Tuesday, July 28, 2026

#காக்ரோச்ஜனதாபார்ட்டி என்கிற பெயரில் ஒரு புதிய குழு ஒன்று உருவாகி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்திரில் நாடாளுமன்றத்திற்கு முன்பு நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

 #காக்ரோச்ஜனதாபார்ட்டி என்கிற பெயரில் ஒரு புதிய குழு ஒன்று உருவாகி அவர்கள் டெல்லி ஜந்தர் மந்திரில் நாடாளுமன்றத்திற்கு முன்பு நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு இயக்கம் ஒரு குழு ஒரு மாபெரும் ஜனநாயக அமைப்பின் மீதான எதிர்ப்பைத் தூண்டுகிறது என்றால் முதலில் ஆளும் அரசுக்கு எதிரான சில நியாயமான காரணங்களுக்காக போராடுகிறோம் என்கிற பெயரில்தான் உருவாகும்! அது அப்படித்தான் நடக்க வேண்டும் அதில் தவறு ஒன்றும் இல்லை!ஆனால அத்தகைய போராட்டங்கள் மக்கள் நலன் கருதி இயல்பாக நடந்ததெல்லாம் கடந்த கால வரலாறு! இப்போது எல்லாம் வளர்ச்சி பெறும் தேசிய நாடுகளுக்கு எதிராக அதன் உள் தன்மைக்கு உள்ளேயே அதனை எதிர்ப்பதாகச் சொல்லும் இத்தகையஸ திடீர் அமைப்புகளுக்குப் பின்னணியில் இருந்து கலகத்தைத் தூண்டுவது என்பது சர்வதேச சதியில் ஒன்றாக இருக்கிறது! காரணம் ஒரு நாடு தனக்குள் உள்நாட்டுக் கலகத்தை போராட்டத்தை அது எத்தனை விதத்திலும் நியாயமான காரணங்களாக இருந்தாலும் அதை பெரிதாக்கி ஊதிப் பெருக்கி அதனால் விளையும் குழப்பங்களின் மூலம் அதை கட்டுப்படுத்தி மீண்டும் தனது ஆதிக்கத்தில் கொண்டு வருவது என்பது இன்றைய வல்லரசு நாடுகளின் தந்திரமாக இருக்கிறது. இதற்கு அவர்கள் படித்த மத்திய தர வர்க்கத்தின் பிரதிநிதிகளாய் இருப்பவர்கள் அல்லது மேற்கத்திய நவீனத்தை பின்பற்ற வைக்கும் ஒரு குழுமத்தை தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மாறாக அந்த தேசிய நாடு தனது தேசத்தில் வாழும் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களையும் தான் பாதுகாக்க முயல்கிறது ஆனால் சர்வதேச பொருளாதாரத்திற்கு அது ஒரு பொருட்டு அல்ல! இந்தக் காக்ரோச் பார்ட்டியின் தலைவர் அத்தகைய வகுப்பைச் சேர்ந்தவர் தான்! இன்றைக்கு பல நாடுகள் தங்களின்தேசியப் பொருளாதாரத்தைத் தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கும் போது இத்தகைய தனி நபர்கள் மூலம் உருவாகும் கலகக் குரல்களை அல்லது எந்த அரசியல் வரலாற்று அறிவுமற்ற இப்படியான இளைய விட்டில்ப் பூச்சி கூட்டங்களை ஊக்குவிப்பது என்பது ஒரு சர்வதேச பயங்கரவாதத்தின் கண்ணி தான்! என்பதில் சந்தேகம் இல்லை! இந்த இளைய கூட்டங்கள் தான் இன்றைய சர்வதேச சந்தையில் நுகர்வாளர்களாக இருக்கிறார்கள்! இவர்களுக்கு இன்றையதாராளப் பொருளாதார வாதத்திலிருந்து ஏதும் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் உள்நாட்டில் போராட்டத்தைத் தொடங்கி விடுகிறார்கள்! இதை ஊக்குவிப்பது யார் என்பதைத்தான் தேச விழுமியங்களைப் பாதுகாக்க நினைக்கும் செவ்வியல் அறிவு ஜீவிகள் கவனித்துப் பார்க்க வேண்டும். பாரதிய ஜனதா பார்ட்டி ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது மாதிரியான சூதாட்டங்கள் வெளியில் இருந்து நிகழ்த்தும் சக்திகளால் தீர்மானிக்கப்படுகின்றன. நான் கேட்கிறேன் இந்தியாவின் தேசிய ஒற்றுமைக்கும் அதன் அனைத்து உற்பத்தி சக்திகளுக்கும் அதன் சுதேசி தேவைகளுக்குமான அரசாங்கத்தை அந்த மக்கள் தங்களுக்குப் பிடித்தமான முறையில் தேர்ந்தெடுக்கும் பொழுது அவை தன்னிறைவு கொண்டு விடக் கூடாது என்பதற்காகவும் எந்த வகையிலும் அவர்கள் தங்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என்கிற அதிகார மூலதன சக்திகள் இது மாதிரியான காக்ரோச் பார்ட்டிகளை உருவாக்கிப் பொது அமைதியைக் கெடுப்பதன் மூலம் அங்கு நிலவும் வலிமையான ஆளும் அரசை அச்சுறுத்தி தங்களுக்குக் கீழ்ப்படிய வைப்பதில் வெற்றியும் பெற்று விடுகின்றன.! இது உண்மையில் நமது தேசத்தின் மீது நிகழ்த்தும் பயங்கரவாதம் என்று சொல்வதன்றி இந்த இளைய சமூகத்தைத் தூண்டிவிடுகிற செயல்களில் பல்வேறு உலக அரசியல் பார்வைகள் இருக்கின்றன என்பதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு இந்தியாவை பாதுகாத்து வருவது சர்வதேச கடன் உதவிகள் இந்திய தொழில் முறை உற்பத்திகள் மற்றும் உள்நாட்டு வரிகள் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகள் மட்டுமல்ல. சரியாகச் சொன்னால் இந்துக்களை இந்துக்களே ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் ஆகவே அவர்களுக்கிடையே நமது சந்தையை விரிவாக்குவதற்கான தடைகளை அவர்கள் தங்களின் சகிப்புத் தன்மையால் அல்லது சுதேச உற்பத்தி தன்மையால் தங்களுக்குள்ளே கட்டுப்படுத்திக் கொண்டு நமது சுரண்டலை எதிர்ப்பார்கள் என்கிற அச்சம் தான் இந்த சர்வதேச மாபியாக்களுக்கு வல்லரசு நாடுகளுக்குச்சிக்கலாக இருக்கிறது! அந்த வகையில் நமது பிரதமர் மோடி நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல பல்வேறு அண்டை நாடுகளுக்குப் பயணம் செய்து அவர்களுக்கு இடையே ஒவ்வொரு தேசிய தனித்த பொருளாதாரத்தை தக்க வைப்பதற்கான கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வந்து கொண்டே இருக்கிறார். பல்வேறு நலன்கள் அவர்களுக்கிடையே ஒப்பந்தங்களாக பரிமாறப்பட்டு வருவது வல்லரசு நாடுகளுக்குப் பிரச்சனையாக இருக்கிறது! இதற்கு அப்பாற்பட்டு நான் சொல்ல விரும்புவது இந்தியா ஒரு தனித்த சிந்தனை உள்ள தத்துவங்கள் உள்ள இறையாண்மை மிக்க பல்வேறு அறிஞர்களின் கூட்டமைப்பு சார்ந்த டெரிட்டோரியல் வலிமை

No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...