Tuesday, July 28, 2026

#எட்டயபுரம்பள்ளு

 #எட்டயபுரம்பள்ளு

————————— முக்கூடற்பள்ளு (சங்க காலம் என்பது கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3-ஆம் நூற்றாண்டு வரையிலானது. ஆனால், முக்கூடற் பள்ளுவின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு (நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலம்) ஆகும். எனவே இது காலத்தால் மிகவும் பிற்பட்டது) என்கிற ஒரு வகைமை இருப்பது மாதிரி எட்டயபுரம் பள்ளு என்ற ஒன்று இங்கே இருக்கிறது! இந்த எட்டையாபுரம் பள்ளு வில் நாட்டார் வழக்குகள் அதாவது இன்றைய திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் விருதுநகர் மாவட்டம் போன்ற தெற்குச் சீமையின் அதாவது தென்பாண்டிச் சீமைகளின் நிலவியல் வாழ்வியல் மற்றும் அந்தக் கரிசல் மண்ணின் பண்புகள் குணங்கள் மட்டுமல்லாமல் பல வரலாற்றுச் செய்திகளையும் இந்த எட்டையபுரம் பள்ளு தனக்குள் கொண்டிருக்கிறது.. குறிப்பாக இந்தப் பகுதியில் கரிசல் மண் சார்ந்த விவசாய மக்கள் எவ்வாறு பாடுபடுகிறார்கள் அவர்களுடைய வாழ்க்கைச் சித்திரம் எவ்வாறு இருந்தது என்பதற்கான ஒரு முக்கிய ஆவணமாகவும் இந்தத் தொகுப்பு இருக்கிறது.! அத்துடன் எட்டயபுரத்தில் எவ்வாறு ஆட்சிமுறை இருந்தது என்பதை பற்றியும், மிக முக்கியமாக இன்றைக்கு நாம் பேசுகிற அன்றைய நெல் வகைகள் அல்லது மறந்து போன அந்த நெல்விதைகள் நூற்றுக்கு மேலான அளவில் அந்த காலத்தில் விளைந்தவைகள் அவற்றின் பெயர்களோடு இதில் அபூர்வமாகச்சொல்லப்பட்டிருக்கின்றன அவற்றை மீண்டும் தொகுத்து நல்ல முறையில் வெளியிட இருக்கிறேன்! அதற்கான அட்டை படங்கள் தயாராகிக் கொண்டு இருக்கின்றன! அனேகமாக இந்த நூல் எட்டயபுரத்தில் வைத்து வெளியிடப்படும் என்கிற ஏற்பாட்டில் இருக்கிறது.. திருநெல்வேலி மட்டுமல்ல அன்றைய கரிசல் வட்டாரங்களின் போக்கு எவ்வாறு இருந்தது என்பது குறித்தஆவணமான இந்த எட்டயபுரம் பள்ளு நூலுக்குப் பிறகு தான் கு அழகிரி சாமி கி ராஜநாராயணன் போன்றவர்கள் தங்கள் படைப்புகளில் கரிசல் மண்ணை அதன் எதார்த்தத்தை அழகியலை எழுத ஆரம்பித்தார்கள். #ettiyapuram #எட்டயபுரம்பள்ளு #கேஎஸ்ஆர்போஸட் #ksrpost



No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...