06.06.2026
முதலாம் நரேந்திரச் சோழன் நமது பிரதமர்! பிரதமரின் 12 -வது ஆண்டு ஆட்சி சாதனையை பாராட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை ---------- இந்திய அரசியல் வரலாற்றிலேயே தமிழ்மொழி, தமிழ் மக்கள் தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின்மீது அளவற்ற பற்றும், பாசமும் கொண்டவர் நமது பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், அவர்களது சாதனைக்குரிய 12 ஆண்டுகால மத்திய ஆட்சியில் தமிழ் மக்களுக்கு எவ்வகையில் எல்லாம் நன்மைகள் செய்திருக்கிறார் என்பதை, நாம் நினைவு கூருவது நம் ஒவ்வொருவரின் கடமையாக கருதுகிறேன். “தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியார் அவர்களின், கனவுகனை நனவாக்கியவர் நமது பாரதப் பிரதமர். “உலக மொழிகளுள் மிகத் தொண்மையானது, தமிழ்மொழி என்பதில் பாரதம் பெருமைக்கொள்கிறது” என்று உலகளவில் பிரகடனப்படுத்தியவர் நமது பாரதப் பிரதமர். •ஐக்கிய நாடுகளின் சபையில் பன்நாட்டுத் தலைவர்களின் மத்தியில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் புலவன் கனியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற உலக சகோதரத்துவத்தின் வரிகளை தமிழில் வாசித்துக் காட்டியவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள், •குறிப்பாக, தெய்வப் புலவர் திருவள்ளுவரின் திருக்குறளை தன் நெஞ்சிலிருத்தி, தான் செல்லும் இடமெல்லாம் அதன் கருத்துச் செழிமையையும், வளமையையும் வாயாரப் புகழ்ந்து பாராட்டுகிறார் நமது பாரதப் பிரதமர் அவர்கள், •அதுமட்டுமல்லாது, நமது தமிழகத்தின் பண்டைய செங்கோண்மையின் சிறப்பை உணர்த்தும் விதமாக தேவாரம், திருவாசகம் பதிகங்களைப் ஆதியில் தமிழ்வளர்த்த ஆதின மட ஆதினகர்த்தாக்கள் பாட தமிழர்களின் அடையாளமாகிய செங்கோலை மக்கள் அவையில் நிலைநிறுத்தியவர் நமது பாரதப் பிரதமர் அவர்கள், தமிழ் மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடிதிருவாதிரை திருநாள், கங்கைகொண்ட சோழபுரம் சிவன் திருக்கோயில் கட்டப்பட்ட 100வது ஆண்டு நிறைவு நாள் தென்கிழக்கு ஆசியாவின் கடல்சார் எழுச்சி பயணத்தின் 1000ஆவது வெற்றித் திருநாள் போன்ற முப்பெரும் விழாவை நடத்திக் காட்டியவர் நமது பாரதப் பிரதமர். •ஒவ்வொரு மாத கடைசி ஞாயிறு அன்று அவர் கலந்து கொள்ளும் மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழ், தமிழ்நாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றின் பெருமைகளை தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். •தமிழ், பண்பாடு கலாச்சாரத்தின் அடையாளமான திருக் கோயில்களுக்கு சொந்தமான தெய்வத் திருவுருவச்சிலைகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் போன்ற ஏராளமான பழமை செல்வங்களை பாதுகாத்துவரும் காவலராய் இருந்து வருபவர் நமது பாரதப் பிரதமர். •காங்கிரஸ் காலத்தில் தடை செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அனுமதித்து, தமிழ் மக்கள் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்தவர் நம் பிரதமர். •மதுரையில் தேர்தல் பரப்புரையில் வெற்றிவேல், வீரவேல் என்று முழங்கியவர் நமது பிரதமர். •அகத்திய முனிவரின் பிறந்தநாளை தேசிய சித்தமருத்துவ தினமாக அறிவித்தார் நம் பிரதமர். •பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சீன அதிபர் ஜின்பிங் அவர்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய இடமான மாமல்லபுரத்திற்கு அழைத்துவந்து விருந்தளித்தவர், •2019 திருப்பூரில் நடந்த பேரணியில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை வீர்ர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்தார். •ஔவையார், திருவள்ளுவர், பாரதியார், பாரதிதாசன் அவர்களின் கவிதைகளை, பாடி அவர்களது கருத்துகளை சர்வேத அரங்கிற்கு கொண்டு சென்றார். இதன் நீட்ச்சியாக இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். •திருக்குறளை குஜராத் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பள்ளிகளில் அவர்களது தாய் மொழிகளில் மொழிப் பெயர்ப்பு செய்து பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்தார். •இந்தியாவின் முதல் பசுமை ரயில் பாதைத்திட்டம் தமிழகத்தில்தான் தொடங்கப்பட்டது. •2020 ஆம் ஆண்டு தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளை நிறுவ அனுமதி அளித்தவர் பிரதமர் அவர்கள். •முதன்முதலாக பாதுகாப்புத்துறையிலும், நிதித்துறையிலும் முதல் தமிழ் பெண் மத்திய அமைச்சராக திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களை நியமித்த பெருமைக்குரியவர் நமது பாரதப் பிரதமர். •தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தொடர்ந்து கைது செய்து வருவதைக் கண்டித்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை அடையச் செய்து தாய்நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்தது, இதைப்போல, தண்டனைக்கு உள்ளான 6 தூக்கு தண்டனை கைதிகளை விடுவித்து, தாயகம் திரும்ப வைத்தது நம் தாயுள்ளம் கொண்ட பிரதமர் அவர்களே. •இலங்கைக்கு தாரைவார்த்த கச்ச தீவை மீட்க தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டிருப்பவர். •இப்படி தமிழகத்திற்காக பிரதமர் மோடி செய்த அரும்பணிகளை நீண்ட பட்டியலிடலாம், இங்கே சுருக்கமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.Thursday, June 11, 2026
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment