#மோடியின் கடந்த கால விடயங்களில்….
————————————————————- இன்றைக்கு நீட் தேர்வு விசயத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை ராஜினாமா செய்ய வைத்திருப்பதன் மூலம் மோடி அவர்கள் பின்வாங்கி விட்டார் என்று சொல்பவர்களுக்கு நாம் ஒன்றைச் சொல்ல வேண்டி இருக்கிறது.! மக்களுக்கு என்ன விருப்பமோ மக்கள் எந்த வழியை நம்புகிறார்களோ அதையே தான் மோடியும் விரும்புகிறார்!!! கடந்த கால மோடி ஆட்சியில் நடந்தவற்றை கவனித்தில் கொள்ள வேண்டும் 2015 இல் அவர் பதவியேற்ற பிறகு நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2015 இல் அமலுக்கு வரும் நேரத்தில் விவசாயிகள் தொழிற்சாலைகளுக்கும் நிறுவனங்களுக்கும் நிலங்களைக் கொடுத்து விட்டால் விவசாய நிலங்கள் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்படும் என்று மக்கள் போராடிய போது அந்தச் சட்டத்தை மோடி திரும்பப் பெற்றதெல்லாம் உண்டு! அதன் பிறகு பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு சார்ந்த மி டூ விவகாரத்தில் கடுமையான சர்ச்சைகள் எழுந்த போது 2018 ல் தனது அவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் எம் ஜே அக்பரையே ராஜினாமா செய்யச் சொல்லி பதவி நீக்கினார்! 2021 இல் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக நடந்த போது அந்தச் சட்டங்களையும் மக்கள் நலன் கருதித் திரும்ப பெற்றார்! அதே போல யு பி எஸ் சி 2024 குடிமை பணிக்கு நேரடி சேர்க்கை திட்டத்தின் மீதும் எதிர்ப்பு வந்த போது அதையும் மக்கள் கோரிக்கைக்கு இணங்க ரத்து செய்தார். அதேபோல 2025இல் அரசியல் அமைப்பு சட்டம் 131 வரைவிற்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு வந்தவுடன் அதைத் தானாகவே கை விட்டார். விவசாய வளர்ச்சிக்காக சில குறிப்பிட்ட நன்மையான திட்டங்களை அறிமுகம் செய்யும்போது அது உண்மையிலேயே மக்களைப் பாதிக்கிறது! அதனால் எதிர்ப்பு வருகிறது! என்று அறிந்தவுடன் அதை வன்முறையாக நிறைவேற்றுவேன் என்றெல்லாம் அடம் பிடிக்காமல் மக்கள் மனதைப் புரிந்து கொண்டு அவற்றையெல்லாம் விலக்கிக் கொண்டார். அதேபோல்தான் இன்றைக்கு இந்த நீட் விவகாரத்தில் கேள்வித்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வித்துறை அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்திருப்பதை மோடிக்கு பயம் ஏற்பட்டு போல ஏதோ எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று கொண்டாடுபவர்களுக்கு மோடியின் கடந்த கால அரசியல் வரலாறுகள் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை என்று தான் நான் சொல்ல வருகிறேன். எதையும் தெரியாதவர்கள்தான் வெற்று ஆர்வக்கோளாறுகளில் இப்படிப் பேசிக் கொண்டிருப்பார்கள்! எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களுக்கு அது பிடிக்கவில்லை என்றால் அதைத் திரும்ப பெறுவது தானே ஒரு நாகரிகமான அரசியல் தலைவனுக்கான இலக்கணம்!அதைத்தான் மோடி செய்கிறார். இந்த நியாயமான சரியான முடிவை அவர் எடுத்ததை பின் வாங்கல் என்று சொல்வதற்கு யாருக்கும் யோக்கியதை இல்லை! மோடி ஆட்சிக்கு வந்த காலத்தில் இருந்து இப்படியான ஜனநாயக முறைகளோடு மக்களுக்குப் பிடிக்காதது எது ஒன்றையும் வலுவந்தமாகச் செய்யக்கூடாது என்கிற இறையாண்மைக் கொள்கையின் படி 15 வருடங்களாக அவர் தனது அரசியல் மாண்பைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறார். மட்டுமில்லாமல் சர்வதேச அரங்கில் இந்தியாவின் அரசியல் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதோடு அதற்கான செயல்த் திட்டங்களை ஒரு பிரதமர் என்கிற முறையில் அவர் இதுவரை நல்ல முறையில் கடைபிடித்து வருகிறார். உள்ளூர் சக்திகள் மற்றும் அந்நிய சக்திகளுக்கு இடையே ஏற்படும் தேச குழப்பங்களுக்கும் அவர் மனம் கொடுக்கிறார்! ஆனாலும் இதற்கு அப்பாலும் அவரை புரிந்து கொள்வது ஒரு தேசத்தையே புரிந்து கொள்வதற்கு சமமானது என்பதை இந்த வீண் கலகக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! #ModiGovernment #GenZ #cjp #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost #KSRadhakrishnan
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment