#ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்: ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்….
இன்று காலை ஆண்டாள் ரெங்கமன்னார் ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து, சர்வ அலங்காரத்தில் ஆடிப்பூரத் தேரில் எழுந்தருளினர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், மதுரை அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் சீர்வரிசையாக அனுப்பி வைத்த பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

No comments:
Post a Comment