Tuesday, July 21, 2026

2) தனக்கான நாமினேஷனைத் தாக்கல் பண்ணாமலேயே திருமா,

 2) தனக்கான நாமினேஷனைத் தாக்கல் பண்ணாமலேயே திருமா, முத்தரசன், ஜி ராமகிருஷ்ணன் போன்றோர் கொடுத்த நெருக்கடிக்குப் பணிந்து 2016 ல் விஜயகாந்த்தைக் கொண்டு வந்து கூட்டணியில் சேர்த்து திமுகவை தோற்கடிக்கக் காரணமானதோடு அதிமுகவை மீண்டும் கோட்டைக்கு அனுப்பிய அறிவாளி இவர்!.

அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசகரை மும்பை சென்று ஏன் சந்தித்தார் என்று கேட்டால் 2017ல் சசிகலாவை முதலமைச்சர் ஆவதற்கு அலைந்த கதைதான்! வேறொன்றும் இல்லை! ஆர்கே நகர் இடைதேர்தலுக்கு விசிக, இடது சாரிகளுக்கு எல்லாம் கடிதம் எழுதி ஆதரவு கேட்ட திமுக வைகோவை கேட்காமலே ஆதரவு கொடுத்தது!அதற்கு முன்புதான் 2017 செப்டம்பர் மாநாட்டில் திமுகவை கன்னாபின்னா என்று தாக்கி பேசியிருந்தார் நமது திருவாளர்! காவேரி மருத்துவமனை வாசலில் ரவுடிகளை விட்டு செருப்பால் அடிக்க சொன்னது ஸ்டாலின் தான் என்று பேட்டி கொடுத்த வைகோவை மறந்து மன்னித்து திமுகவும் கூட்டணியில் இணைந்ததை மறந்து விட்டார் போலும்! ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவோம் என்று பேசியதோடு அல்லாமல் அன்பின் மிகுதியால் ஸ்டாலின்வேட்டியில் சிந்திய தேனீர்த்துளியை துடைத்தும் முகம் மலர்ந்தார். கலைஞரிடம் சத்தியம் செய்து கொடுத்து இருக்கேன் ஸ்டாலின் அவர்களை காக்கும் கவசகுண்டலமா நான் இருப்பேன். பேச்சில் என்றும் குறையேஇல்லை!இருண்ட வானின் நம்பிக்கை நட்சத்திரமாம் ராகுல்காந்தியை!?பிரதமர் ஆக்கியே தீருவோம் என காங்கிரஸை என்றும் ஆவேசமாக எதிர்த்த வைகோ முழக்கம் எழுப்பினார். இவரது நாடாளுமன்ற பேச்சுகள் அடங்கிய நூல் தொகுப்பை ராகுல்காந்தி டில்லியில வெளியிடுகிறார். இந்த நிலையில் ப. சிதம்பரமும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் காங்கிரஸ மீது போபர்ஸ ஊழல், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்தும் வைகோ கடுமையாக குற்றம்சாட்டி பேசியை காங்கிரஸ் தலைவர்களே வெளியிடுவது வேடிக்கை. கடந்த காலங்களில் வைகோ ராஜிவ் காந்தி, சோனியவை பற்றி பேசிய வார்த்தைகள் என அனைவரும் அறிவர் 2019ல் திமுக உடனான கூட்டணியில் ஒரு லோக் சபா சீட்டை கணேசமூர்த்திக்கும் ஒரு ராஜ்ய சபா சீட்டைத் தனக்கும் தருவதாகத் தான் முன் நிபந்தனையோடு திமுக இடங்களை ஒதுக்கியது என திருவாய் மலர்ந்து அருளினார். என்ன ஒரு சுயநலம். அதைவிட 2021ல் ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்பதாக வாக்குறுதி கொடுத்தால்தான் தருவோம் என்று திமு க சொன்னபோது அதை அற்பத்தனமாக வைகோ ஒத்துக் கொண்டு வாங்கினார். அதனை விட மோசமாக 2024ல் ஒரே ஒரு சீட் தான் என்று திமுக சொன்ன போது மிகுந்த அவலத்தோடு ஏற்றுக் கொண்டு மேடையில் எல்லாம் அழுது அதை தனிச் சின்னத்தில் நிற்கத் தாருங்கள் என்று வற்புறுத்தி வாங்கினார். அந்தத் தேர்தலில் திமுகவின் இரண்டு அமைச்சர்கள் பணத்தை வாரி இறைத்து பெற்றுக்கொடுத்த வெற்றியை வாரிசு அரசியல் எதிர்த்த இவர் தள் மகனுக்கு மாலையாகப் போட்டுக் கொண்டார்! பாவம் இவருக்காக தீக்குளித்த ஐந்து இளைஞர்களின் ஆன்மா…. இவ்வளவையும் சாதித்துக் கொண்டு இன்றைக்கு வந்து ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் விஜய் வெற்றி பெற்றார் என பாராட்டுத் தெரிவிக்கிறாரே! ஒரு அடிப்படை நாணயம் கூட வேண்டாமா? எப்படி வேண்டுமானாலும் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு பேசிக்கொள்ளலாம் என்பதா ஒரு தலைவரின் அழகு! 2026ல் நான்கு சீட் தான் சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்றதும் கூட்டணியை முறிக்காமல் "மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது" என்ற நம்பிக்கையில் அதை ஏற்றுக் கொண்டு போட்டியிட்டார்!. இப்போது த வெ க வில் கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார் . 2026 தேர்தலில் 107 இடங்களைப்பெற்ற த வெ க தங்களது, மெஜாரிடியை நிரூபிக்க விசிக கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் பேசிக் கொண்டிருந்த போது "தவெக மற்ற கட்சிகளுடன் பேசலாம். ஆனால் எங்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு வராது. ஏன் எனில் அந்தளவுக்கு திமுகவுடன் நாங்கள் இறுக்கமான பிணைப்பில் இருக்கிறோம்" என்று சொன்ன வாய் தான் திமுகவிலும் அதிமுகவும் இணைந்து என் அரசியல் வாழ்வை இழந்துவிட்டேன் என்றும் சொல்கிறது. சரி அப்படியெல்லாம் தன்மானம் மிக்க சுயமரியாதை உள்ள இவர் ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நடந்த ஒரு அவலத்தை கூடக் கண்டிக்காமல் முட்டுக் கொடுத்து சரிதானா? நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்துரைக்க இவரை எது தடை செய்தது! திராவிடத்தை பாதுகாக்க திமுகவுடன் கூட்டணி வைத்தாராம் என பேசினார் எனபது கேவலம்.சரி தவெகா வில் திராவிடம் என்ற சொல்லே இல்லையே…? இப்படி தொடர்ச்சியான நேரத்துக்கு ஒரு பேச்சு.. 2014ல் நாடு முழுக்க மோடி அலை அடித்த போதும் இவருக்கு மட்டும் தோல்வி, 2016ல் வேட்புமனு தாக்கல் செய்யாமல் விட்டதில் "இனி நம் தலைவர் பாராளுமன்றதுக்கே போக முடியாதா" என்று அவரின் அடிப்பொடித் தொண்டர்கள கிடந்த வேளையில் அந்த ஏக்கத்தைத்

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...