Thursday, July 30, 2026
#TamilnaduCMO
—————————-
முதலமைச்சரது அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுகிறது என்று சொல்லுகிறார்கள்!..
கடந்த காலத்தைப் பார்க்கும் பொழுது வெறும் மின்விசிறி நாற்காலிகளை வைத்துக்கொண்டு நேர்மையின் சிகரம் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பணிபுரிந்த காலங்கள். இன்றைய காலங்கள் போல் ஏ சி யெல்லாம் இல்லாமல் தன் அலுவலகத்தில் பணி செய்த உத்தமர் குமாரசாமி ராஜா அதற்கடுத்த ராஜாஜி காமராஜர் மற்றும் பக்தவச்சலம் ஏன் அண்ணா வரை அவர்கள் பணிபுரிந்த முதலமைச்சர் அறைகள் யாவும் குளிர்சாதன அறைகளாக மாற்றப்பட வில்லை. வெறும் மின்விசிறி மர மேசை நாற்காலிகள்தான். என்னைப் பொறுத்தவரையில் கலைஞர் எம்ஜி ஆர் வரை அந்த முதலமைச்சர் நாற்காலிக்கு மதிப்பு இருந்ததாக நினைவு! மற்றபடி பிறகு அதில் அமர யாரோ வந்தார்கள் யாரோ போனார்கள். மேற்சொன்னவர்கள் மீது இருந்த மானசீகமான பற்றுகள் எல்லாம் இப்போது வந்திருப்பவர்கள் மீது எனக்குக் கிடையாது!
அப்படியான மகாபானுபவர்கள் அமர்ந்து மக்கள் பணி செய்த அந்த அறையை விட்டுவிட்டு இப்பொழுது ஜோசப்விஜய் நாமக்கல் கவிஞர் மாளிகைக்குத் தனது அலுவலகத்தை மாற்ற விரும்புகிறார் என்றால் அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.! ஒருவேளை கடற்கரைக் காற்று அங்கு வீசுவதால் கொஞ்சம் வசதியாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ?
நாட்டையும் மக்களையும் நினைத்து தங்களது வசதிகளை எதிர்பாராமல் அவர்களுக்காகப் பணி செய்த நேர்மையான பல முதலமைச்சர்களின் அக்னியான காலங்கள் போய் இப்போது கால் மேல் கால் போட்டு கொண்டு கடற்காற்று வாங்குகிற முதல்வர்கள் வந்து விட்டார்கள். நடிகர்கள் என்பதால் அதிகம் வியர்க்கும் போல!
இனி என்ன தனது சகாக்களுடன் வசதியாக அமர்ந்து அரட்டை அடிக்கலாம். ஏன் சூட்டிங்கே நடத்தலாம்!
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment