Tuesday, July 21, 2026

3) தீர்த்து ராஜ்ய சபா எம்பி ஆக்கிய ஸ்டாலினை இன்றைக்கு கெட்டவர் என முகம்வதங்கி விமர்சித்தபடி சந்து முனைகளில் எல்லாம் பாட ஆரம்பித்து விட்டார் .

 3) தீர்த்து ராஜ்ய சபா எம்பி ஆக்கிய ஸ்டாலினை இன்றைக்கு கெட்டவர் என முகம்வதங்கி விமர்சித்தபடி சந்து முனைகளில் எல்லாம் பாட ஆரம்பித்து விட்டார் .

அரசியலில் அந்தந்த நேரத்தில் அந்தந்தச் சூழ்நிலைகளில் முரண்பட்ட முடிவுகள் எடுக்க நேர்வது இயல்புதான் .. அதை யாரும் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை.. ஆனால் சில கட்சிகள் மட்டும்.. இது போல முரண்பாடுகளைச் செய்துவிட்டு.. "நாங்கள் புனிதப் பசு.. தூய்மை சக்தி" என்றெல்லாம் பேசி நிற்கும்போது போது அவர்களின் கடந்த காலங்கள் பற்றி பேசித்தான் ஆக வேண்டியதிருக்கிறது. இன்றைக்கு தவெக முக்கால் கிணறு தாண்டி ஜெயித்த குதிரை.. அதன் மீது எல்லோரும் ஏறி சவாரி செல்ல விரும்புவது எவ்வளவு சந்தர்ப்பவாதம் என்றாலும் கூட புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது .. அதை நேரடியாகச் சொல்லி விட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாமே! போங்களேன்.. யார் கேட்கப் போகிறார்கள்! ஆனால் மதிப்பு மிகுந்த உங்களது கடந்த காலத்தை அதற்காக உழைத்தவர்களை உங்களோடு துணையாக நின்ற உண்மையான நட்பை மறந்துவிட்டு எங்கோ அலைகிறீர்களே வைகோ! . திமுகவில் இருந்து வெளியே வந்த போது உங்களைத் தாங்கி பிடித்ததில் முக்கியமாய் இருந்த என்னையும் சேர்த்துப் பொன் முத்துராமலிங்கத்தின் அரசியல்வாழ்கையையும் நீங்கள் கேள்விக்குறியாக்கி விட்டீர்களே!? 1996 இல் நடந்த தேர்தலில் நான் நின்று தொகுதியில் கட்சியிலே அதிக வாக்கு பெற்று டெபாசிட் பெற்ற முதல் ஆளாக நான் இருந்த போதும் 1998இல் ஜெயலலிதா எனக்கு ஒதுக்கிய வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான இடத்தை நீங்கள் என்னிடம் ஒப்பு வித்தீர்களா! கேட்டதற்கு இரண்டு நாயுடுகள் விற்பதற்கு கூட்டணி சம்மதிக்க மாட்டார்கள் என்று சொன்னீர்கள்! சரி!நீங்கள் ஒற்றை நாயக்கராக நின்று கொண்டீர்கள்! ஆனால் அதே தேர்தலில் இரண்டு வன்னியர்கள் நாடாளுமன்றத் தொகுதியில் நின்றார்கள்! இரண்டு கவுண்டர்கள் நின்றார்கள்! அதற்கெல்லாம் நீங்கள் மறுப்பு சொல்லவில்லையே! ஒரு மரத்தின் கிளையை வெட்டுவது போல் அல்லவா வெட்டி விட்டீர்கள். எல்லோருக்கும் கிடைத்த நியாயம் எனக்கு கிடைக்கவில்லை! போகட்டும்! யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம்! நான் மட்டும் இருக்க கூடாது அவ்வளவு தானே! ஆனால் நீங்கள் சுமந்த பாவம் உங்களை விடாது. இன்றைய அரசியலில் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைக்கு நீங்கள் தான் முழு பொறுப்பு ஏற்றாக வேண்டும்! உங்களுக்காக ஐந்து ஜீவன்கள் தீக்குளித்தார்களே!அந்தப் பாவங்கள் உங்களை விடுமா? அவர்களது ஆன்மா உங்களின் பொருட்டு சாந்தியடையுமா!? என்னவோ உங்களுடைய செயல்பாடுகள் வேதனையாகத்தான் இருக்கிறது! உங்களைப் பொறுத்தவரையில் அரசியல் ஒரு வியாபாரமாகவும் தொழிலாகவும் இருக்கலாம். அதையெல்லாம் தெரிந்தும் கூட குறிப்பாக எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட போதும் கூட மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்ததற்கு காரணம் ஒரு தலைவனின் வலிமையை பங்கப்படுத்தி விடக் கூடாது என்பதற்குத் தான்! கொள்கைகள் வலிமையானது என்று தெரிந்துதான் பயணித்தேன்!எனது இழப்புகள் ஒரு பக்கம் இருக்கட்டும்! இவ்வளவு தந்திரங்களும் தன் மகனையே கட்சிக்குள் கொண்டு வந்துவிட்ட புத்திசாலித்தனமும் இருந்தும் கூட இறுதியில் நீங்கள்தான் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுள்ளீர்கள். சுயமரியாதையும் தன்மானமும் இனி கொள்கை சார்ந்தது இல்லையா என்ன! உங்கள் முன்பாகவே காலங்கள் கடந்து விட்டிருக்கின்றன! வேறு என்னத்தைச் சொல்லியும் உங்களுக்கு இனி என்ன ஆகப் போகிறது!ஆனவரை போதும் என்றால் உங்கள் மீது இரக்கப்படவும் இனி முடியாது! #vaiko #MDMK #வைகோ #மதிமுக #DMK #tvk #tamilnadupolitics #தமிழகஅரசியல #KSRadhakrishnan #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்






No comments:

Post a Comment

Nov 24, 2025 Before the Rock Temple of #Tirupparankunram, near Madurai— 1928.

  Before the Rock Temple of #Tirupparankunram , near Madurai— 1928. Latest photo in the comments section. நக்கீரர் தாமருளிய திருமுருகாற்றுப்...