Thursday, July 30, 2026

#tamilnadu_waterresoures

 #tamilnadu_waterresoures

#தமிழகத்தினநீர்ஆதாரங்கள எல்லாம் பெரும் பாதிப்பில் உள்ளது… இதோ சில… மேகேதாட் அணைப்பிரச்சனை மேகேதாட் என்று சொல்லுவதற்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த சில அறிவாளிகள் மேகதாது என்று உச்சரித்துக் கொண்டிருக்-கிறார்கள் அது தவறானது. மேகேதாட் என்றால், ஆடு தாண்டும் மலை என்று அர்த்தம். மேகேதாட் பிரச்சனையை காங்கிசும் பேசுகிறது இது வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகத்தில் நடப்பது காங்கிரஸ் ஆட்சிதானே? தமிழக காங்கிரஸ் தலைவர் கர்நாடக தலைவர்களிடம் மேகேதாட் அணையை கட்ட வேண்டாம், காவிரியில் தண்ணீர் விடுங்கள், தமிழகத்திற்கு உரிமையான நீரை விடவேண்டும். தென்பென்னை ஆற்று சிக்கல் தீர்க்கப்பட வேண்டும் ஒகேனக்கல் நீரை தமிழகம் பெற வேண்டும் என்று கூறியிருக்கலாமே? மேலும் காங்கிரஸ் கட்சியின் தோழமைக் கட்சியான தவெக முதல் அமைச்சர் திரு.ஜோசப் விஜய் தன்னுடைய அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சரை பெங்களூருக்கு அனுப்பி இத்தகைய கோரிக்கைகளை வற்புறுத்தியிருக்கலாமே? இப்போது முதல்வர் கர்நாடக செல்ல இருக்கிறார். அதைபோல, • கேரளத்திலிருந்து….. •கன்னியாகுமரி மாவட்டத்தில் 2007ல் மூடப்பட்ட நெய்யாற்று பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும். • நெல்லை மாவட்டத்தில் கொடுமுடியாறு, பச்சை ஆறு, சிக்கலைத் தீர்க்கவும், •அச்சங்கோயில், பம்பை, சாத்தூர் வைப்பாற்றோடு இணைக்கவும், • செங்கோட்டை அடைவி நயினார் அணைக்கு நீர் வரத்து வரவும், •செண்பகவள்ளி அணையை சீரமைக்கவும். • ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணை திட்டத்தை நிறைவேற்றவும். • நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் முல்லைபெரியாறு அணைப்பிரச்சனையை தீர்க்கவும், • கொங்கு மண்டலத்தில் மக்கள் பிரச்சனையாக இருக்கும் - -- •சிறுவாணி, •பம்பாறு, •அமராவதி • பாண்டியாறு- புன்னம் புழா •கர்நாடகத்திலிருந்து…… •காவேரி •மேகேதாட் •தென்பெண்னை •ஒகேனக்கல் ஆந்திரத்திலிருந்து…. •பாலாறு •பொன்னியாறு தென்பெண்ணை ஆறு நீர்ப்பங்கீட்டுத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவைத்தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது! காவிரி நதிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் இரண்டாவது பெரிய நதி தென்பெண்ணை ஆறாகும் இந்த நதி கர்நாடக நந்தி மலையில் உற்பத்தியாகித் தமிழகத்தின் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது! இந்தத் தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேயா நதியின் குறுக்கே யார்க்கோல் என்ற பகுதியில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது! இவ்வாறு அந்தப் பகுதியில் அணை கட்டப்பட்டால் கீழ் பாசன மாநிலமான தமிழகத்திற்கு நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்! இது ஆற்று நீரை நம்பி இருக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக்காட்டியும் கர்நாடகா அரசு விதிகளை மீறி செயல்படுவதாகவும் எனவே அணை கட்டுவதைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது! இந்த வழக்கை விசாரித்து உச்சநீதிமன்றம் தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கும் இடையிலான தென்பெண்ணையாறு நீர் பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்குமாறு கடந்த 2024 ஜனவரி மாதம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது! உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மத்திய நிர்வாக ஆணையத் தலைவர் தலைமையில் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசப் பிரதிநிதிகள் அடங்கிய 9 பேர் கொண்ட குழு மத்திய அரசால் அமைக்கப்பட்டது! இக்குழுவின் கூட்டம் கடந்த 2004 அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை!? இந்நிலையில் தென்பெண்ணை ஆறு வழக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது! அப்போது தமிழக அரசு தரப்பில் நீர்ப் பங்கீடு குறித்துத் தீர்வு காண்பதற்காகக் குழு அமைக்கப்பட்டு இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வி அடைந்து விட்டது! எனவே மத்திய அரசு நடுவர் மன்றம் அமைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கோரிக்கையானது தமிழ்நாடு சார்பாக முன் வைக்கப்பட்டது! அந்தக் கோரிக்கைக்குத்தான் கர்நாடக அரசு மறுப்புத் தெரிவித்திருந்தது! இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் தென்பெண்ணை ஆறு நீர்ப்பங்கீட்டுத் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு எந்த ஒரு முகாந்திரமும் காண இயலவில்லை எனத் தெரிவித்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மறு ஆய்வுக் குழுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கின்றனர்!.

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...