#உண்மையான தமிழ் தேசியத்தை சொன்ன நாவலர் சோமசுந்தர பாரதி
———————————————————-
சமீபத்தில் முக்கிய அரசியல்த் தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இரண்டு மூன்று பேர் என்னிடம் நேரிலும் கைபேசியிலும் விசாரித்துக் கேட்டு விட்டார்கள்! இன்று எட்டையபுரம் பாரதி மண்டப காப்பாளர் தொடர்பு கொண்டும்
கேட்டார்.
நாவலர் சோமசுந்தர பாரதி அவர்கள் குறித்த நூல்கள் ஏதும் உங்களுடைய வீட்டுநூலகத்தில் இருக்கிறதா? அது அவர் குறித்த விவரங்கள் தர முடியுமா என்று!
முதன் முதலாகத் தமிழில் தமிழ்த் தேசியம் பற்றி பேசிக் கொண்டாடிய எழுதிய அதன் முக்கியத்துவத்தை
துல்லிதமாக எடுத்துரைத்து அதற்கான போராட்ட முன்வடிவை பிரதிநிதித்துவம் செய்த கவி பாரதியின் நணபர் எட்டையபுரம் நாவலர் சோமசுந்தர பாரதி அவர்கள் குறித்த நூல்கள் தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வேதனை! இதுதான் செந்தமிழ்நாடு! கன்னல் தமிழ் திருநாடு!
தொடங்கியவர்கள் இருக்க தூங்கிக் கிடந்தவர்கள் எல்லாம் இப்போது நானும் கூட்டு நரியும் கூட்டு என ஒன்று சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். மதுரை பசுமலை பாரதி வரலாறு அறியா மண் இது. #வள்ளலார், #மறைமலைஅடிகள், #திருவிக, #நாவலர்பாரதி என்ற ஆளுமைகளின் கோட்பாடு #தமிழ்தேசியம்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
4-1-2025.
No comments:
Post a Comment