Sunday, February 9, 2025

திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA

திருப்பரங்குன்றம் பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது காங்கிரஸ் கட்சி. திருப்பரங்குன்றம் MLA என்பது எத்தனை நபர்களுக்கு தெரியும் .?? 

1920கள் துவங்கி 1931 வரை உச்சம் பெற்ற திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹா பிரச்சினை முடிவுக்கு வந்தது லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பின் அடிப்படையில்.

அதற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்று சிறிது சிறிதாக உருவெடுத்த சிக்கந்தர் தர்ஹா விசயம் நெல்லித் தோப்பு  அன்னச்சத்திரம் ஆக்கிரமிப்பு என்று விஸ்வரூபம் எடுத்து வந்த நிலையில் 1957ல் மலை உச்சியில் சிக்கந்தர் தர்ஹா செல்லும் இஸ்லாமியர்கள் பச்சை நிற கொடியை பறக்க விட்டனர் .



அந்த கொடிகள் பாகிஸ்தான் கொடிகளின் சாயலில் இருந்ததை கண்டு முதல் முதலில் அதை தடுக்கும் பொருட்டு களத்தில் அறவழிப் போராட்டத்தை எடுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த தன்மானமிக்க இந்துவாக இருந்த நபர் தான் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  சின்ன கருப்ப தேவர் அவர்கள். 

அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட 700 க்கும் அதிகமான பொது மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை செய்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் பறக்கவிட்ட அந்த பச்சை நிற கொடிகளை எல்லாம் அப்புறப்படுத்த வைத்த வெற்றி போராட்டத்தை செய்தார். 

1931 லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய  சின்ன கருப்ப தேவர் இந்துக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுத்தார். 

ஆனால் இன்றைக்கு அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில்  புனித மலையில் ஆடு கோழி பலியிடுவதற்கு ஆதரவாக செயல்பட்டதோடு அல்லாமல். திருப்பரங்குன்றம் சென்று சிக்கந்தர் தர்காவில் வழிபட்டு சமத்துவத்தை போதிப்பதாக இன்றைய காங்கிரஸ் கட்சி.

இந்து விரோதத்தை செய்வதையும் நாளைய வரலாறு பேசும். 
காங்கிரஸ் கட்சியில் இருந்த கடைசி தன்மானமிக்க என்று அடையாளப்படுத்த வேண்டிய நபர் திருப்பரங்குன்றத்தினுடைய சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா சின்ன கருப்ப தேவர் அவர்களே. 

இவர் 1957 முதல் 1967 வரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். 
திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து போர்டின் உடைய தலைவராக ஆகவும் 1941 முதல் பதவி வகித்துள்ளார்

#திருப்பரங்குன்றம் 
#தைப்பூசம்


No comments:

Post a Comment

Stress, anxiety and depression are caused when you are living to please others*.

*Stress, anxiety and depression are caused when you are living to please others*. Stop worrying about other people understanding you. Believ...