#தமிழகநாள்_நவம்பர1 தான் ஜூலை18 அல்ல
———————————————————————- பிரிட்டிஷார் காலத்தில் வழங்கிய சென்னை (இராஜதானி)மாகாணம் தமிழ்நாடு என்ற பெயரில் சட்டபூர்வமாக அமைந்த நாள் என்று சொன்னால் அது நவம்பர் ஒன்றாம் தேதி என்று தான் சொல்ல வேண்டும் ! தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜய் இன்றைய ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாள் என்று வாழ்த்திப் பேசி உள்ளார்! அண்ணா அவர்கள் 18-7-1967 பெயர் வைத்த நாளை தமிழ்நாடு நாள் எப்படி கொண்டாடுவது? இன்றைய தமிழக எல்லைகள் அமைந்த 1-11-1956 தான் தமிழ்நாடு உதயமான நாள். எனவே நவம்பர் -1 தானே கொண்டாட வேண்டும். பொதுவாக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளைத் தான் பிறந்தநாள் என்று சொல்ல வேண்டும்! குழந்தைக்குப் பெயர் வைத்த நாள் எல்லாம் பிறந்தநாள் கணக்கில் சேராது! திமுக காரர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஜெராக்ஸ் காப்பி போல இவரும் அதைச் சொல்ல வேண்டியதில்லை! அப்படிச் சொன்னால் அது அர்த்தமற்றதும் பொறுப்பற்றதும் ஆகும்! 1956 நவம்பர் ஒன்றாம் தேதி இன்றையத் தமிழக எல்லைகள் கன்னியாகுமரி , திருநெல்வேலியின் செங்கோட்டை உட்பட தமிழ்நாட்டுக்கு என வரையறுக்கப்பட்ட நாள்! அந்த சமயத்தில் பின் தான் திருத்தணி நம்முடன் இணைந்தது!. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு வரலாறற்றையும் தெரிந்துகொண்ட பிறகுதான் இதை எல்லாம் பேச வேண்டும்! இதைச் சொல்வதற்கு தமிழக முதல்வருக்கு யார் தான் இருக்கிறார்கள்! அவர் நியமித்த அமைச்சர்களுக்கும் ஏன் இன்றைய புதிய அதிகாரிகளுக்கும் கூட ஒன்றும் தெரியாது! #tamilnaduday1july #தமிழகம்நாள்நவ11 #MadrasPresidency #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்
Subscribe to:
Post Comments (Atom)
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு.
இன்று ,6-10-2026 காலை பாரதிய ஜனதா கட்சியின் புதிய மேலிடப் தமிழக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய துணைத் தலைவர் ...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment