Saturday, July 20, 2024

#எனதுசுவடு_பகுதி64

 #எனதுசுவடு_பகுதி64


Subscribe our below mentioned social media platforms:
/ @ksrvoice

The Second Known Example of The First Scientifically Constructed Modern #MapofMadras .

The Second Known Example of The First Scientifically Constructed Modern #MapofMadras .

I dont know who wrote this but I loved reading this piece of madras history ...
The map shows in meticulous detail the geographical and topographical features of the Madras area, locating dozens of individual landowners, buildings, roads of other features, including Brick Kilns, Hospitals, the Pantheon, gardens, govenment buildings, etc.The present map shows Madras at a time when it had absorbed a number of neighoring villages, including Triplicane, Ryapooraum (Royapuram), Tundahoor (Tondiapret), Vasurvelly, Vepery, Persinboor (Peramboor), Peraloor, Coonnoor, Ianaveram (Ayanavaram), Chindadrepett (Chindatripet), Poothoppetta, Egmore, Amenjikairy (Amaindhakarai), Chetooput (Chetpet), Persawauk (Purasawalkam), Periamoot (Periyamedu), Kilpauk.
The map shows a reconstructed Fort St. George, which has absorbed the area south of the original fort, which in former times constituted "White Town," the traditional residential section for Europeans in the earliest years of the British presence in Chennai.
By 1798, Madras had grown to encompass the original Fort area and 16 neighboring villages. British trade was booming in the region, resulting the need to conduct a modern survey.
The map is without question the finest mapping of the region, far surpassing any other map of the period. While likely produced by The Military Institute, the timing of the production of this map likely grew from the so-called Great Trigonometric survey. The Great Trigonometrical Survey of India started on April 10, 1802, with the measurement of a baseline near Madras. Major William Lambton selected the flat plains with St. Thomas Mount at the north end, and Perumbauk hill at the southern end. The baseline was 7.5 miles long. Lieutenant Kater was despatched to find high vantage points on the hills of the west so that the coastal points of Tellicherry and Cannanore could be connected. A 36-inch theodolite was used for triangulation and a zenith sector for determining astronomical latitudes.
The survey line was completed in 1806. The East India Company thought that the full project would take about 5 years, but eventually it took more than 60 years, lasting past the Indian Rebellion of 1857 and the end of company rule in India in 1858.
Historical Overview
The routes of the European influence in Madras date to 1522, when the Portugese set up a colony which they called Sao Tome de Meliapore (illustrated on this map). The Portugese monopoly continued relatively unabated until 1612, when the Dutch took power from the Portugese and established a base near Pulicat.
The British History in Madras began in 1626, when the British East India Compay initially set up a factor north of Madras in Armagon. In 1637, the British East India Company began to expand its sphere of influence to the South, resulting in its securing a grant from the Damarla Venkatadri Nayaka, Nayaks of Kalahasti, for a three-mile-long strip of land and the city of Madras. Construction of Fort St. George by the British East India Company began on April 23, 1640. As the British trading community began to thrive and the Dutch and Portugese fortunes faded, the Fort St. George area grew, ultimately becoming the area then known a White Town, the only color which the British were allowed to use when decorating the exterior of their buildings.
The success of Fort St. George and White Town as trading centers also brought an increasing number of non-Christian traders and others, primarily Indians of Hindu and Muslim faith. As these population grew and unrest occasionally broke out between the Hindu and Muslim communities, the non-Christians were re-located to a new settlement, which was known as Black Town. The combination of the three areas, Fort George, White Town and Black Town would become the community referred to as Madras.
Over time, there was signficant conflict and change outside the walls of Fort St. George, with the settlement reshaping itself and growing outward around the settlement. In 1693, a perwanna was received from the local Nawab granting the towns Tondiarpet, Purasawalkam and Egmore to the East India Company, which continued to rule from Fort St. George.
For a brief period of time between 1746 and 1749, the French took control of Fort St. George and Madras, before the British took it back in the Treaty of Aix-la-Chapelle. In the latter half of the 18th century, Madras became an important British naval base, and the administrative center of the British dominions in southern India. The British fought with various European powers, notably the French at Vandavasi (Wandiwash) in 1760, where de Lally was defeated by Sir Eyre Coote, and the Danish at Tharangambadi (Tranquebar). Following the British victory in the Seven Years' War they eventually dominated, driving the French, the Dutch and the Danes away entirely, and reducing the French dominions in India to four tiny coastal enclaves. The British also fought four wars with the Kingdom of Mysore under Hyder Ali and later his son Tipu Sultan, which led to their eventual domination of India's south. Madras was the capital of the Madras Presidency, also called Madras Province.
By the end of 1783, the British were securely in control of Madras and most of the Indian trade. Consequently, they expanded the Chartered control of by encompassing the neighbouring villages of Triplicane, Egmore, Purasawalkam and Chetput to form the city of Chennapatnam, as it was called by locals then. This new area saw a proliferation of English merchant and planter families who, allied with their wealthy Indian counterparts, jointly controlled Chennapatnam under the supervision of White Town. Over time and administrative reforms, the area was finally fully incorporated into the new metropolitan charter of Madras.

