பொழுது விடிஞ்சு எழுந்தா இதே தேதியில் அன்று என்ன நடந்ததுன்னு யோசிக்க வைக்கிறது. ஞாபகம் வந்து அந்த நினைவில் மூழ்கினால் அதுவே நாள் பூரா நம்மை சுறுசுறுப்பா வைக்கிறது.
இப்பதான் நடந்தா மாதிரி இருக்கு. 40 வருசம் ஓடிப்போச்சுங்க. 1984 அக்டோபரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற மக்கள் திலகம், அங்கிருந்தே தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராகவே 1985 பிப்ரவரி 4 ல் இதே தேதியில் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பரங்கிமலை ராணுவ மைதானத்தில் மக்கள் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் காலை 7 மணியளவில் கலந்து கொண்டார். அவரைக் காண இரவு முழுவதும் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
பரங்கிமலை மைதானத்தில் தனக்கு வரவேற்பு அளித்த மக்களை நோக்கி எம்.ஜி.ஆர் கும்பிடும் படம் இதோ..40 வருசம் ஆச்சு
No comments:
Post a Comment