Thursday, July 30, 2026

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைகொண்டு செல்ல தமிழ்நாடு அரசுதடை விதித்து சுமார் 12,

 அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களைகொண்டு செல்ல தமிழ்நாடு அரசுதடை விதித்து சுமார் 12, மணிநேரம் கூட ஆகவில்லை, அதற்குள், உடனே கேரள முதல்வர் மலையாள அரசியல் வாதிகள், ஒருபுறம், மறுபரிசீலனை, கண்டனம், கட்டுமான தளவாட பொருள்கள் கிடைக்காமல் திண்டாட்டம், மறுபுறம், தமிழ்நாட்டின் கனிம வளங்களையே, சுரண்டித்தின்னும் அரசியல் பணப் பேய்களையும், வண்டி ஓட்டுனர்களையும், அரசியலற்ற குளப்பவாதிகளைக்கொண்டு, தமிழ்நாட்டில் தூண்டிவிட்டு மலையாள அரசு சுயலாபமடைய பலவழிகள் கொண்டு கையாளத் துடிக்கிறது, ஆனால், வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை தமிழ்நாட்டிற்கு கொடுக்கமறுத்தும், இயற்கை மழை கொடுக்கும் மலை முகடுத்தண்ணீரையும், காலம் பொய்த்தாலும், கருணையாக கொடுக்கும் மலை ஊற்றுத்தண்ணீரும், நமக்கு கொடுக்கமறுக்கும் மலையாள அரசுக்கு தமிழ்நாட்டு கனிமவளங்கள் தேவையாகிறது

மலையாள நாட்டில் மலைகள் இல்லையா கனிம வளங்கள்தான் இல்லையா இருக்கின்றது ஆனால் தம்நாடு கனிமவளம் நிறைவோடு இருக்கவேண்டும், கனிமவளம் சூரையாடப்பட்டால், கட்டாயம் நிலநடுக்கம் வரும், வந்தால் நாடு பிழைக்காது என்ற உணர்வை மலையாள மக்களுக்கு பால பள்ளியிலே நாட்டுப்பற்றையும்,வாழ்வுபற்றையும், புரிதலுடன் கற்றுக்கொடுத்து நாட்டை உயிரென போற்றுகிறான்! ஆனால், தமிழ்நாட்டில் அனைத்தும் கானல்நீராகவே உள்ளது, அன்னை செண்பகவள்ளி, கன்யாமதகு தடுப்பு அணை அமைந்து உள்ள இடம் முழுக்க முழு இடமும் நமது தமிழ்நாட்டு எல்லைக்குள் இருக்கிறது இருந்தலும் அதை பராமரிக்கும் யோக்கியதை நம்மிடம் இல்லை காரணம் சில்ர, துட்டு, பணம், காசு, மணி, சம்பு, செம்பு, போன்ற சொறிபிடித்த அரசியலால் இதுவரை தமிழ்நாட்டு விவசாயிகள் கேட்பாரற்று, நாதியில்லா விவசாய உயிரற்று போயிருந்தான் இன்று ஏதோ ஒர் உறை கேட்டுள்ளது, இன்று கனிமவளம், இனி நீர்வளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களிடையே வரும், என்ற ஏக்கத்துடன், தமிழன்னை செண்பகவள்ளி தாயை வேண்டுவோம் அனைவரும்! வருவாள் தாய் அருள்வாள் தண்ணீராய், நாடெங்கும் பசுமை நல் மணிகளாய் விவசாயம் வரபுயர நீர்உயரும் நீர் உயர நெல்உயரும் நெல்உயர குடி உயரும் குடி உயர கோன்உயரும் அஃகோன் உயர (நல்லரசு) மக்கள் சிறந்த வாழ்வு பெறுவர்!

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...