The development of a harbour in Madras led the city to become an important center for trade between India and Europe in the 18th century. In 1788, Thomas Parry arrived in Madras as a free merchant and he set up one of the oldest mercantile companies in the city and one of the oldest in the country (EID Parry). John Binny came to Madras in 1797 and established the textile company Binny & Co in 1814.




 

#நாடாளுமன்றத்மக்களவைதலைவர்

 



——————————————————-
நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் பதவிக்குக் கடந்த காலத்தில் போட்டி இல்லாமல் இருந்தது என்ற செய்தி தவறானது! பின்
நினைவுக்கு வந்தது.
கடந்த 1952 1967 1976 களில் நாடாளுமன்றத் மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தல் போட்டிகள் நடந்திருக்கின்றன என்பதைக் கடந்த கால ஆவணங்களைப் பார்க்கும்போது தெரிய வருகிறது.
நேரு பிரதமராக இருந்த முதல் நிகழ்விலும் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்த மூன்றாவது நிகழ்விலும் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் 55 மற்றும் 58 அளவிற்கே குறைவான வாக்குகள் பெற்று தோற்று இருக்கிறார்கள்.
இரண்டாவது நிகழ்வில் இந்திரா காந்தி காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட சஞ்சீவி ரெட்டி 278 வாக்குகள் பெற்று இருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தென்னட்டி விஸ்வநாதன் 207 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார். அது போன்றதொரு நிலையை இன்றைய நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எதிர்பார்த்தது! ஆனால் அவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை சாதகமாக இல்லை!
ஆகவே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரே ஓம் பிர்லா பாராளுமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு
இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துகள்!


Monday, July 8, 2024

#*மதிமுக* #*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை நினைவுகள் (2)*

#*மதிமுக* 
#*சார்பட்டா இராயபுரம் ஏழுமலை
நள்ளிரவுகொலை நினைவுகள் (2)*
————————————
1………அப்படியான மிகச்சிறந்த ஒரு பேரணியை1994 ஏப்ரல் 16 எழுச்சி பேரணியின் போதுதான் நடத்தி ம தி மு க வின் மாநாட்டைச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று என்னுடன் கடுமையான பணிகள் செய்து அரும்பாடுபட்ட ராயபுரம் ஏழுமலை யாரும் எதிர்பாராத விதத்தில் 17 ஏப்ரல் 1994 இரவில் கொலை செய்யப்பட்டார். இதற்கிடையில் பேரணியை முடித்து விட்டு  ராஜ்ய சபா உறுப்பினராக இருந்ததால் வைகோ 17-4-1994 அன்று டெல்லி நாடாளுமன்றக் கூட்டத்திற்கு அவசரமாகக் கிளம்பி போயிருந்தார். 

மிக மோசமான முறையில் ஏழுமலை கொலை செய்யப்பட்டு கிடந்த சூழலில் அ. செல்வராஜூன் பதற்றுத்துடன் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு எப்போதும்  அழைக்கும் தொனியில்  “வழக்கறிஞரே! நம்ம தம்பி  ஏழுமலையை கொன்னுட்டாங்கய்யா! “என்று  தொலைபேசியில் கதறி அழுதவாறே நீங்கள் உடனே புறப்பட்டு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மிகுந்த துக்கமாகி

உடனே நான் அன்றைக்கு இருந்த பல கட்சி நிர்வாகிகளுக்கும் கால் செய்து  விபரத்தைச் சொல்லிவிட்டு
புறப்படத் தயாரானேன். என்னிடம்  கார் இருந்தும் டிரைவர் இல்லை! கைபேசிகள் இல்லாத காலமாதலால் 
 அவரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.

