#*அண்ணாசாலை நினைவுகள்*…. அண்ணாசாலையில் 1991ல் நடந்த காங்கிரஸ் திமுக மோதலில் காங்கிரஸ் வழக்கறிஞர் சுப்பிரமணிய ஐயர் கொல்லப்பட்டார்.நெருங்கிய குடும்ப நண்பர் தி.சு.கிள்ளிவளவன் ஒரு கண் இழந்தார். வாழப்பாடியார் உயிர் தப்பினார்.வழக்கு வழக்கம்போல் ஒன்றுமில்லாமல் போயிற்று. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாண்டி பஜாரில் பல கோடி மதிப்புள்ள தெரு ஓர அரசு நிலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. கொலையுண்ட சுப்பிரமணிய ஐயருக்கு இரண்டு மகள்கள்.அவர்கள் படிப்பிற்கு வாழப்பாடியார் உதவினார். கிள்ளிவளவனை கடைசி வரையில் காப்பாத்தினார்.
அன்று குறிவைக்கப்பட்டது வாழப்பாடியார். சிக்கியது மற்றவர்.
அண்ணாசாலை - அண்ணாமலை - உதயநிதி என்றவுடன் இது நினைவிற்கு வந்தது. அதே போல எம்ஜிஆர் ஆட்சி 1980இல் என நினைவு கலைக்கப்பட்டது. அதை கண்டித்து நடந்த பேரணியை தாக்கும் வகையில் பெரிய கலவரம் பல்லவன் இல்லம்- காமராஜர சிலை அருகில் நடந்தது.காமராஜர் காலத்தில்
ஸ்தாபன காங்கிரஸ் பேரணியை 1973 இல் தாக்குதல் நடந்து சென்னை பொது மருத்துமனையில் பலர் சிகிச்சைக்கு சேர்கப்பட்டனர்.
#ksrpost
21-2-2025.
No comments:
Post a Comment