Tuesday, July 21, 2026

#வைகோவின் கடந்த கால நடவடிக்கைகள்!

 #வைகோவின் கடந்த கால நடவடிக்கைகள்!

——————————————————— இப்படி 2001 முதல் மாற்றி மாற்றி பேசுவது வைகோவின் வாடிக்கை….என்ன சொல்ல இவரை… இவர் இதையும் தவறு என்று ஒருநாள் நிச்சயமாக கூறுவார். கடந்த 1995ல் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு - டன்சி ராணி என்று எதிராக நடை பயணம் மேற்கொண்டு ஜெ வுக்கு எதிரான பிரச்சாரங்களையும் அவர் மீது பொலிட்டிக்கல் ஸ்டேட்டஸ் சார்ந்த மதிப்புச் சரிவுகளையும் உருவாக்கி விட்டு 1998ல் வெட்கக்கேடான முறையில் அதே ஜெயலிதாவுடன் எப்படிக்கூட்டணி வைத்துக்கொண்டார் .. எப்போதும் தன்னுடைய தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள தெரியாத சஞ்சலம் மிக்கவர் வைகோ! 1999 கூட்டணியில் திமுக இணைந்தவுடன் மிகை உணர்ச்சியால் கலைஞரோடு கட்டித்தழுவி உறவாடத் தொடங்கிவிட்டார். தனித்து போட்டியிட்டு எல்லாத் தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்கிற இறுமாப்புடன் 2001 இல் இணைந்திருந்த திமுக கூட்டணியில் தொடராமல் கடைசியாக அதிலிருந்து வெளியேறி முழுத்தோல்வியைச் சந்தித்தார்! அப்போது 21 தொகுதிகள கலைஞர் ஒதுக்கியும் கையெழுத்தும் கலைஞர் -வைகோ போட்ட பின்; ஒரே நாளில் டில்லிக்கு சென்று விட்டு வந்து வைகோவே கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை மீறி கூட்டணி விட்டு வெளியே போன மர்மம் இப்போது வரை தெரிய வில்லை. 1998 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியல் எனக்கு என்று ஜெயலலிதா வழங்கிய வட சென்னை தொகுதியை எனக்கு கடைசியில் வழங்காமல் என் அரசியல் வாழ்க்கை கெடுத்து பின்னும் மதிமுகவில் 2001 வரை வேதளகளோடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி கொண்டு மதிமுகவில்தான் இருந்தேன். திமுக கூட்டணியை முறிக்கும் போது வைகோவிடம் இது நல்லது அல்ல என கடுமையாக சொன்னேன். இது அனைவருக்கும் தெரியும். ரகசியங்களை கலைஞரிடம் சொல்லி விட்டேன் என மிகவும் கீழ்தரமாக அவதூறு (Slander) எனமீது வைகோ பொய்களை பரப்பினார்.அப்போது நான 2001 மார்ச் மாதத்தில் இவரை விட்டு விலகினேன் 19 மாதங்கள் பொடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நேரத்தில் ஜாமீனில் வெளியே வரச்சொல்லி அவருடைய ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டதை எல்லாம் மதிக்காமல் சிறையிலேயே இருப்பேன் என்று சொன்னார் அதன் விளைவு பிறகு சிறையில் இருந்து அவர் வெளி வந்த போது அவருக்கு செல்வாக்கும் ஆதரவும் கூடி இருந்த வேளையில் அந்த ஆதரவை எல்லாம் சீட்டாக, ஒட்டாக மாற்றாமல் வெறும் நான்கு இடங்கள் மட்டும் வாங்கி, அதிலும் மோசமாக வெற்றி வாய்ப்பு உள்ள சிவகாசியில் நிற்க மறுத்து என்னை கேவல படுத்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரனை கொண்டு போய் அங்கே நிறுத்தியது எவ்வளவு பெரிய தவறு..அனைத்தும் தோல்விகளாக மாற மேடையிலேயே திமுக கூட்டணியில் இருந்த போது 2004 - 2006 வரை கலைஞர் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டுக் குறிப்பாக தின்டுக்கல் திமுக மாநாட்டில் கண்ணீர் விட்டார். தி முக வின் திருச்சி மாநாட்டிற்கு முதல் நாள் வீட்டிலிருந்து தேனாம்பேட்டைக்கு கிளம்பி போகும் வழியில் போயஸ் தோட்டத்திற்கு போய் மலர்க்கொத்து வழங்கி நின்றார்! காரணம் 2006 தேர்தல் சீட்கள் அவருக்கு தேவைப்பட்ட அவலம். அதற்குப் பிறகுதான் 40 சீட்டிற்கு 40 கோடி 35 சீட்டிற்கு 35 கோடி என்ற பேரத்தில் அவருக்கு “பெட்டி கோபால்” என்ற புகழ்பெற்ற பெயர் கிடைத்தது. 2009 ல் ஈழத் தமிழர் இனப்படுகொலை நடந்த போது இவருக்கு எம்பி பதவி இல்லை.! 2004 இல் சிவகாசியில் ஒருவேளை இவர் நின்று இருந்தால் வெற்றி பெற்றிருப்பார் அதன் விளைவாக அன்றைய அரசியல் வரலாறும் மாறி இருக்கும்! இப்படித்தான் எல்லாவற்றையும் தவறவிட்டார். ஆர்ப்பரிக்கும் வேலையில் அதிகம் சத்தம் போடுவார் கட்சிக்குள் அவரை மீறி ஏதாவது நடக்கும் பொழுது ஒன்றும் தெரியாதது போல இருப்பார். உதாரணம் அவருக்கு எதிராக எல்ஜி செஞ்சி போட்டி பொதுக்குழு நடத்திய போது அமைதியாக இருந்தது மட்டுமல்லாமல் பக்கபலமாக இருந்த கண்ணப்பனை புறக்கணித்து வெளியே நிறுத்தினார். 2009ல் சிவகாசியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக ஓட்டு வங்கிக்குப் பணத்தை அள்ளித் தந்து கொண்டிருக்கிறது என அறிந்தும் இருப்பதையும் கோட்டை விட்டார்.. அதிமுக 10 சட்டமன்ற தொகுதிகளைக் கொடுக்க முன்வந்த போதும் 2011ல் வந்த அப்படியான நல்லதொரு வாய்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் தேர்தலையே புறக்கணித்த புத்திசாலி இவர்.. மோடி பதவியேற்கும் நாளிலேயே போராட்டம் நடத்தி கூட்டணியை விட்டு வெளியேறிய வைகோவின் அறிவை எப்படித்தான் பாராட்டுவது! அந்த நேரத்தில் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வாக்குறுதி 2014 ல் மோடி பிரதமர் ஆனவுடன் கட்சியின் எதிர்காலத்தை கணிக்காமல் வெளியே வந்தார்.. கடந்த 2014 இல் கலைஞரிடம் நான் வைகோவை என் கை பேசியில் பேசவைத்தேன். திமுக கூட்டணியில் இருக்கிறேன் என என் முன்பே கலைஞரிடம் உறுதியாக கூறினார். ஆனால், ஜெயலலிதா பேச்சி கேட்டு….. மக்கள் நலக் கூட்டணியில் கடைசி வரையில்…2

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...