வேறு வழி இல்லை என்கிற நிலையில்  எனக்குத் தெரிந்த ஒரு ஆட்டோக்காரரை வரவழைத்து அவருடன்  ஆர் செல்வராஜ் அவர்களின் வீட்டிற்கு அந்நேரத்தில் கிளம்பி சென்றேன்.




அவரது வீடு பிராட்வே  பாரதியார் பெண்கள் கல்லூரி அருகில் இருக்கிறது. அங்கு சென்று அவரையும் கையோடு அழைத்துக் கொண்டு ஆட்டோவில் இருவரும் கிளம்பி ராயபுரம் பாலத்தின் அருகில்  வட கிழக்கு புறத்தில் போய்ப் பார்த்த போது அங்கே ஏழுமலையின் உடல் வெட்டிக் கூறாக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் யாரும் அப்போது அங்கு வரவில்லை . சரியாகச் சொன்னால் அவர்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக தான் அங்கு வந்து சேர்ந்தார்கள். அந்நேரத்தில் நானும்  அ.செல்வராஜின் சார்ந்த ஒரு நான்கு ஐந்து பேர் மட்டும் தான் அந்த  சம்பவ இடத்தில் விடிய விடிய  இருந்தோம். காவல்துறை வந்தவுடன்  அவர்களிடத்தில் உடலை ஒப்படைத்து விட்டுத் திரும்பி ராயபுரம் பாலத்திற்கு மேற்கு புறத்தில் ஒரு மாடியில் இருந்த  ஏழுமலையின் அலுவலகத்தில் சென்று  மிகுந்த மனச் சோர்வுடன் அமர்ந்தோம்.

இதற்கு முன்பு நான் வீட்டை விட்டு கிளம்பும்போதே வைகோவிற்கு போன் செய்தேன். அவர் எடுக்கவில்லை! உறக்கத்தில் இருந்திருக்க வேண்டும்!. எப்படியோ ஒரு கட்டத்தில் ஃபோனை எடுத்து விட்டார். அவரிடம் விஷயத்தைச் சொன்ன போது அவரால் அதைத் தாள முடியவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரின் அழுகை தொலைபேசியிலேயே துக்கித்தது. அன்றைய வைகோ அப்படித்தான் இருந்தார்! உடனே தொலைபேசியில் நீங்கள் எல்லாம்அங்கு செல்கிறீர்களா என்று கேட்டார்?

ஆமாம்  போய்க்கொண்டிருக்கிறேன் என்ற போது துறைமுகம் அ.செல்வராஜுடன் கூட இருந்து எல்லாவற்றையும்பார்த்துக்கொள்ளுங்
கள் இதையெல்லாம் அவர் தாங்க இயலாது வயதானவர் என்றும் சொன்னார். அந்த நள்ளிரவில் நாங்கள் வட சென்னையில் போய் இரவு முழுக்க  ஏழுமலையின் உடல் தனி தனியாக இருந்ததை பார்க்க கண்ணீரும் பீதியோடு எதையும் புரியாமால் அதன் முன்பு காத்திருந்தோம்.

.குறிப்பாக இரவு 12 மணிக்கு மேல் நடந்த சம்பவம் ஆகிவிட்டதால் ஏழுமலை கொலையுண்ட செய்தி மறுநாள் செய்தித்தாளில் வரவில்லை . இப்போது போல தொலைகாட்சிகள், ஊடகங்கள, இணையம், கைபேசிகள் அறியா நேரம். தூர்தர்ஷன் அரசு தொலைக்காட்சி மட்டும் இருந்த காலம். அந்த நள்ளிரவு நேரத்தில் ஏழுமலையின் அலுவலகத்தில் இருந்தபடியே பொன்முத்துராமலிங்கம் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும் கால் செய்து நடந்ததை சொன்னேன். மறுநாள் மிகுந்த சிரமப்பட்டு வெளியூரில் இருந்து அனைவரும் வந்து சேர பகல் 11 மணி ஆகிவிட்டது. வைகோவும் விமானத்தைப் பிடித்து டில்லிருந்து.சரியாகப் பத்து மணியளவில் அங்கு வந்து சேர்ந்து விட்டார். அப்போது  பத்திரப்பதிவு ஊழல் வழக்கில் மாட்டப்பட்ட முகமது அலி காவல் துறை டி சி யாக இருந்தார் என நினைவு .போக இன்றைக்குக் கமலஹாசனுடன் இருக்கின்ற  எம்எல்ஏ தமிழரசன் அவர்களின் மைத்துனர் மௌரியா  காவல்துறை உயர் அதிகாரியாக அன்றைக்குப் பொறுப்பேற்று இருந்தார்.

