Thursday, July 30, 2026

"ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

 "ஆறு என்பது வெறும் தண்ணீரல்ல; அது தன் இரு கரைகளிலும் வரலாற்றையும், கலையையும், மனித நம்பிக்கைகளையும் சுமந்து வரும் ஒரு ஜீவநதி."

- தி.ஜானகிராமன் •••• கொள்ளையடிக்கும் நோக்கில் எங்கள் நிலத்தை பாலைவனமாக ஆக்கிய பாவிகள் எங்களின் கல்லணை கால்வாய் என்கிற புது ஆறு என்பது சர் ஆர்தர் காட்டன் மற்றும் கர்னல் டபிள்யூ.எம். எல்லீஸ் அவர்களால் சேர்ந்து உருவாக்கப்பட்டது அது உருவாக்கப்படுவதற்கு முன் நூற்றுக்கணக்கான ஏரி மற்றும் குளங்கள் இருந்தன அதற்கான நீர் ஆதாரங்களாக பல்வேறு காட்டு வாரிகள் இருந்தன உதாரணமாக முதலைமுத்துவாரி செம்புடான் வாரி இப்படியாக பல்வேறு வாரிகள் இந்த ஏரிகளை நிரப்பின இவை வருடம் முழுவதும் நீர் ஆதாரத்தை கொடுத்துக் கொண்டே இருந்தன ஆடு மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நீர்பஞ்சம் என்று இருந்ததே இல்லை அதற்குப் பிறகு வெள்ளைக்காரர்கள் உருவாக்கிய கல்லணை கால்வாய் ஆறு திட்டத்தில் இந்த வாரிகளில் வரும் நீர் கல்லணை கால்வாய் கலக்காமல் நேரடியாக வெண்ணாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் கலந்து செல்வது போல் கல்லணை கால்வாய்க்கு கீழ் ஒரு வடிகால் வாய்க்காலை உருவாக்கி அதன் வழியாக வாரி நீரை #வெண்ணாறு மற்றும் #குடமுருட்டி ஆற்றில் கொண்டு சேர்த்தார்கள் வழக்கம்போல் வாரி ஏரிகளை நம்பி இருந்த விவசாயிகளுக்கு கால்நடைகளுக்கு #கல்லணைகால்வாய் ஒரு தீர்வாக இருந்தது எனக்கு விவரம் தெரிந்து எவ்வளவு கோடையிலும் கல்லணை கால்வாயில் நீர் இருந்து கொண்டே இருந்தது அதுதான் எங்களுக்கு நீர் ஆதாரம் குடிப்பதற்கு குளிப்பதற்கு ஆடு மாடுகளுக்கு நீர் வற்றிய கோடையிலும் கூட மணலை நோண்டி நீர் எடுத்துக் கொண்டிருந்தோம் எங்களுக்கும் மாடுகளுக்கும் யாரோ ஒரு புண்ணியவான் ஒரு திட்டத்தை முன் வைத்து கொள்ளையடிப்பதற்கு எங்கள் கல்லணை கால்வாயை பயன்படுத்திக் கொண்டு விட்டான் கால்வாய் முழுக்க கான்கிரீட் போட்டுவிட்டு எங்கள் நிலம் இன்று பாலைவனமாக ஆகிவிட்டது. விரைவில் மக்கள் எழுச்சியோடு. கான்கிரீட் தளத்தை உடைத்து மணலை மேலே கொண்டு வந்து எங்களுக்கான நீரை நாங்கள் எடுத்துக் கொள்வோம் எங்கள் நிலம் எங்கள் நீர் !



No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...