முதல்வர்ஸ்டாலின் அவர்கள்ளே!
ஆழியாறு பரம்பிக்குளம் அணைக்கட்டுக்குக் பிஏபி காரணமான பெருந்தலைவர் காமராஜர் மத்திய அமைச்சராக இருந்த சி சுப்பிரமணியம் வி கே பழனிச்சாமி கவுண்டர் பொள்ளாச்சி ந மகாலிங்கம் போன்றோரின் சிலைகளை முறையாகத் திறந்து வைத்தது ஞாயம் தான். சரியான முன்னெடுப்பு!. காமராஜர் சொல்லி அன்றைய கேரளா முதல்வராக இருந்த நம்பூதிரிப் பாட்டிடம் பரிந்துரைத்து அணைக்கட்டுக்கு ஒப்புதல் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி ராமமூர்த்தி அவர்களின் சிலையை ஏன் அங்கு வைக்கவில்லை. ஏன் அவருக்கு முக்கியத்துவம் இல்லை.இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் ஞாபக மறதிகளின் நிலைப்பாடு! இந்திய கம்யூனிஸ்களோ அல்லது தமிழ்நாட்டுக் கம்யூனிஸ்டுகளோ இதை பற்றிப் பேசவும் மாட்டார்கள்.
அவர்களின் நிலையும் இப்படித்தான் ஆகிவிட்டது.ஸ்டாலினுக்கும் வரலாறு தெரியாது. இன்றைக்கு உள்ள தலைமுறைகளுக்கும் கடந்த கால வரலாறு தெரியாது.
பி ராமமூர்த்தி சிலை எங்கே போனது? அவர் சிலையை வைக்க வேண்டும் அல்லவா? வி கே பழனிச்சாமி கவுண்டர் யார் என்றால் காமராஜருக்கு எதிரணியில் நின்று சீர்திருத்த காங்கிரஸ் என்ற கட்சி அமைப்பை ஆரம்பித்தவர். சி சுப்பிரமணியம் காமராஜருக்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டவர் முதல்வர் பதவிக்கு அவருடன் இணை போட்டவர். அன்றைக்கு உட்கட்சி ஜனநாயகம் இருந்தது. இன்றைக்கு உட்கட்சி ஜனநாயகம் என்பதே இல்லை. சி சுப்பிரமணியமும் பழனிச்சாமிக் கவுண்டரும் காமராஜருக்கு எதிராக இருந்தாலும் அன்றைக்கு அதை அனுசரித்துக் கொள்கிற உட்கட்சி ஜனநாயகம் காங்கிரஸின் பெருந்தன்மையாக இருந்தது. இப்போது எந்தக் கட்சியிலும் உட்கட்சி ஜனநாயகம் கிடையாது. அது ஒரு பக்கம் இருக்கட்டும். மாபெரும் தலைவர் பி ராமமூர்த்தியின் சிலையைத் திறக்க வேண்டும் என்று அங்கு யாரும் சொல்லவில்லையா? இப்படியான வரலாறுகளும் தியாகங்களும் தெரியாத இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. கேட்டால் திராவிட மாடல் என்கிறார்கள்.!கூட்டணியும் போட்டுக் கொள்கிறார்கள்!! இவ்வளவு சந்தர்ப்பவாதங்களை என் அரசியல் வரலாற்றில் கண்டதே இல்லை. கடந்த காலத்தின் மீது கவனம் இல்லாதவர்கள் நிகழ்காலத்தில் அனைத்தையும் தவற விடுவார்கள் என்பது தான் பிழை வரலாறு.
Chief Minister MK Stalin inaugurated the statues of former chief minister K Kamaraj, former minister C Subramaniam, former MLAs VK Palaniswami and Pollachi N Mahalingam in remembrance of their contribution in implementing the Parambikulam Aliyar irrigation project (PAP), at Pollachi in Coimbatore on Monday.
No comments:
Post a Comment