Sunday, February 2, 2025

#பிரபாகரன், பெரியார், திராவிடம்

#பிரபாகரன், பெரியார்,  திராவிடம்
#வேலுப்பிள்ளைபிரபாகனோடு உடனிருந்தும் பல சந்தர்ப்பங்களில் நேரில் மனம் விட்டுப் பேசிய அளவிலும் 
கிட்ட 2009 முள்ளிவாய்க்கால் சம்பவம் வரை தொடர்பு இருந்தும், அதற்கிடையே ஈழத்திற்கு நான் சென்று அவரைச் சந்தித்து வந்த போதும் கூட பிரபாகரன் பெரியாரைப் பற்றி எப்போதும் எதுவும் பேசியதில்லை.

தேவையில்லாமல் பிரபாகரனையும் பெரியாரையும் எதிரெதிர் நிறுத்தி அரசியல் செய்வது மெய்ப்பொருள் காண்பதாக ஆகாது. அதற்கு ஆழ்ந்த புரிதலும் தெளிவும் வேண்டும். தனக்குச் சம்பந்தம் இல்லாத ஆனால் தனக்கான இன்றைய வசதி கருதி  மூன்றாவது மனிதர்களைத் தன் மனம் போன போக்கில் பயன்படுத்திக் கொள்வது அரசியல் நாகரிகமாகாது! அது மிகவும் சுயநலமானமானது மட்டுமே!

‘தம்பி’பிரபாகரனுக்கும் திராவிட இயக்கங்களுடன் எந்த முரண்பாடுமில்லை. எம்ஜிஆரை ஏன் விரும்பினார் என நன்கு எனக்குத் தெரியும்.அவர் கலைஞரையும் என் திருமணத்தில்  சந்தித்தார். இந்திரா காந்தி மீது அவருக்கு மரியாதை உண்டு. எதிர்நிலையில் இருந்த வாஜ்பாயை சந்தித்த பின் மதிப்புமிக்கவர் என சொன்னதுண்டு. இங்கு வெற்று சவடால்கள் நிறைந்து பேசுகின்றனர்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
2-2-2025.


No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...