Tuesday, July 21, 2026

#TheOdyssey

 #TheOdyssey

#கிறிஸ்டோபர்_நோலெனின் #ஒடிஸி ——————————————————— Watched The Odyssey. Now i wish to withdraw whatever I had said negatively about the movie on my first watch. I had full of expectations and perceptions on my head from my reading of Homer's Odyssey. But seriously, Now I feel guilty about how quickly I had judged the Nolan's vision that the movie was bad. No it's not. It's definitely his Masterpiece work!. Let me write a detail review again a while later from the whole new perception which i missed to grasp before. In Nolan I trust more than ever before!…. Running successfully in theaters now.. #கிறிஸ்டோபர்_நோலெனின் #ஒடிஸி உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், உயர் தொழில்நுட்பத்தில் அந்த திரைப்படத்தைக் காண்பதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பனைக் காட்சிகளை விரிக்கும் வகையில் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. மிக நீண்ட காலமாக கிரேக்க மொழியில் ஹோமரின் இரு பெரும் காப்பியங்களான #இலியட் மற்றும் #ஒடிஸி வாசிக்க வேண்டும் என்கிற எண்ணமுண்டு. ஆயினும் ராமாயணம் மகாபாரதம் குறித்த சிந்தனைகள் இருந்ததெல்லாம் ஒரு காலகட்டம். பல்வேறு வாசிப்புகளின் இடையில் வந்து விழும் இந்த பெயர்களும் அது சார்ந்த கடல் பயணங்களும் சிந்துபாத்தின் கதைகளை போல் ஒரு விறுவிறுப்பான சுவாரசியத்தை நமக்குள் தூண்டிவிட்டுச் செல்லும். மிக முக்கியமாக ஒன்று சொல்ல வேண்டுமென்றால் அத்தனை பெரிய காவியத்தை இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு சொல்லப்பட்டது 3000 ஆண்டுகளாக மனித குலத்தின் நினைவுகளில் நீங்காத இடம் பிடித்த உலகின் முதல் தலைசிறந்த நாவலான #ஹோமரின் ஒடிஸி என்றும் பழையது என்று ஒதுக்கிவிட முடியாமல் சுவாரசியமான, விறுவிறுப்பான, உணர்ச்சிகரமான, சாகசக் கதைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. கதைகளை நேசிக்கும் மனிதர்கள் அத்தனையும் இந்த நூலையும் நேசிப்பார்கள் என்று தன்னுடைய முன்னுரையில் பதிவு செய்திருக்கிறார். #ட்ரோஜன் ஹார்ஸ் போரில் ட்ராய் நகரை தந்திரமாக வீழ்த்திய பிறகு உலகம் முழுவதும் பயணப்பட்ட ஒடிசியஸ், தன்னுடைய நீண்ட கடல் பயணத்தில் அவன் சந்தித்த ஆபத்துகள், மர்மம் நிறைந்த தீவுகள், அதன் வினோதமான மனிதர்கள் எல்லாவற்றையும் கடந்து, தான் அழைத்துப் போன அத்தனை வீரர்களையும் இழந்து தன் மனைவியை மகனை மனதில் ஏந்தி தன்னுடைய தாய் மண்ணுக்கு திரும்பினானா? என்பதை சொல்லும் கதை. கடல் பயணத்திலேயே தன்னுடன் இருந்த சாகசம் மிக்க வீரர்களைக் கொண்டு பல்வேறு தீவுகளையும் தாக்கி செல்வம் சேர்த்து திரும்பும் தீராத வேட்கையோடு ஒரு மனிதனாக #ஒடிசியஸ். வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட ட்ராய் நகரின் புனித கோட்டைகளை தரைமட்டமாக்கி எண்ணற்ற நகரங்களை கடந்து உலகம் முழுவதும் நீண்ட அலைகழிப்புக்கு பிறகு தாயகம் திரும்பினானா? என்பதே கதை. இம்மையும் மறுமையும் பேசும் தமிழ் காப்பியங்களைப் போல கிரேக்க கதைகளும் பேசுகிறது. அதேபோல் தேவலோகம் தெய்வங்கள் அவர்களுக்கு இடையிலான உரையாடல்கள் அவர்கள் மனிதர்கள் மீது நடத்தும் திருவிளையாடல்கள் என்று தமிழ் புராணக் கதைகளுக்கும் இந்த கிரேக்க புராணக் கதைகளுக்கும் இடையிலான ஒப்புமைகளை உணர முடிகிறது. மேகங்களின் தலைவனான ஜீயஸ் இன் உதவியோடு கடல்களின் தலைவனான போஸிடாசின் மகனை கொன்றதால் உண்டான சாபம் அவனை மீண்டும் தாய் மண்ணை சேரவிடாமல் தடுக்க, ஜீயஸ் இன் மகள் அதீனா ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கு உதவுகிறாள். ட்ராய் நகருக்கு போருக்குச் சென்றவன் 20 ஆண்டுகளாக மீண்டும் வீடு திரும்பாத நிலையில் அவன் இருக்கிறானா? இல்லையா? போரில் அழிந்து விட்டானா? அல்லது கடலோடு கடலாக கரைந்து விட்டானா? என்பது கூட தெரியாமல் காத்திருக்கும் அவனுடைய அன்பு மனைவி பெனலோப்பி மகன் டெலிமாச்சஸ். கைம்பண்ணான பெனலோப்பியை மணந்து முடியாட்சியை அபகரிக்க வீடுகளில் வந்து ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் எதிரிகள் என்று கதை செல்கிறது. இதற்கிடையில் ஒரு தீவில் கலிப்சோவின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் ஒடிசியஸ் அங்கிருந்து வீடு திரும்பும் வேட்கையில் கடற்கரையின் பாறையில் அமர்ந்து கவலையோடு நோக்கிக் கொண்டிருப்பவனை விடுவிக்க சொல்லி கடவுளிடமிருந்து கட்டளை வருகிறது. அங்கிருந்து கிளம்பிய அவன் சந்திக்கும் வினோதமான மனிதர்கள், சாகசங்கள், கடல் பயணங்களில் சந்திக்கும் பல்வேறு விதமான ஆபத்துகள் என்று ஏகப்பட்ட கிளைக் கதைகளாக பிரியும். அத்தனையையும் மிக சுருக்கமாக நூலில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். ராட்சச பாறை போலிருக்கும் ஒற்றைக்கண் அரக்கன் பாலிபேமஸிடம் சிக்கிக் கொள்வது, தீவில் ஒதுங்கும் மனிதர்களை எல்லாம் பன்றிகளாகவும் மிருகங்களாகவும் மாற்றும் சர்சியின் மாளிகையில் மாட்டிக் கொள்வது, தன்னுடைய தந்திர புத்தியாலும் அதீனாவின் உதவியாலும் அவளை தன்னுடைய…2

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...