எல்லோரும்  இப்படியாக இருக்கும் பட்சத்தில் ஏழுமலையின் உடலை அரசு மருத்துவமனையில் வைத்து போஸ்ட்மார்ட்டம் செய்து முடிக்க  மறு நாள் பிற்பகல் ஆகிவிட்டது.

அந்த நாளும் அந்த சூழ்நிலையும்   இன்று நினைத்தால் கூட என் மனதில் வலி மிகுந்த  காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. செயல்வீரர் மக்களை அரவணைத்துச் செல்லக் கூடியவர் களப்பணியாளர் என்றெல்லாம் தன்னை  மறந்து மதிமுகவில் செயல்பட்டவர் ஏழுமலை!!. அவர் கொலையுண்டு போனதற்கு அவர் மீதான தனிப்பட்ட விரோதம்தான் என்று காரணம் சொன்னார்கள்.!! இந்த இடத்தில்  எனக்குப்பல அன்று சொல்லப் பட்ட பலரின் பெயர்கள் மனதில் நிழலாடுகின்றன. எதையும் காரணங்களாகவோ யாரையும் குறிப்பிட்டோ சொல்ல என்னால் முடியவில்லை ! உண்மையில் ஏழுமலையின் மரணத்திற்கு இதுவரை யார் காரணம் அதற்கான நோக்கம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது தான் வேதனை.

முன்பெல்லாம்  அரசியல்வாதிகள் அதில் ஈடுபடும் போது பல நெறிமுறைகளை பண்பட்ட மரபுகளைப் பின்பற்றினார்கள். கொள்கைக்காக உயிரைக் கொடுத்தும் செயலாற்றினார்கள். மக்கள் மத்தியில் களப்பணி ஆற்றினார்கள். அதில் பெருமை கண்டார்கள். 
ஆனால் இன்றைக்கு மக்களிடம் மெஜாரிட்டி பெற்றுவிட்ட அதிகாரத்தில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்கிற ஒப்பனை அரசியல்வாதிகள் மேலோங்கி இருக்கிறார்கள்! பதவியைப் பிடிக்க பல சால வித்தைகளில் இறங்குகிறார்கள். அரசியல் என்பது  வருவாய் உள்ள ஒரு வணிக தொழில் ஆகிவிட்டது. அதன் அடிப்படையில் தான் தோன்றித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதோடு “பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை” என்பது போல இன்றைய அரசியல்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். இவர்களுடைய ஒப்பனை முகமும் அதன் கீழ் பணத்திற்கு அடித்துக் கொள்ளும் நிலையை எந்த ஒரு அறிவு ஜீவிகளும் மாண்புடைய அறவாதிகளும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அரசியலில் துலங்க வேண்டிய மக்கள் பண்புகளை அதற்கான கடமைகளை அதன் புனிதத்தை வேரோடு சிதைத்துதான் இன்று பலரும்  தங்கள் சுயநலத்திற்கெனப் பதவி காண்கிறார்கள். இக்கால வணிக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு இம்மாதிரிச் சம்பவங்களே காரணமாக இருக்கின்றன. உண்மைகளைப் புதைத்து விட்டு பொய்களைத் தாலாட்டுவதுதான் இன்றைய அரசியலின் அவலமாக அபத்தமாக இருக்கிறது.

இன்றைக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டுச் செயலாளர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கும் தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்று சொல்கிறார்கள். உண்மை ஒரு எட்டு வைப்பதற்குள் பொய் உலகத்தையே சுற்றி வந்து விடும்!!!. வேறு என்ன சொல்ல இருக்கிறது? இந்த
ராயபுரம் ஏழுமலை நினைவில் வந்தார். 

வண்ணாரப்பேட்டை சுழல்மெத்தை மீட்டிங்கும், மெரினாபேரணியும் நிகழ்ந்தது !
இவ்விரண்டையும் அவ்வளவு கலர்ஃபுல்லாக மாநாடு போல் நடத்திக்காட்டியவர் ஏழுமலை. ஏழுமலை பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் & பேரணியை நடத்திவிட்டார்.. நாயக்கர் பின்னிட்டார்ல்ல ? த்தா திமுககாரன்களுக்கு அல்லு வுட்ருச்சி போ என்றான் !
நீ யார்ரா அப்ப ?
இல்ல மச்சான், என்ன இருந்தாலும் கலைஞர் தன் புள்ளைக்காக வைகோவ இப்டி தூக்கி அடிச்சிருந்திருக்கக் கூடாது !
வைகோ அதன்பின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தன் பலத்தைக் காட்ட கிளம்பிவிட, சென்னை பேரணி முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவ்வளவு சர்வ பலம் வாய்ந்த ஏழுமலை நாயக்கரை அவர் ஏரியாவுக்குள்ளேயே புகுந்து கண்டம் துண்டமாகப் வெட்டி போட்டார்கள் !
வேனில் வந்திறங்கிய அவருக்குப் பரிச்சயமான ஒரு கூட்டம், வெற்றிகரமாக பேரணி & கூட்டத்தை நடத்தியதற்காக மாலையும், பொன்னாடையும் போர்த்துவதாக
சென்னை துறைமுக கண்டெய்னர் லாரி (ஹார்பர் கன்டெய்னர் யார்டில்) மாமூல் மேட்டரில் நாயக்கர் மாமூல் தொகையை உயர்த்திக் கேட்கவே, அவருடைய போட்டியாளரை வைத்துப் போடுவது போல் பழி தீர்த்துக் கொண்டார்கள் எனவும் சிலர் பேசி கொண்டனர்.

சில நாள் வரை ‘’எப்படியா ? அவரு யாருன்னு நினச்ச ? பாக்ஸர் மச்சி.  ஏழைகளுக்கு வள்ளல் .பெட் ஃபைட் நிறைய பண்ணிருக்காரு. துண்ட வச்சி பொருளால போட்டா எப்படி தடுக்கறதுன்னு வித்த தெரிஞ்சவர்டா. நம்ப வச்சி கழுத்தறுத்தானுக.!
ஆனா ஒண்ணு மச்சி, நாயக்கர போட்டவங்கள போடாம வுட மாட்டேன்னு சிவா அண்ணன் சமாதில வச்சு சத்தியம் செஞ்சிருக்காரு, மவனே சிதைக்காம விட மாட்டாரு.
அதுக்கு ஏன்டா என்னமோ நான் போட்ட மாதிரி இவ்ளோவ் காண்டாவுற ?
இல்ல மச்சான், நல்ல மனுஷன் ப்ச்.
அப்புறம் பார்த்தா நாயக்கர் இடத்தை சிவாதான் கைப்பற்றினார். மாமூல் பிரச்சினை.’’ இப்படியான பேச்சுக்கள காதில் கேட்டன.

வட சென்னையில் பெரும் மக்கள் திரல் ஏழுமலைக்கு இறுதி வலம்.அங்கு கூடி ஓர் இறுதிஉரை நிகழ்த்தி மவுன அஞ்சலிக்குப் பின், சிதை எரியூட்டப்பட்டது !

தூத்துக்குடி கேவிகே சாமியின் முடிவும் 60ஆண்டுகளுக்கு முன் நடந்தது.
கடந்த 1996க்கு பின் மதிமுக நிர்வாகி
வட சென்னை சிவாவும் ஏழு மலை போலவே நள்இரவில் கொலை செய்யப்பட்டார்.
இப்படியான பல ரண நினைவுகள் மனதில் உள்ளது.

#சார்பட்டா_இராயபுரம்ஏழுமலை_நள்ளிரவுகொலை
#மதிமுக
#mdmk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-7-2024

படங்கள்-
1. சார்பட்டா ஏழுமலை
2. வைகோ மாநிலங்கவை திமுக எம்பியாக, தேர்தலில் தலைமை செயலகத்தில் முதன்முறை வேட்பு மனு தாக்கல்


Sunday, July 7, 2024

#மதிமுக #சார்பட்டா இராயபுரம் ஏழுமலை நள்ளிரவு கொலை #நினைவுகள்



———————————————————-
1993 அக்டோபர் 2& 3 இல் திமுகவின் தலைவர் கலைஞர் அவர்கள் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். 
அவர்களிடம் பேசும்போது கலைஞர் “மத்திய அரசு மூலம் அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையானது இன்றைய மாநில அரசு மூலம் என்னிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதைப் பாருங்கள்” என்பதாக அந்தச்சுற்றறிக்கையை ஊடகங்களுக்குக் காட்டுகிறார்!

