இன்றைய தினமணியில்...
பிரிவுகள் நிரந்தரமல்ல மாலன் கட்சிகளில் உயர்ந்த பதவிகளில் இருந்த மூத்த தலைவர்கள், தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட மனத்தாங்கல் அல்லது கருத்து மோதல்கள் காரணமாக, தங்கள் சொந்தக் கட்சிகளைத் தொடங்கி, குழுக்களை உருவாக்கி, சில காலம் எதிர்ப்பை வெளிப்படுத்தி, பின்னர் அரசியல் எதிரிகளிடம் சரணடைந்தோ அல்லது தங்கள் தாய்க் கட்சிகளுக்குத் திரும்பியோ உள்ளனர் என்பதுதான் தமிழக அரசியல் வரலாறு.சில ஆரம்ப கால வெற்றிகளுக்குப் பின் அந்தப் புதிய கட்சிகள் கரைந்தோ காணாமலோ போயிருக்கின்றன. அந்தப் பட்டியல் நீளமானது; அதன் சில துளிகள்: பொன்னம்பல தியாகராஜன் பி.டி.ராஜன் எனப் பிரபலமாக அறியப்பட்ட இவர், கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டில் கல்வி கற்றவர். 1920 முதல் 1937 வரை ஜஸ்டிஸ் பார்ட்டியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினராகவும், பொது பணித்துறை அமைச்சராகவும், பின்னர் மதராஸ் மாகாணத்தின் முதல் அமைச்சராகவும் (First Minister) பணியாற்றினார். பெரியாரின் தீவிர சீடராகவும், திராவிடநாடு கோரிக்கையின் ஆதரவாளராகவும் இருந்த இவர், 1944ல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றியபோது பிரிந்து, சிலருடன் சேர்ந்து நீதிக்கட்சியை மீண்டும் உயிர்ப்பித்தார். 1946 தேர்தலை புறக்கணித்த அந்தக் கட்சி, 1951ல் ஒன்பது இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் மட்டும் வென்றது. ராஜன் மதுரை வடக்கு தொகுதியில் மோசமாகத் தோற்றார்; ஆனால் கம்பத்தில் வெற்றி பெற்றார். 1957க்குள் நீதிக்கட்சி முற்றிலும் மறைந்தது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸின் உயர்ந்த தலைவர்களில் ஒருவரும், “காந்தியின் மனசாட்சி” எனப் போற்றப்பட்டவருமான ராஜாஜி, 1952ல் காங்கிரஸ் பெரும்பான்மை இழந்தபோது நேருவின் அழைப்பில் தமிழக முதல்வரானார். 1959ல் காங்கிரஸை விட்டுப் பிரிந்து சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். 1967ல், காங்கிரஸின் பிரதான எதிரியான திமுகவுடன் இணைந்து காங்கிரஸை வீழ்த்தினார். 1971ல், தன் அரசியல் எதிரியான காமராஜுடன் கூட்டணி அமைத்தார்; ஆனால் அந்தச் சட்டமன்றத் தேர்தலில் சுதந்திரா கட்சி ஆறு இடங்களையே வென்றது. 1972ல் ராஜாஜி மறைந்தபின் சுதந்திரா கட்சியும் மறைந்தது. ஈரோடு வெங்கடப்ப கிருஷ்ணசாமி சம்பத் திமுகவின் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சம்பத், அங்கு அண்ணாவுக்கு அடுத்த நிலைத் தலைவராக இருந்தார். 1961ல் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியைத் தொடங்கினார். தமிழ் மக்கள் நன்கு அறிந்த அரசியல் முகங்களான கண்ணதாசன், பழ.நெடுமாறன், சிவாஜி கணேசன், எம்.பி. சுப்ரமணியம், வாழ்ப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் அந்தக் கட்சியில் இடம் பெற்றிருந்தார்கள். 1962 சட்டமன்றத் தேர்தலில் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. 1964ல் சம்பத் தனது கட்சியை திமுகவின் பிரதான எதிரியான காங்கிரசோடு இணைத்தார். இராஜகோபாலன் நெடுஞ்செழியன் அண்ணாவின் நம்பத்தகுந்த துணை; அண்ணா உயிருடன் இருந்தபோதே திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த (1955–60) அரிதான பெருமை பெற்றவர். அண்ணா சிகிச்சைக்காக வெளி நாடு சென்ற போது, இடைக்கால முதல்வராகவும் பணியாற்றினார். 1977ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட முரணால் பிரிந்து மக்கள் திமுகவைத் தொடங்கினார்; அது விரைவில் மறைந்தது. அதே ஆண்டில் அஇஅதிமுகவில் இணைந்தார். பின் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார். 1989 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குப் பிறகு, 1988ல் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கிய ஜெயலலிதாவிடமே திரும்பினார். குமரிமங்கலம் அனந்தகிருட்டிணன் மக்களவை உறுப்பினராகவும். ஐந்துமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் திகழ்ந்த குமரி அனந்தன் 1980ஆம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி காந்தி காமராஜ் காங்கிரஸைத் தொடங்கினார்.சில ஆணடுகளுக்குப் பின் அதைக் காங்கிரசில் இணைத்தார். பின் சில அண்டுகளுக்குப் பிறகு தொண்டர் காங்கிரஸ் என்ற ஒன்றைத் தொடங்கினார். பின் மீண்டும் காங்கிரசுக்குத் திரும்பினார். செண்டாங்காடு டி. சோமசுந்தரம் பின்னாளில் இந்தியாவின் குடியரசுத் தலைவரான ஆர். வெங்கடராமனை 1967ல் தோற்கடித்து அரசியலில் அடியெடுத்து வைத்தபோது கவனத்தை ஈர்த்தவர். எம்ஜிஆருடன் இணைந்து அதிமுகவை உருவாக்கிய அதன் ஆரம்பகால முதன்மைத் தலைவர்களில் ஒருவர். ஆனால் ஊழல் குறித்து எம்ஜிஆரைக் கட்சிக்குள் விமர்சித்தவரும் இவரே. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவர், 1984ல் நமது கழகத்தைத் தொடங்கினார்; 1985 தேர்தலில் முழுமையாக தோல்வியடைந்தார். பின்னர் கட்சியை கலைத்து மீண்டும் எம்ஜிஆரிடம் திரும்பினார். சுப்புராமன் திருநாவுக்கரசர் 27 வயதில் துணை சபாநாயகரான இவர், 1977 முதல் 1996 வரை அறந்தாங்கியில் தொடர்ச்சியாக வென்ற பெருமைக்குரியவர். ஒருகாலத்தில் ஜெயலலிதாவிற்கு நெருக்கமான ஆதரவாளர் 1996ல் அவரிடமிருந்து பிரிந்து
Subscribe to:
Post Comments (Atom)
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,
இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
No comments:
Post a Comment