#மத்தியபட்ஜெட்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்த பட்ஜெட் உரையின் கடைசி நேரத்தில் தான் வருமான வரி தொடர்பான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்த அறிவிப்பிலிருந்து நடுத்தர குடும்பத்தினர் பயனடைவார்கள்
அதன்படி, புதிய வருமான வரி முறையில் (New Tax Regime), ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்தவர்கள், 80 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி கட்டி வந்தனர். தற்போது விலக்கு அறிவிக்கப்பட்டுவிட்டதால், மாதம் ஆறாயிரம் ரூபாய் வரை மிச்சம் ஆகிறது.இப்படியொரு கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்தது. இதன் விளைவாக சந்தையில் பெரியளவில் வியாபாரம் இல்லாமல் போனதுதான் காரணம். மக்களிடம் வாங்குவதற்கான பணம் இல்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வியாபாரம் நடக்காவிட்டால் அரசுக்கு வரி வருவாய் வராது. பொருளாதாரம் வீழ்ச்சியடையும். இதைச் சரிசெய்வதற்கான உத்தியாக இந்த மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு என்ற அறிவிப்பின் மூலம் இந்தப் பணம், சந்தைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வருமான வரி விலக்கின் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றாலும், இந்தப் பணம் அப்படியே சந்தைக்குச் செல்லும். வாகனம் வாங்குவது, பொருட்களை வாங்குவது என மக்கள் முதலீடு செய்யும்போது, இதன் வாயிலாக 15 சதவீத ரூபாய் ஜிஎஸ்டியாக செல்லும். அதுதவிர, நிறுவனங்களின் வருவாயில் 25 சதவீதம் வரையிலான வருவாய் அரசுக்குச் செல்லும். எனவே, சுமார் 40 சதவீத தொகை பல்வேறு வரிகளின் மூலமாக மத்திய அரசுக்கு வந்து சேரும்
கடந்த முறை புறநானூற்று பாடல் பட்ஜெட்டில், இம்முறை தெலுங்கு புலவரின் பாடல், திருக்குறளை மேற்கோள் காட்டியுள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
No comments:
Post a Comment