வரலாற்றை மாற்றாதீர்கள்..!
தந்தை செல்வா பற்றி பேசும் பலரும் அவர் சாகும்போது “தமிழரை கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என கூறிவிட்டுத்தான் இறந்தார் என உரையாற்றி வரலாற்றை மாற்றுவது அப்பட்டமான பொய் இது அறியாமை அல்ல..
வேண்டுமென தந்தை செல்வா தமிழீழத்தீர்மானத்தை எடுக்கவில்லை என ஒரு வகையான திசைதிருப்பும் பேச்சாகவே காணமுடிகிறது.
இதை பல தமிழரசுக்கட்சி மூத்த உறுப்பினர்களும் காலம் காலமாக மேடைகளிலும் பேசியுள்ளனர்.
தந்தை செல்வா சாவதற்கு ஆறுவருடங்களுக்கு முன்னரே 1970, காலப்பகுதியில் தமிழரை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார்.
அது தந்தை செல்வாவின் இறுதி வார்தையும் அல்ல..
தந்தை செல்வா சாவடைந்தது 1977, ஏப்ரல்,26, அவர் இறப்பதற்கு ஏறக்குறைய ஒரு வருடங்களுக்கு முன்னர் அவர் இறுதியாக எடுத்த தீர்மானம் 1976, மே,14, ல் வட்டுக்கோட்டையில் “ தமிழருக்கான தீர்வு தமிழீழம் மட்டுமே”
இதுதான் தந்தை செல்வா சாகும்போது கூறிய இறுதி வார்த்தை.
இந்த தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தல் அறிக்கையில் தமிழர் விடுதலை கூட்டணி தயாரித்து 1977, யூலை,21, தேர்தலில்தான் வடகிழக்கில் 18, தொகுதிகளில் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ்மக்கள் வழங்கினர் என்பதே உண்மை.
தமிழீழத்திற்காக அன்று மக்கள் வழங்கிய ஆணை இதுவரை மீளப்பெறவில்லை என்பதும் வரலாறு.
உண்மையை மறைத்து மூத்த அரசியல் வாதிகள் சிலரும்
இன்றைய இளைஞர்களும் தந்தை செல்வா சாகும்போது கடவுள்தான் தமிழரை காப்பாற்றவேண்டும் என கடவுளிடம்தான் தமிழர்களை பாரம் கொடுத்தமாதிரியான பொய்களை பரப்புவதை காணமுடிகிறது.
தந்தை செல்வா சாகும்போது கடவுளிடம் பாரம் கொடுக்கவில்லை பிரபாகரனினமே பாரம் கொடுத்தார் இதுதான் வரலாறு.
No comments:
Post a Comment