படாத பாடுபட்டுக் கடுமையாகப் போராடி தூத்துக்குடி விமான நிலையத்தை தனது தொகுதிக்குக் கொண்டு வந்து விட்டதாக கனிமொழியைப் பாராட்டுகிறார்கள். வேடிக்கைதான்.
கடந்த 9 ஆண்டுகளாக அதற்கான இடத்தை சர்வே செய்து ஆய்வுகள் பலவற்றையும் வல்லுனர்களைக் கொண்டு சிறப்பாக முடித்து மத்திய அரசு இந்த விமான நிலையத்தை மிகச் சரியாகக் கொண்டு வந்திருக்கிறது.. இதில் கனிமொழிக்கு எங்கு இருந்து பங்கு வந்தது. இதே கனிமொழி தான் மோடி அரசை கடுமையாக எதிர்ப்பதாகப் பாவனை செய்து பதாகைகளைப் பிடித்துக் கொண்டு மோடி அரசே மோடி அரசே என்று நாடாளுமன்றத்திற்கு முன்பு நின்று கோஷம் போட்டார்.
தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டியது மாதிரி கனி மொழியிடம் மன்னிப்பு கேள் மன்னிப்பு கேள் என்று வைகோ கூச்சல் போடுகிறார்.
முட்டு கொடுக்க வேண்டியதுதான் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல், மேலும் கனிமொழிக்கு வைகோ வயதுக்கு ஏற்ற மாதிரியா சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார் அவர் தன்னை அறிந்து தான் செய்கிறாரா? அவர் வயதுக்கு இது அழகா? மோடி அரசைத் திட்டிக்கொண்டே மோடி அரசு செய்கிற தமிழ்நாட்டுக்கான நலத்திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வந்தோம் எனபதுமாதிரி பேசுவது மோசடியானது இல்லையா?
இவர்கள் எல்லாம் என்ன யோக்கிய சிகாமணிகளா?

No comments:
Post a Comment