மிக்கது!
இந்த காக்ரோச் ஜனதா பார்ட்டியை சேர்ந்தவர்களுக்கு வெறும் நீட் தேர்வுகள் மற்றும் கல்விக் கொள்கைகள் மட்டும் போராடுவதற்குக் காரணமாக இருக்கவில்லை.! தங்களுடைய தவறான முடிவுகளால் ஒரு காலத்தில் இருந்த மகிமை மிக்க தங்களது தேசிய வலிமைகளை இழந்துவிட்ட கடந்த கால காங்கிரஸின் வெற்றிடத்தைத் தான் இவர்கள் இது மாதிரி எதிர்ப்பு உணர்வுகளால் நிரப்ப விரும்புகிறார்கள். என்ன விதமான அரசியல் செய்தாலும் இவர்களும் அந்நிய சக்திகளுக்கு விலை போவார்கள் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை! பிறகு சுதந்திர இந்தியா உருவான காலத்தில் இருந்த இரு பெரும் தேசிய அமைப்புகளில் முக்கியமானதாக இருந்த காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகள் எவ்வாறு தேய்ந்து கட்டெறும்புகள் ஆகி வருகின்றன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். இவர்களின் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற முடிவுகளால் மாநில பிராந்திய கட்சிகள் இந்தியாவில் தனிநாடு கோரிப்பெற முயலும் போராட்டங்களையும் மிகுந்த வன்முறைகளோடு சந்தித்தார்கள் என்பதும் இதில் உள்ளடக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவை ஒருங்கிணைக்கக்கூடிய மாபெரும் சக்தியாக இருக்கக்கூடிய எல்லோரையும் சகித்துக் கொள்ளக்கூடிய இந்து மதத்தின் பெயரிலான ஒரு கூட்டாட்சி அமைப்பை இத்தனை காலமும் அரசியல் பூர்வமாக உருவாக்க முடியாமல் இருந்தது தான் இதன் காரணமாக இருக்க முடியும்! ஏனெனில் கிறிஸ்துவ நாடுகள் இஸ்லாமிய நாடுகள் பௌத்த நாடுகள் என்று பரந்துபட்ட உலக நாடுகள் யாவும் தங்களுக்கு என ஒரு மத அடையாளத்தை சூடி கொள்வதன் மூலம் இப்போதும் வலிமையாக தான் இருக்கின்றன. ஆனால் இந்தியா மட்டும் இந்து நாடு என்கிற பெயரில் இருக்கக் கூடாது என்பதில் ஏன் எத்தனை வன்மம்! அதுதான் 140 கோடி இந்தியஸமக்களுக்கும் இடையே தங்களது சந்தை விரிவாக்கத்தின் சுரண்டலின் ஆதாரத்தை தக்க வைத்துக் கொள்வதாக இருக்கிறது. அத்தனை பண்பாட்டுப் பிரிவினை வாதங்களுக்கும் அடியிலும் இவர்களை ஒருங்கிணைத்த அந்த மாபெரும் சக்தி எது என்பதை இந்தியப் புராண இதிகாசக் காவிய கலை மற்றும் பண்பாட்டு கலாச்சாரங்களின் வடிவில் இருந்து தான் ஒருவர் அதை பார்க்க முடியுமே ஒழிய இந்தச் சிறு சிறு கும்பல் கலாச்சாரங்களால் கும்பல் போராட்டங்களால் இங்கு ஒன்றை நிறுவ முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்தியத்தீபகற்ப நாடு எத்தனை படையெடுப்புகள் நடந்த போதும் எத்தனை ஆக்கிரமிப்புகள் கொள்ளையடிப்புகள் நிகழ்ந்த போதும் பல்லாயிரம் வருடங்களாக தனித்தன்மை கண்டு வந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது. அதற்கு இந்துத்துவம் என்கிற பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகள் தான் உயிர் கொடுக்கிறது!அதற்கு பங்கம் ஏற்படாமல் இருக்கும் வகையில் தான் இன்றைய பாரதிய ஜனதாக் கட்சி தனது செயல்முறைகளை வகுத்தும் இந்திய இறையாண்மை மீது ஒரு அரணாகவும் நிலவுகிறது என்பதை புரிந்து கொண்டவர்களுக்கு அதிகம் விளக்க வேண்டியது இல்லை! தேச வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக மேலிருந்து விஷமூட்டப்பட்ட இந்த காக்ரோச் ஜனதாக் கும்பல்கள் பரிந்துரைக்கும் காரணங்கள் இந்திய வரலாறு முழுக்க இருப்பவை தான். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் தனித்தன்மை காக்கப்பட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.Tuesday, July 28, 2026
Subscribe to:
Post Comments (Atom)
Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.
Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment