Monday, July 20, 2026

#முல்லைப்பெரியாறு

 #முல்லைப்பெரியாறு

——————————- கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரி ஆட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் ஆட்சியாக இருந்தாலும் தங்களுக்குள்ளாகவே முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக தமிழகத்திற்கு எதிராக நீரில் அரசியல் செய்வார்கள்! காங்கிரஸ் ஆட்சியில் இது கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்! கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் நேரடியாக இறங்காமல் சில்லரை அமைப்புகளை ஏவி தொடர்ந்து போராட வைப்பது அவர்களது வழக்கம். 2011 இல் உம்மன் சாண்டி ஆட்சியில் “முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் “என்ற கோஷத்தோடு கேரள அரசியல்வாதிகளால் நடத்தப்பட்ட போராட்ட ங்களால் அப்போதைய தேனி மாவட்ட மக்கள் கடுப்பாகிவிட்டனர்! அதை எதிர்த்து அப்போது நடந்த போராட்டத்தில் இரண்டு மாதம் போக்குவரத்து முடக்கப்பட்டது! பெரிய அளவில் பொருட்சேதங்களும் ஏற்பட்டன.! தேசியக் கட்சியான காங்கிரஸ் கேரளாவில் மட்டும் தனிக் கொள்கையுடன் முல்லைப் பெரியாறு அணைத் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது! கடந்த 35 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி பல்வேறு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அந்தக் குழு ஆய்வு செய்து அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அணை பலமாக உள்ளது எனத் தீர்ப்பு அளித்துள்ளது !!இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் அரசு அலட்சியப்படுத்துவதோடு அணை பலவீனமாக இருப்பதாகப் பொய் சொல்லி அதனால் மக்கள் அச்சப்படுகிறார்கள்! அவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டுமென தொடர்ந்து பேசுவதெல்லாம் வெறும் வெத்து அரசியல் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்! கேரளக் காங்கிரஸ் அரசின் மீது தமிழக அரசு உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்” அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி கண்டனத் தீர்மானத்தை கேரளா அரசுக்கு எதிராக நிறைவேற்ற!வேண்டும்!தமிழகத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சரவை இடம் பெற்றுள்ளது! இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு சொல்வதை காங்கிரஸ் கேட்குமா என தெரியவில்லை! எனவே இறுதியாக எச்சரிக்கிறோம்! கேரள முதல்வர் புதிய அணை கட்டுவோம் என்ற கோஷத்தைக் கைவிட வேண்டும்! இல்லை என்றால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பெரும் போராட்டங்களை மீண்டும் கையில் எடுப்போம் எனத் திண்டுக்கல் உட்பட ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் உறுதியாக உள்ளனர் கேரளாவுக்குப் பாதுகாப்பு தமிழகத்திற்குத் தண்ணீர்! என்று சொன்ன உம்மன் சாண்டியினுடைய வாக்குறுதியை மீண்டும் கையில் எடுக்கப் போகிறோம் என இன்றைய கேரளா ஆட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள்! உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி எந்தவிதப் பேச்சு வார்த்தையும் நடத்த முடியாது! அதே உச்ச நீதிமன்றம் 2021 மீண்டும் அணையின் கட்டுமானத்திற்குத்தேவையான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்லவும் சாலை அமைப்பதற்கும் அனுமதிக்க வேண்டும்! மீண்டும் மின்சாரத்தை கொடுக்க வேண்டும்! பேபி அணையைப் பலப்படுத்தவும் அதற்கு இடைஞ்சலாக இருக்கும் மரங்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது!ஆனால் இதைக் கேரளா அரசு ஏற்கவில்லை!உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் ஒரு அரசு இருக்க முடியுமா? திமுக அரசும் நான்காண்டுகளாகஅதைச் செயல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை!அதிமுக ஆட்சியில் 142 அடி தண்ணீர் திறக்கப்பட்டது!அதன் பிறகு தான் பாசனத்திற்கு உபரி நீரையும் திறந்தார்கள்! திமுக ஆட்சி காலம் முழுவதும் 142 அடி தண்ணீரை அணையில் தேக்க முடியாமலே இருந்தது.! கேரளா நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தன்னிச்சையாக தண்ணீரைத் திறந்த அவலமும் நடந்தது” பேரிடர் காலத்தில் மட்டும் தான் இம்முறையை நடைமுறைப்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது! ஆனால் கனமழை காலத்தில் அணையில் தண்ணீர் திறப்பதை தடுப்பது கேரளா செய்யும் சட்டவிரோதச் செயலாகும்! தற்போதைய கேரள முதலமைச்சர் சதீசன் ஏற்கனவே உம்மன் சாண்டி முன்வைத்த கோஷத்தையே நாங்களும் கையில் எடுத்திருக்கிறோம்! இது குறித்து நாங்கள் தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று சொல்கிறார்! இது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்!ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டத் தொழில்நுட்பக் குழுவும் அடிக்கடி அணையை ஆய்வு செய்து அணையின் உறுதித் தன்மையை வெளிப்படுத்தி வருகிறது! கடந்த மாதம் கூட ஆய்வு செய்தது! அணையின் பலம் குறித்துத் தெளிவுபடுத்தி இருக்கிறது! அணையின் பாதுகாப்புக் குழுவும் அதை உறுதி செய்து அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று தனது ஆய்வு அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் இன்றைய கேரளா காங்கிரஸை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்றபடி கட்டுப்படுத்த வேண்டும்! இல்லையெனில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்பதாகப் பல்வேறு தமிழக அமைப்புகள் தயார் நிலையில்…2

No comments:

Post a Comment

JULY 19