இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்றும் ராமநாதபுரத்தின் 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில்..
மன்னார் வளைகுடாவில் ₹108 கோடி மதிப்புள்ள 99 கிலோ ஹஷிஷ் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு மற்றும் மதுரை ரயில் நிலையத்தில் ₹150 கோடி மதிப்புள்ள 37.64 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு என DRI பதிவு செய்த இருவேறு வழக்குகளின் அடிப்படையில் PMLA சட்டத்தின்கீழ் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. மீனவர்கள் மற்றும் படகு உரிமையாளர்களைக் கமிஷன் அடிப்படையில் பணியமர்த்தி, நடுக்கடலில் வைத்து இலங்கை தொடர்பாளர்களுக்குப் போதைப்பொருட்களை இந்தக் கும்பல் விநியோகித்துள்ளது. இந்த இரு கடத்தல்களுக்கும் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஜான் பிரிட்டோ என்பவர்தான் மூளையாகச் செயல்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிடிட்டிருகிறது ED. இந்த ஜான் பிரிட்டோ தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரும், அதிமுக MLAவுமான லீமா ரோஸ் மார்ட்டினுடைய சொந்த சகோதரர். போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் ஹவாலா நெட்வொர்க் மற்றும் கூட்டாளிகள் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய சோதனையில் இது தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஜான் பிரிட்டோ இப்போது ஏதோ ஒரு அயல் நாட்டில் தலைமறைவாகியிருக்கிறார். ஹவாலா பணப்பரிமாற்றம் குறித்த வழக்குகள் நிலுவையிலிருந்ததால் வெளிநாடு செல்ல தடையிருந்ததற்கு எதிராக கேரளா நீதிமன்றத்தில் இவர்கள், accused no8, 10, 14, 16, 1. ஜான் பிரிட்டோ 2. ஜான் கென்னடி 3. லீமா ரோஸ் மார்ட்டின் 4. டெய்சி ஆதவ் அர்ஜுனா ...தொடுத்த வழக்கில் நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் ஜாமீனில் வெளிநாடு செல்ல அனுமதி அளித்த தீர்ப்பு நகலின் லிங்க் indiankanoon.org/doc/163317915/
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment