தன்மையாக இருந்தது. இப்போது எந்தக் கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். மாபெரும் தலைவர் பி ராமமூர்த்தியின் சிலையைத் திறக்க வேண்டும் என்று அங்கு யாரும் சொல்லவில்லையா? இப்படியான வரலாறுகளும் தியாகங்களும் தெரியாத இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள்.!கூட்டணியும் போட்டுக் கொள்கிறார்கள்!! இவ்வளவு சந்தர்ப்பவாதங்களை என் அரசியல் வரலாற்றில் கண்டதே இல்லை. கடந்த காலத்தின் மீது கவனம் இல்லாதவர்கள் நிகழ்காலத்தில் அனைத்தையும் தவற விடுவார்கள் என்பது தான் பிழை வரலாறு.
Chief Minister MK Stalin inaugurated the statues of former chief minister K Kamaraj, former minister C Subramaniam, former MLAs VK Palaniswami and Pollachi N Mahalingam in remembrance of their contribution in implementing the Parambikulam Aliyar irrigation project (PAP), at Pollachi in Coimbatore on Monday.

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்