#*உழவர் தலைவர்
நாராயணசாமிநாயுடு
நூற்றாண்டு*
————————————
நாராயணசாமி நாயுடு அவர்களின் நூற்றாண்டு விழாவில் கோவில்பட்டியில் நினைவுச் சிலை வைப்பதற்கான ஏற்பாடு!
விவசாய சங்கத் தலைவர் திரு நாராயணசாமி அவர்கள் மிக தீவிரமாக விவசாயிகளின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டு மக்களை திரட்டிக் கொண்டிருந்த கால வர்த்தமான சமயத்தில் தமிழ்நாடு முழுக்க விவசாயிகள் கூட்டம் கூட்டமாக பச்சைத் துண்டை அணிந்து கொண்டு பல்வேறு கூட்டங்களில் தங்களது உரிமைகளை முழக்கமாக வைத்து அவரது தலைமையில் போராடிக் கொண்டிருந்தார்கள். விவசாயிகளை மையமாக வைத்து தொடங்கிய அந்த போராட்டம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பான இயக்கமாகி வந்த வேளையில் அன்றைய ஆளும் வர்க்கங்கள் அனைவரும் அவரது நியாயமான கோரிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட விவசாயகளின் உரிமைகள் அவர்களின் விவசாய பொருட்களுக்கு நிர்ணய விலை சந்தையில் இடைத்தரகர்களின் நீக்கம் குறித்த பேச்சின் மீது அச்சம் கொண்டிருந்தார்கள். அப்படியான சமயத்தில் தான்
அவர் பிறந்த கோவை மாவட்டம் வையம்பாளையம் கிராமத்திற்கு அன்றைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களும் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களும் நேரில் சென்று வருகின்ற தேர்தலில் தங்கள் கூட்டணிக்கான ஆதரவுகளை நீங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டதெல்லாம் நடந்தது. கலைஞரும் திரு நாராயணசாமி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என்னிடம் கூறிய போது நான் தான் சென்று அவரைக் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு அழைத்து வந்தேன். பிறகு அது குறித்து கல்கி பிரியன் கூட ஒரு கட்டுரை எழுதினார் எனக்கு நாராயணசாமி அவர்களுடன் இருந்த அந்தக் காலங்கள் இன்றளவும் பசுமையாக ஞாபகத்தில் இருக்கின்றன. அப்போது நாராயணசாமி அவர்கள் சென்னைக்கு வந்தால் ஸ்வாகத் ஓட்டலில் அல்லது ராயப்பேட்டை பழைய உட்லண்ட்ஸ் விடுதியில்தான் தங்குவார்.
1984 தேர்தலில் அவர் கோவில்பட்டியில் சட்டமன்ற தொகுதியில் நின்ற கம்யூனிஸ்ட் கட்சி அழகிரிசாமி அவர்களுக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கான மேடையில் ஆதரித்து பேசினார். அப்படி பேசிவிட்டு கோவில்பட்டி பயணியர் விடுதியில் வந்து தங்கும் போது தான் இதய வலி காரணமாக இயற்கை எய்தினார். அச்சமயத்தில் நான் முழுவதுமாக அங்கு இருந்து ஆவண செய்ய வேண்டியதும் நேர்ந்தது. விவசாயிகளுக்காகவே தன் முழு வாழ்வையும் போராட்டத்தில் செலவழித்து பெருமளவில் மக்கள் ஆதரவையும் பெற்ற எளிமையான தலைவர்தான் நாராயணசாமி அவர்கள். ஒரு காலத்தில் விவசாய மக்கள் அனைவரும் அவர் பின்னணியில் திரண்டு நின்றது பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும். இலவச மின்சாரம் மற்றும் விவசாயின் கோரிக்கைகளுக்காக அவர் போராடிய போது அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 48 விவசாயிகள் 1972 முதல் 92 வரை ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்குள் ஆளும் அரசுகளால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவங்களைச் சந்தித்தது தான் தமிழ்நாடு. அதன் பிறகு தான் விவசாயிகளுக்கான இலவச மின்சாரமும் அறிவிக்கப்பட்டது. அது ஒரு மாபெரும் போராட்டமாக இருந்தது என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
அத்தகைய வேளாண் சமூக மக்களுக்கு அவர்களின் உரிமைகளுக்கு துணையாய் நின்று போராடியவருடைய நினைவு நாட்களின் போது இன்றைய அரசியல் தலைவர்கள் ஒரு காலத்தில் அவரது உதவி வேண்டும் என்று கேட்டவர்கள் கூட அவரை மறந்து விட்டு தங்களின் சுயலா அரசியல் வேட்டையில் இன்று நீடிக்கிறார்கள்.
என்ன செய்ய?அப்படியான உத்தமர்களை போராட்டத்தில் இறக்கும்படி வைத்துதான் தமிழ்நாட்டின் சூழ்ச்சி மிக்க சுய லாபமிக்க அரசியலின் அறம்.
அவர் நினைத்திருந்தால் அப்பொழுதே அவருக்கான கூட கோபுரங்கள் மாடமாளிகைகள் அமைத்து தரப்பட்டிருக்கும். ஆனால் விவசாய மக்களின் வேதனைகளை அறிந்த அந்த உத்தமர் தனது கிராமத்தில் தன் வாழ்நாளின் கடைசிவரை ஓட்டு வீட்டில் வாழ்ந்தார். அவர் தன் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டாம் என்று விட்டு கொடுத்தாலும் மின் கட்டணம் கட்ட மாட்டேன் என்று சொல்லி இறுதிவரை பெற்றோமாக்ஸ் அல்லது ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வாழ்ந்தார் என்றால் இன்றைக்கு யாரும் நம்புவார்களா?
ஆகவே அவரின் நூற்றாண்டு நினைவின் பொருட்டு அவர் இறந்த கோவில்பட்டியில் அவருக்கு சிலை வைக்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் உண்மையில் இதை செய்ய வேண்டியது மத்திய அரசுகளும் இந்த மாநில அரசுகளும் தான்.
அதன் அடிப்படையில் ஐயா விவசாயிகளின் உழவர்களின் புனிதர் நாராயணசாமி ஐயா அவர்களின் நினைவாக ஒரு தபால் தலை வெளியிட வேண்டும் என்றும் இதன் மூலம் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் அவரது போராட்டங்கள் அவற்றின் வரலாறுகள் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்த யாவும் இன்று இளம் தலைமுறையினர் வாசிக்க அறிந்து கொள்ள ஏற்ற வகையில் வரலாற்று ஆவணமாகும்படி ஒரு புத்தகத்தை கொண்டு வரவும் முயற்சி எடுத்து இருக்கிறோம்.
ஒடுக்கப்பட்ட விவசாய மக்களின் உரிமைகளுக்காக மிகுந்த வலிமையுடன் போராடிய அவர் புகழ் ஓங்குக! அவருகான நூற்றாண்டு விழாவை சிறப்புற நடத்தி அவரை நினைவு கொள்வோம் ! அவரோடு 1971 முதல் 1984 வரை உழவர் இயக்கத்தில் நெருக்கமாக பயணத்தவன்.
திரு சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் புகழ் ஓங்குக! அவர் வழியில் இன்றைய விவசாயிகளுக்கான வாழ்வுரிமையை மீண்டும் மீட்டெடுப்போம்!
#உழவர்தலைவர்நாராயணசாமிநாயுடு
#cnarayanasamynaidu
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
6-2-2025.
No comments:
Post a Comment