Tuesday, August 5, 2025

கலைத்தந்தை #கருமுத்துதியாகராஜன்செட்டியார், (16 சூன் 1893 - 29 சூலை 1974) நினைவு நாள்

 கலைத்தந்தை #கருமுத்துதியாகராஜன்செட்டியார், (16 சூன் 1893 - 29 சூலை 1974) நினைவு நாள்

தமிழ்நாடு என்ற பெயரில் ஒரு தனி இதழ் தனித்தமிழுக்காக அன்றைய நாளில் காங்கிரஸ் தலைவராக இருந்த சேலம் வரதராஜூலு நாயுடு அவர்களால் 50களில் தொடங்கப்பட்டது.
அதுபோல ஆங்கில இதழான இந்தியன் எக்ஸ்பிரஸையும் அவர்தான் தொடங்கினார். பின்பு அதை சதானந்தம் அவர்களுக்கு வரதராஜூலு நாயுடு அவர்கள் விற்ற பிறகு அதைக் கோயங்கா அவர்கள் விலைக்கு வாங்கி ஆங்கிலமும் தமிழும் ஆக இரு மொழிப் பத்திரிகையாக நடத்தினார்.அதன் தமிழ்நாட்டுப் பதிப்பை மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியார் அவர்கள் ஏற்று அதை மதுரையில் அச்சாக்கினார். அந்த வகையில் தனித் தமிழுக்காக முதன் முதலில் கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு” என்ற பெயரில் இயங்கிய நாளேடுதான் அக்காலத்தில் வெளிவந்தது.
அன்றைய தமிழ்நாடு இதழ் தென் மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற அனைவரும் வாசிக்க கூடிய ஒரு பத்திரிக்கையாக இருந்தது. நெடுமாறன் இப்பத்திரிகையின் துணை ஆசிரியர் குழுவில் இருந்தார். அதேபோல நவ இந்தியா என்று ஒரு நாள் இதழை பி ஆர் ராமகிருஷ்ணன் மற்றும் பிஎஸ்ஜி நிறுவன ஜி.ஆர் தமோதரனின் கலைக்கதிர் கோயம்புத்தூரில் இருந்து நடத்தினார். அம்மாதிரியான நேரங்களில் சுதேசமித்திரன் என்கிற தின இதழும் வெளிவந்தது. இவையெல்லாம் தொடர்ந்து 1970 க்கு மேல் வர முடியாமல் ஒரு கட்டத்தில் நின்று விட்டது.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்