யாரோ ஒருவன்
திடீரெனத் தலைவனாக விரும்புகிறான். வேறு யாரோ ஒருவன் அவன் கால்களில் சட்டென வீழ்கிறான். மனிதன் இன்னொரு மனிதனின் காலடியில் சுயமரியாதையைக் கழற்றி வைக்கும் அந்த நொடி, இப்பூமியின் ஆகப்பெரிய அசிங்கம் நிகழ்ந்து முடிந்துவிடுகிறது. கேமரா வெளிச்சங்கள் கூச, ஒரு பிளாஸ்டிக் வாளிக்காகவோ அரிசிப் பைகளுக்காகவோ மேடையில் நடக்கும் இந்தத் தர்ம கூத்தில் கொடுப்பவனின் அகந்தையும் வாங்குபவனின் கூனும் மட்டுமே வெளியே தெரிகின்றன. நடிகர்களின் பிம்பங்களுக்கும் அரசியலின் வெற்று வாக்குறுதிகளுக்கும் இங்கே மனிதமானம் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. படித்தவர்கள் நிரம்பிய இந்தச் சபையில் யாரும் கூச்சப்படுவதில்லை. புத்தகங்கள் கற்றுக்கொடுத்த நிமிர்வை கைதட்டல்களுக்கு நடுவே அவர்கள் சத்தமில்லாமல் புதைத்து விடுகிறார்கள். ஒரு இலவசப் பொருளைப் பெறும் கையோடு அவன் இழந்துவிட்டது தன் கால்களை மட்டுமல்ல, தன் பிள்ளைகளின் எதிர்கால நிமிர்வையும்தான்! ••• எங்கோ கூட்டத்தில் கேட்டது இந்த அரசியல் கடந்த 1991 முதல் தமிழகத்தில்….. என்ன செய்ய
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment