Wednesday, June 3, 2026

கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக யார் எம்எல்ஏ ஆனால் என்ன?

 கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக யார் எம்எல்ஏ ஆனால் என்ன? யார் எம்பி ஆனால் என்ன? அமைச்சரானால் என்ன? என்கிற போக்கு உருவாகிவிட்டது. மேற்படி பதவிகளுக்கு இப்போதெல்லாம் மக்கள் அதிகம் மதிப்புத் தருவதும் இல்லை. ஒரு காலத்தில் இருந்த தேர்தல் எதிர்பார்ப்பு இன்றைக்குப் பேரம் பேசும் வணிகமாகவும் காலில் விழுந்து பதவி வாங்கும் ஆசீர்வாதம் ஆகவும் மாறிவிட்டது.. ஜனநாயகத்தின் தூண்கள் என வர்ணிக்கப்பட்ட சட்டமன்றத்தின் மீதோ அதன் உறுப்பினர்கள் மீதோ இப்போது எந்த வித மதிப்பும் மரியாதையும் இல்லை! என்றைக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்து ஜெயித்து அமர்ந்து விடலாம் என்கிற போக்கு உருவானபோதே இந்த உறுப்பினர்கள் மீது எந்த கவன ஈர்ப்பும் மக்களிடம் இல்லாமல் குறைந்து போய்விட்டது ! பணம் தான் ஓட்டையும் நாட்டையும் தீர்மானிக்கும் என்றால் இந்த அரசியலில் என்னதான் இருக்கிறது? இல்லை! 2026 பணம் இல்லாமல் வெற்றி என்ற நிலை. ஆனாலும் இதுவும் instra influence வெற்றி. Synthetic one. தவெக ரீல்ஸ் ஆட்சி இனிமேல் அரசியல் என்று ஒன்று இருக்கிறதா? என்பதே சந்தேகமாகிவிட்டது. எல்லாம் அற்பத் தனமாக அசிங்கமாக நடந்து வருவதை வெறுமனே பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கிறது! பதவியையும் அதிகாரத்தையும் பயன்படுத்தித் தங்களை வளர்த்துக்கொள்வதில் இங்கு யாருக்கும் வெட்கமில்லை! பாருங்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டை ஒரு லாட்டரி ஃபேமிலி தன் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சி செய்கிறது என்று வந்துவிட்டபின் இனிச் சொல்ல என்ன இருக்கிறது!



No comments:

Post a Comment

We all #supportGyaneshKumar CEC

  We all #supportGyaneshKumar CEC