 “வை கோபால்சாமியின் ஆதாயத்திற்காக கலைஞரின் உயிரைப் பறிக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டு  இருக்கிறார்கள்” என்பதாகக் குறிப்பிட்டு  அந்தச் சுற்றறிக்கை என் கைக்கு வந்துள்ளது என்று கூறுகிறார். அப்போது ஜெயலலிதா தமிழ்நாட்டின்  முதலமைச்சராக இருக்கிறார்.

 பத்திரிக்கையாளிடம் மேலே கண்ட வகையில் கலைஞர் பேசிய பின் கூட்டம் முடிந்து விட்டது. அப்போதெல்லாம் கைபேசி போன்ற வசதிகள் இல்லை. 
அக்கூட்டம் முடிந்தவுடன் உடனே 
PTI-பி டி ஐ, ராமசாமி அவர்கள் உடனே என்னைத்  தொலைபேசியில் அழைத்து பத்திரிகையாளர் கூட்டத்தில் கலைஞர் இவ்வாறு மத்திய அரசு சுற்றறிக்கையைக் காட்டிப் பேசியிருக்கிறார். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? வைகோ எங்கே இருக்கிறார்? என்றும் கேட்டார். அதிர்ச்சியான அந்த செய்தியைக் கேட்டவுடன்

நான் உடனே வைகோவிற்கு போன் செய்தேன். Y block-அண்ணாநகர் 6214252
என்ற அந்த எண் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கிறது. 75159 அது என் லேண்ட்லைன் ‘தம்பி’பிரபாகரன் பயன் படுத்துவர். என் இன்றும் நினைவில் இருக்கிறது. 

அந்தத் தருணத்தில் வைகோவுடன் நான் பேசும்போது “இது மாதிரி கலைஞர் மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை வைத்து பத்திரிகையாளர்களிடம்  உங்களைப் பற்றிப் பேசி உள்ளார் அதை PTI ராமசாமி எனக்குக் கன்வே செய்தார்” என்றும் சொன்னேன்.
அப்போது வைகோ காரைக்குடியிலோ 
 அல்லது ராமநாதபுரத்திலோ ஒரு திருமணவிழாவில் கலந்து விட்டு திரும்ப இருக்கையில் அங்கு அவர் தங்கி இருந்து விடுதியின்  வாஷ்பேஷன் தவறி உடைந்து  வைகோவின் கால் மீது விழுந்து காயம் ஆகிவிட்டது. காலில் கட்டுப்போட்டுச் சிகிச்சையில் இருந்தார் வைகோ!

அவர் தொலைபேசியில் “உடனே இங்கே புறப்பட்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார். நானும்  புறப்பட்டு அங்கு சென்றேன்.
அவர் என்ன சொன்னார் என்று சரியாக விசாரித்துச் சொல்லுங்கள் என்று என்னிடம் வைகோ கேட்டுக் கொண்டார். நான் பத்திரிகையாளர் பகவான் சிங் போன்ற சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடமே பேச வைத்து  கலைஞர் சொன்னதை உறுதி செய்தேன்.

அதைக் கேட்ட வைகோ உடனே நாம் இதற்கு மாறாக ஒரு அறிக்கை தயார் செய்ய வேண்டும் என்று மனச்சங்கடத்துடன்சொல்கிறார்.
அந்த அறிக்கையை டைப் செய்ய உதவியாளர்கள் யாரும் கூட அவர் பக்கத்தில் இல்லை.  அவர் அக்காலத்தில் அண்ணாநகர் வாடகை வீட்டில் தான் குடியிருந்தார்.
உடனே நாங்கள் இருவரும் அங்கு வைத்து ஒரு  அறிக்கையைத் தயார் செய்தோம். இது குறித்து தொலைபேசியில் வைகோ வீரபாண்டி ஆறுமுகத்திடம் பேசினார். பொன் முத்துராமலிங்கத்திடமும் தொடர்ந்து பிறகு கண்ணப்பனிடமும் பேசினார்.
இப்படித்தான் அந்த பேச்சுவார்த்தை முதல் கட்டமாக நடந்து கொண்டிருந்தது. பொன் முத்துராமலிங்கம் உடனே புறப்பட்டு மறுநாள் வந்து விட்டார். வீரபாண்டி ஆறுமுகம் அன்று சேலத்தில் இருந்தார். சென்னையில் அவரது தி நகர் இல்லத்தில் மறுநாள் சென்று அவரைச் சந்தித்தோம்.

அதற்குப் பிறகுதான் கண்ணப்பன், எல். கணேசன், செஞ்சிராமச்சந்திரன் மதுராந்தகம் ஆறுமுகம் போன்றோர்கள் எல்லோரும் கூடிச் சந்தித்து இந்த சுற்றறிக்கை பற்றி  பேச்சுவார்த்தை நடத்திக் போது மிக அவசரமாக திமுகவை விட்டு வைகோ நீக்கப்பட்டார்.

அதன் தொடர் விளைவாக வைகோவிற்கு அநீதி நடந்து விட்டது கலைஞர் தன் குடும்ப அரசியலுக்காக வைகோவை வெளியேற்றி அவமானப்படுத்தி விட்டார் என்று பெரும் பரபரப்பாகி அதை எதிர்த்து நீதி கேட்டு 
அன்று தமிழ்நாட்டில் தீக்குளித்தார்கள். வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதன் அடியில் தமிழ்நாட்டு அரசியலே அன்று பெரும் குழப்பமாகி  விட்டது.

இதை  எதற்குச் சொல்கிறேன் எனில் கட்சிப் பொருளாளராக இருந்த
எம்ஜிஆரை அவர் கணக்குக் கேட்டதால்  திமுகவை விட்டு அதன் செயற்குழு நீக்கிய போது அவருக்கு நாடெங்கும் ஏராளமான ரசிகர் மன்றங்கள் இருந்தபடியால் அவை பெருமளவில் எம் ஜி ஆர்   தொடங்கிய அதிமுகவிற்கு பின்னால் ஆதரவாகச் சென்று விட்டன.

அதுபோல அல்லாமல் கலைஞருக்கும் வைகோவுக்கும் இடையில் நடந்த இந்த முரண்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சியினர் வை கோவிற்கு ஆதரவானதொரு நிலை எடுத்து    டெல்லி பொலிட் பீரோ மூலம் 
இது “திமுகவில் நிகழ்ந்த ஒரு செங்குத்து பிளவு “என்று   வர்ணித்தார்கள்.ஹரிகிஷன் சுர்ஜித் சிங்
அன்றைக்கு சி.பி.எம் கட்சியின் தலைவராக இருந்தார். இதைக் கேட்பவர்களுக்கு வரலாற்றுக் கவனம் வேண்டும் என்பதற்காகத் தான் சொல்கிறேன்

மேற்கண்ட ஆறு பேர் தீக்குளிப்பிற்குப் பிறகு பரபரப்பில் தமிழகமே  இருந்த பொழுது அதற்கு முன்பாகக் குமரி மாவட்ட திமுகச் செயலாளர் ரத்தினராஜ், நெல்லை மாவட்ட செயலாளர்   டி எ கே லக்குமணன், தேனியை உள்ளடக்கிய மதுரை மாவட்டச் செயலாளர் பொன் முத்துராமலிங்கம் ,திருச்சி மாவட்டச் செயலாளர் செல்வராஜ், இவரும் முன்னாள் அமைச்சர் தான்! பிறகும் கீழ் தஞ்சை மாவட்டச் செயலாளர் வேதாரண்யம் மீனாட்சி சுந்தரம், 
ஒன்றுபட்ட தென்னர்காடு மாவட்டச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், 
திருப்பூர் உள்ளடங்கிய அன்றைய கோவை மாவட்டச் செயலாளர் கண்ணப்பன், ஈரோடு மாவட்டச் செயலாளர் கணேசமூர்த்தி ,உட்பட அனைவரும் வைகோவுக்கு ஆதரவாகத் திமுகவிலிருந்து விலகி வந்தார்கள்.

சேலம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்கள் முதல் மூன்று நாள் வைகோவுக்கு ஆதரவாக இருந்துவிட்டு மீண்டும் திமுகவிற்குத்  திரும்பிக்  கலைஞரைச் சந்திக்கப் போய்விட்டார்.

இப்படித்தான்  திமுகவை விட்டுப் பிரிந்து தனித்து வைகோ தலைமையில் ஆன மதிமுக உருவானது. சென்னையை பொருத்தவரை துறைமுகம்
 அ. செல்வராசன் எம் எல் ஏ வும் வைகோ உடன் வந்து சேர்ந்தார். திமுக இரண்டு எம் எல் ஏகளில் பரிதி இளவழுதி திமுகவில் இருந்து விட்டார். அப்போது தினகரன் கே பி கே, மதுராந்தகம் ஆறுமுகம் கூட அப்போது மதிமுகவிற்குள் வரவில்லை .பிறகுதான் வந்தார்கள்.

