அரசியலில் கொள்கைப் பிடிப்பு, நேர்மை, அர்ப்பணிப்பு, பணி என்பது வேடிக்கை பொருளாகிப் போன இக்காலத்தில் கொள்கைக்காக ஒருவர் பெரிதாக இன்றைய வியாபார அரசியல் களத்தில் என்ன செய்துவிட முடியும்?
ஓர் அரசியல் சித்தாந்தத்துக்கு நன்றிக்கடன் பட்டவர்களைப்போல…. ஒரு அரசியல் சித்தாந்தத்தை சுயலாபம், பதவி, அதிகாரம் அடைய பயன்படுத்துபவர்கள் மட்டுமே மேற்கண்ட வகைமையில் வருவர். அவர்களுக்கு மட்டுமே அறிவைத்தாண்டிய 'விசுவாசம்' (அடிமையாக) இருக்கும்.
இங்கு இருக்கும் பலப்பல சித்தாந்தங்களில் மனித குல மேம்பாட்டுகானது என்று ஒன்றை ஆராய்ந்து, கண்டறிந்து அதில் பிடிப்புடன் இருப்பவர்களை இந்த மேற்கோள் குறிப்பிடவில்லை என வைத்துக் கொள்ளலாமா ? நமது அடையாளம் என்பது நம்முடைய அறிவுச் செயல்பாடுகளால், சமூகப் பங்களி
ப்பால் …..அந்த அறிவுச் செயல்பாடுகளையும், சமூக பங்களிப்பையும் செய்யும் துணிவையும், ஊக்கத்தையும் எது எளிக்கிறதோ அதுவே சித்தாந்தம் அல்லது கொள்கை.
No comments:
Post a Comment