Tuesday, July 21, 2026

#தென்பெண்ணைஆறுவிவகாரம்

 #தென்பெண்ணைஆறுவிவகாரம்

————————————————— தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் காவிரி நதிநீர்ப் பங்ககீட்டுப் பிரச்சனை நூறு ஆண்டுகள் பழமையானது! தற்போது காவிரியின் உபரி நீரைத் தடுத்து அணை கட்ட கர்நாடகம் முயலும் பிரச்சனை உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது! இதற்கிடையே 2016 ஆம் ஆண்டு முதல் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் தனது அணையைக் கட்டியது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே மற்றொரு சட்ட போராட்டமும் நடைபெற்று வருகிறது. கர்நாடகத்தின் சிக்பனாபூர் நந்தி மலையில் பிறக்கும் பெண்ணையாறு ஆந்திரம் நோக்கிப் பாய்வதை வட பெண்ணையாறு என்றும் தமிழகம் நோக்கிப் பாய்வதை தென் பெண்ணையாறு என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் தட்சிண பினாகினி எனப்படும் இந்த ஆறு வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன் 491 கிலோமீட்டர் தொலைவு பாய்கிறது! கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டர் பாயும் இந்த நதி பெங்களூரில் ஏரிகளுக்கும் நிலத்தடி நீர்மட்டத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது! கோலார் வழியாக தமிழகத்தில் நுழையும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது! இதன் மொத்த நீர் பிடிப்பு பகுதியில் 77 சதவிகிதம் தமிழகத்தில் உள்ளது! ஆண்டுக்கு 62 டிஎம்சி நீர் பாயும் இந்த நதியில் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு சராசரியாக 3.5 டிஎம்சி நீர் கிடைக்கிறது! காவிரிக்குப் பிறகு தமிழகத்தில் பாயும்நீண்ட நதி இதுவேயாகும்!இதில் குறுக்கே கர்நாடகத்தில் மார்க்கண்டேயா அணையும் தமிழகத்தில் கிருஷ்ணகிரி சாத்தனூர் உட்பட பல அணைகளும் கட்டப்பட்டுள்ளன!மூன்று மாநிலங்களிலும் சேர்த்து ஆயிரத்து 370 சதுர கிலோமீட்டர் பரப்புக்கு பாசனம் மற்றும் குடிநீரை தென்பெண்ணையாறு வழங்குகிறது! இதில் கர்நாடகம் ஆண்டுக்கு 7டிஎம் சி தண்ணீரை பயன்படுத்துகிறது! பிரச்சனையான நீர்த்தேக்கம் என்பது தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேயாவின் குறுக்கே கோலார் மாவட்ட கிராமங்களுக்குக் குடிநீர் வழங்க சைபர் புள்ளி அஞ்சு டிஎம்சி கொள்ளளவில் ரூபாய் 240 கோடியில் அணைக்கட்ட 2007 இல் கர்நாடக அரசு ஒப்புதல் அளித்து. 2013ல் முதல் பணியைத் தொடங்கியது! இதற்கு எதிராக 1892 மற்றும் 1933 ஒப்பந்தங்களின் படி தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது! ஆனால் 75% பணிகள் முடிந்ததாலும் குடிநீருக்கு முன்னுரிமை என்பதாலும் அணை கட்டப்படுவதற்குத் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் 2019 நவம்பரில் தமிழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது! எனினும் நாலு வாரங்களுக்குள் நடுவர் மன்றம் அமைக்க தமிழகம் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிட்டது! இதற்கிடையில் திட்டமிட்டபடி அணையை முழுமையாக கட்டி முடித்தது கர்நாடகம்! இதனால் தனக்கு நேரிடும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி நடுவர் மன்றம் அமைக்க கோரி 2018 ஆம் ஆண்டில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் 2019 ல் நடுவர் மன்றம் அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டது இரு மாநிலங்களின் பிரச்சினைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ளும்படி தான் மத்திய அரசு முடிவு செய்திருந்தது.நடுவர் மன்றம் அமைக்கும் முன்மொழிவை 2023 ஆம் ஆண்டு அனுப்பி இருந்தாலும் இந்த விவாகரத்தில் 2024ல் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவின் சமரச முயற்சிகளும் தோல்வி அடைந்தன. இந்த விஷயத்தில் இரு மாநில வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் என்வி அஞ்சாரியா அமர்வு கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி அளித்த தீர்ப்பில் தென்பெண்ணையாறு நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண ஒரு மாதத்திற்கு (மார்ச் 3) நடுவர் மன்றம் அமைத்து அரசிதழில் அதன் விவரத்தை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. நீதிமன்றக் கெடு முடிந்தும் இரு மாநிலங்களில் பிடிவாத போக்கினால் மத்திய அரசு நடுமன்றம் அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டு வந்து கொண்டே இருந்தது. அந்த நேரத்தில் தமிழகம் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொண்டு இருந்ததால் அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்!நடுவர் மன்றம் அமைத்த பிறகு எத்தனை ஆண்டுகள் கழித்து இறுதி தீர்ப்பு கிடைக்கும் என்பது தெரியாது! என்றாலும் அதற்கான முதல் படியாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பதுதான் தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளாகும்! நான் ஏற்கனவே சொல்லி வந்தபடி கர்நாடகம் ஆந்திரம் தெலுங்கானா போன்ற மாநிலங்கள் தங்களுடைய நீர்வள ஆதாரங்களை ஒன்றிணைந்து பாதுகாத்துக் கொண்டது போல தமிழக அரசும் ஆந்திரம் கேரளா கர்நாடகா போன்ற அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நதி நீர் வளங்களில் தங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு இணக்கமான சூழலையும் நட்பையும் பேண வேண்டும். வீண் பிடிவாதங்கள் விவசாயிகளைத் துன்புறுத்தும் உயிர்ஆதாரங்களை இழக்கச் செய்யும்

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...