இதே ஓ.பன்னீர்ச்செல்வத்தை ஜெயலலிதா இறந்த பின் முதலமைச்சராக்க வேண்டும் என்று திமுக களத்தில் இறங்கியது. பன்னீர்ச்செல்வம் சட்டமன்றத்தில் நுழைந்த போது அப்போது எதிர்க்கட்சி ஆக இந்த திமுக உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். அதை அடுத்துப் தினகரன் மீதான வழக்குகளை சரி செய்ய திமுக உதவியது .
அன்றைக்கு நான் திமுகவில் இருக்கிறேன். நீதிபதி குளவாடி ரமேஷ் அவர்கள் கலைஞரின் நினைவிடத்திற்கு எப்படி உத்தரவு கொடுத்தார் அதன் பின்னணியில் என்னென்ன நடந்தது என்பதெல்லாம் முக்கியமான அன்றைய செய்திகள் என சொல்லப்பட்டது. இந்த தகவல் உண்மையா ?
இன்றைக்கு வில்சன் நெல்சன் இளங்கோ கிளங்கோ போன்றவர்கள் சாதனை படைத்தவர்கள் என்றெல்லாம் சொல்லக்கூடாது. இவர்கள் இருவரும் ஸ்டாலின் வீட்டு ஆட்கள். அவர்களுக்கு எம்பி பதவி எல்லாம் வரும். ஜெயலலிதாவின் வழக்கை பெங்களூருக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்கிற நிலையில் அந்த வழக்கை முரசொலி மாறன் என்னிடம் கொடுத்தார். அதற்கான அனைத்தையும் செய்து முடித்த பின் திமுக பொதுக்குழுவில் வைத்து மாறன் என்னை பாராட்டிப் பேசினார். ஏறக்குறைய வழக்கில் என்னுடைய வேலைகள் முடிந்த நிலையில் மாறன் இறந்து விட்டார். அதற்குப் பிறகு அந்தப் பொறுப்பை என்னிடமும் டெல்லி சம்பத்திடமும் இருந்து வாங்கி சண்முகசுந்தரத்திடம் கொடுத்து கவனிக்க சொன்னார்கள். இதுதான் நடந்தது. எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் வரை என்னைப் பயன்படுத்துவார்கள். அதன் பலன் கிடைக்கும் போது அதற்கு தங்கள் விசுவாசிகளின் பெயரைச் சொல்லி அவர்களால் தான் இது நடந்தது என்று சொல்லுவார்கள். எல்லாம் வேஷம். வெளி வேஷம்தான்.
ஜெயலலிதாவின் வழக்கை பெங்களூருக்கு மாற்றும் ஆரம்ப காலத்தில் இந்த என்ஆர் இளங்கோவும் வில்சனும் எங்கே இருந்தார்கள்? மனித உரிமைக் கமிஷன் போக வேண்டும்! அதை மாற்ற வேண்டும்! என்றெல்லாம் நிர்பந்தம் செய்வார்கள். கலைஞர் கைது காலத்தில் அவரை சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஓடிப் போய் விட்டார்கள். நான்தான் அதற்கான முன்னெடுப்பை செய்து அதை தொலைக்காட்சியில் கொடுத்து வெளிப்படச் செய்தேன். அதற்கான வேலைகள் முடிந்த பிறகும் இதற்கு மேல் சண்முக சுந்தரம் பார்த்துக் கொள்வார் என்று ஸ்டாலின் சொன்னார். என்னை அழைத்து கலைஞர் என்னப்பா இதற்காக வருத்தப்படுகிறாயா என்று கேட்டார் இதில் எனக்கு என்ன வருத்தம் இருக்கிறது எல்லாம் தெரிந்த விஷயம் தானே உங்களை நம்பி வந்து விட்டேன். நீங்களே எப்படி நடக்கும்போது இங்கு நான் என்ன செய்ய முடியும் வைகோ இன்ன பாடு என்று அல்ல பலவகையிலும் என்னைச் சீரழித்தார் .
நீங்கள் மட்டும்தான் கொஞ்சம் என் மீது பாசமாக இருக்கிறீர்கள் இருந்தாலும் ஏதும் செய்ய இயலாத தர்ம சங்கடத்துடன் புதிய வாரிசுகளை நம்பி என்னைப் புறக்கணிக்கிறீர்கள் என்று நான் கலைஞரிடம்சொன்னேன். என் மனச்சான்றுக்கு உட்பட்டு 25 வருட காலம் திமுகவில் அவருக்காக உழைத்தேன். இன்றைய ஸடாலினின் அதிகாரமோ கட்டுப்பாடுகளோ புறக்கணிப்போ என்னை ஒன்றும் செய்யப் போவதில்லை. அது குறித்து நான் எந்த கவலையும் படப் போவதில்லை. கலைஞர் மறையும் வரை அவருடன் பணியில் இருந்தேன்.
No comments:
Post a Comment