நடுநிலையோடு செயல்படுகிறோம் என்று சொல்லக்கூடிய பத்திரிகையாளர்களும் செய்தி ஊடகவாதிகளும் பிஜேபி அநியாய ஆட்சி நடத்துகிறது என்கிறார்கள். சரி! நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்கிறோம்.! இங்கே ஸ்டாலினுடைய திமுக ஆட்சி நன்றாக நடக்கின்றதா? உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்! பிஜேபி மட்டுமல்ல வேறு மாநிலங்களில் ஆளக்கூடிய எல்லா கட்சியுமே கெட்ட கட்சிகள் என்றே வைத்துக்கொள்வோம்.
தமிழ்நாட்டில் திமுக மக்கள் நல ஆட்சியாக நடந்து கொள்கிறதா? அதைப் பற்றி பேசாமல் வேறு ஒன்றை உள்நோக்கமாகக் கொண்டு நீங்கள் இயங்கும்போது அல்லது உண்மைக்கு புறம்பாகச் சொன்னால் நீங்கள் ஒரு பத்திரிக்கையாளரோ/ ஊடகங்கள் நடுநிலைவாதிகளோ அல்ல. நீங்களும் முரசொலி சன் டிவி கலைஞர் டிவி போன்றவற்றின் செய்தி ஊடகப் பிரிவை சேர்ந்தவர்களாகத்தான் கருதப்படுவீர்கள். அப்படித்தான் நாங்கள் எடுத்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment