ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலான பணிகளை மின்வாரியம் தொடங்கியிருந்தது!
மொத்த் திட்டச் செலவு 12776 கோடி ரூபாய்! மூன்றரை ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிட்டப்பட்டது!ஆனால் 2021 மார்ச்சில் பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்தனால் கட்டுமானப் பணிகள் முடங்கி இருந்தன! அதன் பின் 64 மாதங்களாக இந்தத் திட்டத்தில் எந்தப் பணிகளும் நடக்கவில்லை! உப்பூர் மின் திட்டத்திற்கு நிலக்கரி எடுத்து வர தூத்துக்குடியில் இருந்து 28 கிலோமீட்டருக்கு தனி ரயில் பாதையை முதலில் அமைக்க வேண்டும்! எனவே உப்பூர் மின் திட்டத்தை தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே மாற்ற மின்வாரிய இயக்குனர்கள் குழு 2021 ஏப்ரலில் ஒப்புதல் அளித்தன! திமுக ஆட்சி அமைந்ததும் உட்பூர் மின் திட்டத்தை அங்கேயே தொடங்கலாமா? அல்லது உடன்குடிக்கு மாற்றலாமா? என அரசிடம் மின்வாரியம் ஆலோசனை கேட்டது! இந்தப் பணியில் ஐந்து ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு ஆட்சி முடிவடையும் நிலையில் உடன்குடிக்கு மாற்றி 800 மெக்காவாட் திறனில் புதிய அனல் மின் நிலையம் அமைக்க கடந்த கால தி மு க அரசு அனுமதி அளித்தது! தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் உள்ளார்!திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்து அதற்கு ஏற்பப் பணிகளைத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது! தொடங்கிய நாளிலிருந்து இந்த மின் திட்டத்தால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது! உப்பூரில் 30% பணியுடன் திட்டம் ஏற்கனவே முடங்கியுள்ளது! இதுவரை கடனுக்கான வட்டி சேர்த்து 5000 கோடி ரூபாய் செலவாகி உள்ளது! ரயிலில் மட்டுமே நிலக்கரி எடுத்து வர வேண்டி இருப்பதனால் செலவு கூடும்! ஜெயலலிதா ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதால்தான் பழனிச்சாமி முதல்வராக இருந்தபோது அத்திட்டத்தைத் தொடர்ந்தார்! இருப்பினும் மின்வாரிய நிதி நெருக்கடி கருதி அவர் ஆட்சியிலேயே உடன்குடிக்கு மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது! திமுக ஆட்சியில் அதைத் தொடர்ந்து இருந்தால் திட்டம் எப்போதோ செயல்பாட்டிற்கு வந்திருக்கும்! ஆய்வில் தாமதம் செய்யப்பட்டு இறுதியாக உடன்குடியில் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது!! தற்போதும் அங்கு பணிகளைத் தொடங்கலாம்! அதன்படித்தொடங்கினால் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்க வாய்ப்பு உள்ளது! ஆனால் இந்த ஆட்சியிலும் திட்டத்தை ஆய்வு செய்த பிறகே செயல்படுத்த உள்ளனர்! இதனால் கடந்த ஆட்சியில் ஏற்பட்டது போல இப்பொழுதும் ஆய்வில் தாமதம் ஏற்படுமோ!? என்ற அச்சம் இருக்கிறது என்று கூறினார்.! ஏற்கனவே மின்தட்டுப்பாடு இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் இத்தகைய திட்டங்களை விரைவில் முடிக்க வேண்டிய ஆட்சியாளர்கள் பல குழப்பங்களுக்கிடையே காலதாமதப்படுத்துவது எந்த வகையில் மக்களுக்கு பலன் அளிக்கும் என்று தெரியவில்லை! ஏற்கனவே மின்வாரியக் கடன்கள் விண்ணை முட்டுகின்றன! இந்தச் சூழ்நிலையில் எந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு இந்த திட்டத்தை ஆய்வு செய்கிறார்கள் என்றும் தெரியவில்லை! அதற்கான பொது அறிவிப்புகள் வந்து பணியைத் தொடங்கும் வரை மின்வெட்டுகளோடு சிறு தொழில்கள் ஆலைகள் போன்றவற்றுக்கான முதலீடுகளுடன் மக்கள் சகித்திருக்க வேண்டியதுதான்! வேறு என்ன சொல்ல இருக்கிறது!? இந்த மின் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விரைவில் ஆவண செய்யுமா ஜோசப் விஜய் அரசு! #Uppoorpowrthermal #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost #KSRadhakrishnan
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment