மாநில உரிமைகள் பற்றி வாய் கிழியப்பேசும் இவர்களின் அண்டை மாநில உறவுகளின் லட்சணம் இதுதான்! கேட்பவர்களுக்கும் புத்தி இல்லை தருபவர்களுக்கும் புத்தி இல்லை.!
முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள், தனது தோழமை கட்சியான காங்கிரஸ் ஆளும் கேரள அரசுடன் பேசி முடிவெடுக்கலாமே? என்ன தயக்கம் இருக்கிறது. தவெக தோழமை கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் திரு.ஜோசப் விஜயை அழைத்துக்கொண்டு கேரளா சென்று பேச்சு வார்த்தை நடத்தலாமே? இண்டிக் கூட்டணி மண்டி கூட்டணி என்று தென் மாநிலங்கள் யாவும் இணைந்து மத்திய அரசிடம் சுய நிர்ணய உரிமையைக் கேட்போம் என்றெல்லாம் வாய்ச்சவடால் அடித்த இந்தத் தென் மாநில முதலமைச்சர்கள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமை காண வேண்டி விட்டுக் கொடுத்து இந்தப் பிரச்சனையைத் தாங்களாகவே தீர்த்திருக்கலாமே? கர்நாடகக் காவிரிப் பிரச்சனை முதல் கொண்டு பல நதிகளின் வழக்குகள் குறித்து நான் ஏற்கனவே பலமுறை எழுதி வந்துள்ளேன். பொதுநல வழக்குகளையும் தொடுத்து நீண்ட காலத்திற்குப் பிறகு தேசிய ந்திகள் இணைக்க வேண்டும் என 2012 இல் தீர்ப்பையும் பெற்று இருக்கிறேன்! அதையெல்லாம் வழக்கு மன்றத்தில் வைத்து வாதாடத் தகுதியான ஆட்கள் இல்லையே? இப்படியான அண்டை மாநிலங்களின் போக்கானது தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக ஆக்குவதற்கான சதியாகவே எனக்குத் தோன்றுகிறது! தமிழ்நாட்டை ஆள வருபவர்கள் கவனத்தில் இது எவ்வளவு தூரம் தீவிரமாக யோசிக்கப்பட்டு அதற்கான சட்ட முயற்சியில் எப்போது ஈடுபடப் போகிறார்கள் என்பதில் எனக்கு சந்தேகமும் அவநம்பிக்கையும் இருந்து கொண்டே இருக்கிறது. காவிரி நதிநீர் ஆணையப் பிரச்சனையும் கேரளா முல்லைப் பெரியாறு பிரச்சனையும் சமீபத்தில் நடுவர் மன்ற ஆணையங்களில் தொடர் வழக்காக விசாரிக்கப்பட இருக்கிறது! இப்பொழுது சுதாரித்து நமக்கான நீர் உரிமையைக்கோரிப் பெற முடியாவிட்டால் பிறகு எப்போதும் அதற்கான தீர்ப்பை தமிழகம் பெற முடியாமல் போகும்.! இந்த நதிநீர்ப் பிரச்சினைகள் சயந்தவன் கழுதை போல நீடித்துக் கொண்டே தான் இருக்கும்! எனில் யார் பூனைக்கு மணி கட்டுவார்கள்!? ஏற்கனவே மத்திய அரசு இதில் தலையிட்டு மாநிலங்களின் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்ளும்படி இணக்கமான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கிறது. மக்களின் ஆதாரப் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருக்க இவர்களுக்கிடையே குதிரை பேர அரசியல் அடிதடிகளில் தான் காலம் கடந்து கொண்டிருக்கிறது! ராசிமணல் ஓகேனக்கல் அருகே, மேட்டூர் அணைக்கு முன்பாக, காவிரி நதி தமிழக எல்லைக்குள் நுழையும் பகுதியிலேயே ராசிமணல் அமைந்துள்ளது. இது இரு மாநிலங்களின் எல்லையையொட்டிய இடமாக இருப்பதால், “நமது மண்ணுக்குள் அணை கட்டப்படுகிறது” என்ற அச்ச உணர்வு இல்லாமல், கூட்டு உரிமையுடன் திட்டமிட முடியும் என்பது இதன் முதன்மையான கவர்ச்சி. இரு மாநிலங்களுக்கும் பொதுப் பலன் மழைக்காலங்களில் மேட்டூர் அணை நிரம்பியவுடன் மிகுதி நீர் கடலுக்கு வீணாகச் சென்றுவிடுகிறது. இந்த வீணாகும் நீரை ராசிமணலில் தேக்கி வைக்க முடிந்தால், சுமார் 60 முதல் 66 டி.எம்.சி வரை நீரைச் சேமிக்க முடியும் என மதிப்பிடப்படுகிறது. இது கோடைக்காலத்தில் இரு மாநிலங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கும் பயன்படும். மேலும், சுமார் 360 மெகாவாட் நீர்மின்சாரம் தயாரிக்கும் திறனும் இந்த திட்டத்திற்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது — இதுவும் இரு பக்கமும் பங்கிடப்படக்கூடியது. காவிரி நதிநீர் தீர்ப்பாயமும், உச்ச நீதிமன்றமும் ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருப்பது என்னவெனில், காவிரியில் புதிதாக எந்த அணையும் கட்டப்பட வேண்டுமானாலும் அது காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலைப் பெற்றே ஆக வேண்டும். மேகதாட்டு திட்டம் தொடர்ந்து இந்தத் தடையில் தான் சிக்கிக் கொள்கிறது; தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அதை முன்னெடுக்க முடியாத நிலை உள்ளது. ஆனால் ராசிமணல் திட்டம் ஆரம்பத்திலிருந்தே இரு மாநிலங்களின் கூட்டு முயற்சியாக வடிவமைக்கப்பட்டால், இந்தச் சட்டச் சிக்கல்களை பெருமளவு தவிர்க்க முடியும். “இரு மாநில அரசுகளும் இணைந்து கட்டும் அணை” என்ற அடிப்படையில் இது நகர்ந்தால், நம்பிக்கையின்மை குறைந்து, ஒப்புதல் பெறுவதும் எளிதாகும். மேகதாட்டு பகுதியில் அணை கட்டப்பட்டால், பரந்த வனப்பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் நீண்டநாள் கவலை. ராசிமணல் ஏற்கெனவே பரவலாக நீர்நிலைகள் நிறைந்த பகுதி என்பதால், ஒப்பீட்டளவில் குறைந்த சூழலியல் பாதிப்புடன் திட்டத்தை செயல்படுத்த முடியும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். நீரின்றி எந்த நகரமும், எந்த வேளாண்மையும் தாக்குப்பிடிக்க முடியாது என்பது இரு மாநிலங்களுக்குமான உண்மை. மேகதாட்டு போன்ற ஒருதலைப்பட்சமான திட்டங்கள் நம்பிக்கையின்மையையும்
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment