Sunday, February 9, 2025

திமுக தெலுங்கர் கட்சி அல்ல

#திமுகதெலுங்கர்கட்சிஅல்ல
—————————————
பெரியார் மொழி அடிப்படையில் கன்னடர் மட்டுமே! தெலுங்கர்அல்ல! திமுகவைத் தெலுங்கர் கட்சி என்கிறார்கள். 

உண்மையில் அது தெலுங்கர் கட்சியாக இருந்தால் வைகோவை எதற்கு 
கட்சியை விட்டு நீக்கினார்கள். 2006 முதல் 2011  வரையிலான திமுக ஆட்சியில் ஆற்காடு வீராச்சாமி மிகவும் ஒடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு அவர் வகித்த பதவிகள் கூட கோப்புகளில் வராமல் மறைக்கப்பட்டார். அதையெல்லாம் நான் கண்ணால் பார்த்ததுண்டு. 

அமைச்சராகும் தகுதி இருந்தும் விருதுநகர் பெ சீனிவாசன் ஏன் ஒதுக்கப்பட்டார். அதேபோல் சிந்தனைச் சிற்பி சிபி சிற்றரசு அவர்களுக்கு ஏன் அமைச்சர் பதவி வழங்க வில்லை? 

அதைத் தொடர்ந்து என்னைப்போல் திமுக விற்கு உதவி செய்து பல வகையில் உழைத்து ஒத்துழைத்து வந்தவர்களும் ஏன் நீக்கப்பட்டார்கள். திறமையே தகுதிக் குறைவு என்கிற பார்வை  திமுகவிற்கு எப்படி வந்தது? குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலோ தூத்துக்குடி உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களிலோ ஒரு  திறமையான நாயுடு கூடத் தேர்தலில் நிற்க முடியாது? அப்படி இன்றைய நிலை.கலைஞர் போட்யிட எனக்கு வாய்ப்பு தர நினைத்தும் முடியவில்லை. 

இதே ஸ்டாலின் தெலுங்கு பேசுவர்களை விரும்பியது இல்லை. அவரின் அடிமைகளை விரும்புவார்.இப்படி இருக்கும்போது திமுக ஒரு தெலுங்கர் கட்சி என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது!? 

கலைஞரே தெலுங்கர் கிடையாது என்று அடித்துச் சொல்ல முடியும்! அவர் குடும்பம்  தெலுங்கர் குடும்பம் என்றெல்லாம் வரையறுக்க முடியாது.! 

உண்மையைச் சொன்னால்  தமிழ்நாட்டில் அதிக ஜனத்தொகை கொண்ட சாதிகளுக்கு தான் திமுகவில் அதிக மரியாதையும் இட ஒதுக்கீடுகளும் அதன் அடிப்படையில்தான் எல்லா வகைப் பலன்களும் நலன்களும் கிடைக்கின்றன. ஏறக்குறைய வலுத்த மக்கள் தொகை கொண்ட  சாதித் தலைவர்கள் தான் திமுகவைப் பயன்படுத்தி சாதித்துக் கொள்கிறார்கள்.! நிலைமை இப்படி இருக்க தமிழக நலன் மீது அக்கறை கொண்ட தெலுங்கு பேசுபவர்கள் என்று சொல்லித்  தொடர்ந்து அவர்கள் மீது வெறுப்பை ஏற்றக்கூடிய வந்தேறி என்கிற வார்த்தையை பயன்படுத்தி அவர்களை மௌனிக்க செய்வதும் கையாலாகாமல் ஆக்குவதுமே இந்தத் தமிழ்நாட்டு தேர்தல் அதிகாரத்தின்  யுத்தியாக இன்றைக்கு இருக்கிறது.

#திமுகதெலுங்கர்கட்சிஅல்ல #திமுக


#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
8-2-2024

#கேஎம்முன்ஷி #KMMunshi

#கேஎம்முன்ஷி #KMMunshi 
—————————————
பிப்ரவரி 8, 1971 இன்று   கன்னையாலால் மனேக்லால் முன்ஷி (கே. எம். முன்ஷி) நினைவு நாள். இவர் குஜராத் மாநிலத்தில் பிறந்தவர்   விடுதலைப் போராட்ட வீரர்,  கல்வியாளர்,மற்றும்எழுத்தாளர்.
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று இரண்டு ஆண்டுகள் சிறை சென்றவர் 
துவக்கத்தில் சிறந்த தொழில்முறை வழக்கறிஞரான இவர் பின்னாளில் இலக்கியம் மற்றும் அரசியலில் ஈடுபாடு கொண்டார். குஜராத் இலக்கியத்தில் மிகவும் அறியப்பட்டவர். மகாத்மா காந்தியின் ஆசியுடன், கே. எம். முன்ஷி 1938ல் பாரதிய வித்தியா பவன் எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் அண்ணல் அம்பேத்கார் தலைமையிலான இந்திய அரசியலமைப்பு  நிர்ணயசபை உறுப்பினராக பணியாற்றினார். ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராக பணியாற்றினார் உத்திரபிரதேச மாநில ஆளுநராக பதவி வகித்துள்ளார்.

Kanhaiyalal Maneklal Munshi (30 December 1887 – 8 February 1971), popularly known by his pen name Ghanshyam Vyas, was an Indian independence movement activist, politician, writer from Gujarat state. A lawyer by profession, he later turned to author and politician. He is a well-known name in Gujarati literature. He founded Bharatiya Vidya Bhavan, an educational trust, in 1938.

Munshi wrote his works in three languages namely Gujarati, English and Hindi. Before independence of India, Munshi was part of Indian National Congress and after independence, he joined Swatantra Party. Munshi held several important posts like member of Constituent Assembly of India, minister of agriculture and food of India, and governor of Uttar Pradesh. In his later life, he was one of the founding members of Vishva Hindu Parishad.

#கேஎம்முன்ஷி #KMMunshi

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
8-2-2025.


திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA

திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் .?? 

1920கள் துவங்கி 1931 வரை உச்சம் பெற்ற திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை முடிவுக்கு வந்தது லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின் அடிப்படையில்.

அதற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிது சிறிதாக உருவெடுத்த சிக்கந்தர் தர்ஹா விசயம் நெல்லித் தோப்பு  அன்னச்சத்திரம் ஆக்கிரமிப்பு என்று விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் 1957ல் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹா செல்லும் இஸ்லாமியர்கள் பச்சை நிற கொடியை பறக்க விட்டனர் .



அந்த கொடிகள் பாகிஸ்தான் கொடிகளின் சாயலில் இருந்ததை கண்டு முதல் முதலில் அதை தடுக்கும் பொருட்டு களத்தில் அறவழிப் போராட்டத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தன்மானமிக்க இந்துவாக இருந்த நபர் தான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சின்ன கருப்ப தேவர் அவர்கள். 

அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700 க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிற கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்த வைத்த வெற்றி போராட்டத்தை செய்தார். 

1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய  சின்ன கருப்ப தேவர் இந்துக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்தார். 

ஆனால் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில்  புனித மலையில் ஆடு கோழி பலியிடுவதற்கு ஆதரவாக செயல்பட்டதோடு அல்லாமல். திருப்பரங்குன்றம் சென்று சிக்கந்தர் தர்காவில் வழிபட்டு சமத்துவத்தை போதிப்பதாக இன்றைய காங்கிரஸ் கட்சி.

இந்து விரோதத்தை செய்வதையும் நாளைய வரலாறு பேசும். 
காங்கிரஸ் கட்சியில் இருந்த கடைசி தன்மானமிக்க என்று அடையாளப்படுத்த வேண்டிய நபர் திருப்பரங்குன்றத்தினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா சின்ன கருப்ப தேவர் அவர்களே. 

இவர் 1957 முதல் 1967 வரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். 
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டின் உடைய தலைவராக ஆகவும் 1941 முதல் பதவி வகித்துள்ளார்

#திருப்பரங்குன்றம் 
#தைப்பூசம்


What you call your destiny is truly your character and that character can be altered.

What you call your destiny is truly your character and that character can be altered. If you create an act, you create a habit. If you create a habit, you create a character. And good character is not formed in a week or a month. It is created little by little, day by day. Protracted and patient effort is needed to develop good character.If you create a character, you create a destiny. Understand your ability can take you to the top, but it takes character to keep you there..... 

#ksrpost
8-2-2025


சீமான் - பிரபாகரன் புகைப்படம்... புலிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்" - K.S Radhakrishnan Interview

சீமான் - பிரபாகரன் புகைப்படம்... புலிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்" - K.S Radhakrishnan Interview 

#ntkseeman #prabhakaran #periyar #NTK #Naamtamilarkatchi #ntkitwing #mathivadhani #dwaraka #duvarakaprabhakaran #pazhanedumaaran #kasiananthan #karthicmanoharan #saattaiduraimurugan #idumbavanamkarthik #erodebyelection #erodeeastelection
#periyar #thanthaiperiyar #Tvkvijay #aadhavarjuna #ctrnirmalkumar #johnarokiasamy #jhonarokias

youtu.be/SVHCLYywQIQ

டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள்

ஈராக்கின் தென்கிழக்கு பகுதியில், டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகள் சங்கமிக்கும் இடத்தில், வரலாற்று ரீதியாக ம'டான் என்று அழைக்கப்படும் சதுப்பு நில அரேபியர்களின் தாயகமாக இருந்த ஒரு பரந்த சதுப்பு நிலம் உள்ளது. பெரும்பாலும் ஏதேன் தோட்டம் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதி, நீர்வழிகள் மற்றும் மிதக்கும் தீவுகளின் சிக்கலான வலையமைப்பால் வகைப்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, சதுப்பு நில அரேபியர்கள் தங்கள் தனித்துவமான சூழலுடன் சிக்கலான முறையில் இணைந்த ஒரு வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளனர். முதிஃப்கள் என்று அழைக்கப்படும் அவர்களின் குடியிருப்புகள், நாணல் மற்றும் நாணல்களிலிருந்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட குறிப்பிடத்தக்க மிதக்கும் கட்டமைப்புகள். இந்த நிலையான வீடுகள் ஆணி, கண்ணாடி அல்லது மரத்தைப் பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ளன, மேலும் சில நாட்களில் சேறு மற்றும் தாவரப் பொருட்களின் அடுக்குகளிலிருந்து உருவாகும் தீவுகளில் தங்கி கட்டப்படலாம்.
கணிசமான சவால்கள் மற்றும் அவர்களின் வாழ்விடத்தை மாற்ற பல்வேறு முயற்சிகளை எதிர்கொண்ட போதிலும், ம'டான்கள் குறிப்பிடத்தக்க மீள்தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர், ஈரநிலங்களின் இயற்கை சுழற்சிகளுடன் இணக்கமாக தங்கள் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பராமரித்து வருகின்றனர். இந்த நீடித்த கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செழித்து வளர்ந்த ஒரு வாழ்க்கை முறையைப் பற்றிய விலைமதிப்பற்ற நுண்ணறிவுகளை வழங்குகிறது, அவற்றின் தகவமைப்பு மற்றும் வலிமையைக் காட்டுகிறது. இந்த சமூகங்கள் தொடர்ந்து தங்கள் வாழ்க்கை முறையைப் பாதுகாக்க முடியும் என்பது எனது உண்மையான நம்பிக்கை.  அவர்களின் துணிச்சல் பாராட்டத்தக்கது, அத்தகைய வாழ்க்கை முறை அனைவருக்கும் பொருந்தாது என்றாலும், அவர்கள் காட்டும் மன உறுதி உண்மையிலேயே போற்றத்தக்கது.


ஈழம்-தந்தை செல்வா பற்றி பேசும் பலரும் அவர் சாகும்போது “தமிழரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என கூறிவிட்டுத்தான் இறந்தார்

வரலாற்றை மாற்றாதீர்கள்..!

தந்தை செல்வா பற்றி பேசும் பலரும் அவர் சாகும்போது “தமிழரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என கூறிவிட்டுத்தான் இறந்தார் என உரையாற்றி வரலாற்றை மாற்றுவது அப்பட்டமான பொய்  இது அறியாமை அல்ல..
வேண்டுமென தந்தை செல்வா தமிழீழத்தீர்மானத்தை எடுக்கவில்லை என ஒரு வகையான திசைதிருப்பும் பேச்சாகவே காணமுடிகிறது.

இதை பல தமிழரசுக்கட்சி மூத்த உறுப்பினர்களும் காலம் காலமாக மேடைகளிலும் பேசியுள்ளனர்.
தந்தை செல்வா சாவதற்கு ஆறுவருடங்களுக்கு முன்னரே 1970, காலப்பகுதியில் தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
அது தந்தை செல்வாவின் இறுதி வார்தையும் அல்ல..

தந்தை செல்வா சாவடைந்தது 1977, ஏப்ரல்,26, அவர் இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு முன்னர் அவர் இறுதியாக எடுத்த தீர்மானம் 1976, மே,14, ல் வட்டுக்கோட்டையில் “ தமிழருக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே”
இதுதான் தந்தை செல்வா சாகும்போது கூறிய இறுதி வார்த்தை.

இந்த தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையில்  தமிழர் விடுதலை கூட்டணி தயாரித்து 1977, யூலை,21, தேர்தலில்தான் வடகிழக்கில் 18, தொகுதிகளில் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ்மக்கள் வழங்கினர் என்பதே உண்மை.
தமிழீழத்திற்காக அன்று மக்கள் வழங்கிய ஆணை இதுவரை மீளப்பெறவில்லை என்பதும் வரலாறு.

உண்மையை மறைத்து மூத்த அரசியல் வாதிகள் சிலரும் 
இன்றைய இளைஞர்களும் தந்தை செல்வா சாகும்போது கடவுள்தான் தமிழரை காப்பாற்றவேண்டும் என கடவுளிடம்தான் தமிழர்களை பாரம் கொடுத்தமாதிரியான பொய்களை பரப்புவதை காணமுடிகிறது.

தந்தை செல்வா சாகும்போது கடவுளிடம் பாரம் கொடுக்கவில்லை பிரபாகரனினமே பாரம் கொடுத்தார் இதுதான் வரலாறு.

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...