துறைமுகம் அ. செல்வராஜுடன் எப்போதும் உடன் இருந்தவர்தான் அன்றைக்கு கொலையுண்டு போன ராயபுரம் ஏழுமலை. அவரும்    மதிமுகவிற்குள் வந்தவுடன்  சென்னை மாவட்டத்தின் செயலாளராக ஆனார்.

மூன்று நாட்கள் நாங்கள் மதிமுக கட்சியை எப்படிச் சீரமைப்பது என்று திருவேற்காடு கோவிந்தசாமி அவர்கள் வீட்டில் வைத்து இரவு பகல் பாராது அதற்கான திட்டங்களை அதற்கான கொள்கையை வகுப்பதில் ஈடுபட்டோம் .யார் யாருக்கு எந்தெந்தப்  என்னென்ன பொறுப்புகளை யார் செய்வது என்ற வகையில் கட்சியின் உள்கட்டமைப்பைச் செம்மையாக உருவாக்குவது என்று கலந்து பேசி விவாதித்தோம்.
 
அதன் தொடர்ச்சியில் அடுத்த கட்டத் தலைவராக வரவேண்டிய  வைகோவைத் திமுகவை விட்டு  நீக்கியதற்கான நீதி கேட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் இரவு பகல் பாராது விடிய விடிய பல கூட்டங்களை நடத்தினோம். ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும் அதிகாலை 5 மணி அளவில் தான் வைகோ பேசுவார். கூட்டம் என்றால் அப்படி ஒரு கூட்டம் எங்கு சென்றாலும் எங்கு மேடை போட்டுப் பேசினாலும் மக்கள் அலை அலையாய் வந்து அமர்ந்து பங்கெடுத்தார்கள். 

பிறகு என்ன நடந்தது எனில் சென்னை சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் இருந்து  நீதி கேட்பு பேரணியாகத் தொடங்கி பழைய அடையாறு கேட் ஹோட்டல் வழியாக ஆழ்வார்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலை கடற்கரைச் சாலை வழியாக சீரணி அரங்கில் மக்கள் திரல் கூட்டம் நடந்தது. அங்கு இந்த பேரணி மதிமுக மாநாட்டு மேடையை அடைவது என்று நானும் ஏழுமலை இருவரும் திட்டமிட்டு 
அதற்கான அனுமதிகளை அன்றைக்குக் சென்னை மாநகர காவல்துறையிடம் அனுமதியாக வாங்கினோம். அன்றைக்கு ஜெயலலிதா முதலமைச்சர்.  ஒரு வரலாறு காணாத ஊர்வலம்!! எங்கு பார்த்தாலும் மக்கள் அணி அணியாய் வந்து சேர்ந்தார்கள்!!! அப்படி ஒரு கூட்டத்தை நான் சென்னையில் அதற்குப் முன்னும் பிறகும் பார்க்கவில்லை. தாம்பரத்தைத் தாண்டிச் செங்கல்பட்டு வரையில் பேரணிக்கான வாகனங்கள் வழிநெடுகக்  காத்து நின்றிருந்தன. ஏறக்குறைய பதினெட்டு மணி நேரம் மக்கள் ஊர்வலம் மெல்ல நடந்து நகர்ந்து சீரணிக் கடற்கரையை அடைந்தது. அந்தக்கடற்கரை அரங்கத்திற்கு  தொடர்ந்த இந்த ஊர்வலத்தின் கடைசி வண்டி வந்து சேரும்போது காலை 5 மணி. 
அவ்வளவு சிறப்பாக நடந்த ஒரு பிரம்மாண்டமான பேரணி அது.

சீரணிக் கடற்கரை  மாநாட்டு மேடையில் காலை ஐந்து மணியளவில் வைகோ தனது பேச்சைத் தொடங்கினார். வங்கக் கடலில் கதிரவன் உதித்து செம்பிழம்பாகத் தோன்றியது. அந்தக் காலையில் நடை பயிற்சி செய்பவர்கள் கூட  பாதைகளைப்பயன்படுத்த முடியாத அளவிற்கு ஏகப்பட்ட மக்கள் குழுமிய பேரணியாக அது இருந்தது……2 நாளை தொடரும்.

#சார்பட்டா_இராயபுரம்ஏழுமலை_நள்ளிரவுகொலை
#மதிமுக
#mdmk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
7-7-2024.

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...